உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுதந்திரம், ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்: ஜோ பைடன் எச்சரிக்கை

சுதந்திரம், ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்: ஜோ பைடன் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 'தொழில்நுட்ப தொழில்துறை அதிபர்களின் எழுச்சி ஆபத்தை ஏற்படுத்தலாம். ஜனநாயகம், சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் நிலவுகிறது' என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் அபார வெற்றி பெற்றார். அவர் வரும் ஜனவரி 20ம் தேதி அதிபராக பதவியேற்க உள்ளார். இந்த சூழலில், தனது நிர்வாகத்தில் பணிபுரியும் அதிகாரிகளை எல்லாம் டிரம்ப் நியமனம் செய்து முடித்துவிட்டார்.இந்நிலையில் நிருபர்கள் சந்திப்பில், ஜோ பைடன் கூறியதாவது: எனக்கு மிகுந்த கவலை அளிக்கும் சில விஷயங்கள் குறித்து நான் நாட்டை எச்சரிக்கை விரும்புகிறேன். இது ஆபத்தான கவலை அளிக்க கூடிய விஷயம். அதீத செல்வம், அதிகாரம் கொண்ட சுயநலக்குழு உருவாகி வருகிறது.ஜனநாயகம், சுதந்திரம் உள்ளிட்டவற்றுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். தொழில்நுட்ப தொழில்துறை அதிபர்களின் எழுச்சி ஆபத்தை ஏற்படுத்தலாம். அவர்கள் செல்வந்தர்களை தண்டிக்கவில்லை. இவ்வாறு ஜோ பைடன் தெரிவித்துள்ளார். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளர் எலான் மஸ்க்கை குறி வைத்து பைடன் இவ்வாறு பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அன்பே சிவம்
ஜன 18, 2025 02:53

டாட்டா Bye Bye Good Bye ???


Sivagiri
ஜன 17, 2025 12:18

நல்லவேளை . . . அமெரிக்கா போல மொத்தமாக ஏமாறாமல் , சோனியா ராகுல் பிரியங்கா போன்ற க்ரிப்டோ அர்பன் நக்ஸல்களை ஆரம்பித்திலேயே கண்டுபிடித்து இந்தியர்கள் , தள்ளி வைத்து விட்டார்கள் . . .


nv
ஜன 17, 2025 11:03

அது எப்படி நம்ம Rafool மாதிரியே


Shekar
ஜன 17, 2025 10:18

பைடனுக்கு அரசியல் ஆலோசகர் நம்ம இளவரசர் ராகுல்தானோ அப்படின்னு சந்தேகம் வருது. அதேபோல் ஜனநாயகத்துக்கு ஆபத்து, இங்கே அதானி அங்கே எலான் மாஸ்க். எல்லாமே காப்பி பேஸ்ட் ஆக உள்ளது


Ganapathy
ஜன 17, 2025 10:14

வயசான ராகுலை இப்பவே பாக்குறோம்.


Kasimani Baskaran
ஜன 17, 2025 10:05

பைடன் போன்ற அதி மேதாவி இடதுசாரிகளால் உலகுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும் உண்டு. அவர்களைப் பொறுத்தமட்டில் சுயலாபத்துக்கு முன் எதுவும் நிற்காது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை