மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
13 minutes ago
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
11 hour(s) ago
ப.வேலுார்:ப.வேலுாரில் சுங்க வசூல் உரிமம் பெற, 'சிண்டிகேட்' அமைத்து குறைந்த தொகைக்கு ஏலம் எடுத்துள்ளதால், டவுன் பஞ்., நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், சுங்க வசூலை டவுன் பஞ்., நிர்வாகமே மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் டவுன் பஞ்.,க்குட்பட்ட காமராஜர் பஸ் ஸ்டாண்ட், வாரச்சந்தை ஆகிய, 2 இடங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சுங்கம் வசூல் உரிமத்துக்கான ஏலம், நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு டவுன் பஞ்., அலுவலகத்தில், தலைவர் லட்சுமி, செயல் அலுவலர் திருநாவுக்கரசு தலைமையில் நடந்தது.இதில், காமராஜர் பஸ் ஸ்டாண்டுக்கான ஓராண்டு உரிமம், 2.36 லட்சம் ரூபாய் என, மிக குறைந்த விலைக்கு ஏலம் விடப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக, காமராஜர் பஸ் ஸ்டாண்ட் சுங்க கட்டண வசூலை, டவுன் பஞ்., நிர்வாகமே மேற்கொண்டது.கடந்தாண்டு வசூல், 3.67 லட்சம் ரூபாய். இதை ஏலத்தொகையுடன் ஒப்பிட்டு பார்த்தால், 1.31 லட்சம் ரூபாய் வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. இதேபோல், வாரச்சந்தை சுங்க கட்டணம் வசூலிக்கும் உரிமம் பெற, 3 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஏலத்தில், 15 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தனர். தற்போது, 8 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளனர்.கடந்த 3 ஆண்டுகளில் காமராஜர் பஸ் ஸ்டாண்ட், வாரச்சந்தை சுங்க வசூல் உரிமம் பெறுவதற்கு நடந்த ஏலத்தில் பங்கேற்றவர்கள், 'சிண்டிகேட்' அமைத்து குறைந்த தொகை ஏலம் கேட்டதால், டவுன் பஞ்., நிர்வாகமே வரி வசூலை கவனித்து வந்தது.தற்போது நடந்த ஏலத்தில், கடந்தாண்டு வசூல் தொகையை விட, மிக குறைந்த தொகைக்கு சுங்க வசூல் உரிமம் வழங்கப்பட்டுள்ளதால், டவுன் பஞ்., நிர்வாகத்துக்கு வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், சுங்க வசூலை டவுன் பஞ்., நிர்வாகமே மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, டவுன் பஞ்., செயல் அலுவலர் திருநாவுக்கரசிடம் கேட்டபோது, ''ஏலம் குறித்து மன்ற கூட்டத்தில் தீர்மானம் வைக்கப்படும். அதன்பின் முடிவு செய்யப்படும்,'' என்றார்.
13 minutes ago
11 hour(s) ago | 1
11 hour(s) ago