மேலும் செய்திகள்
நாஞ்சில் சம்பத்திற்கு பதவி
19 minutes ago
சென்னை: தமிழகத்தில், 2026ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு பணிகளை, வரும் 27ல் துவக்க, வனத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் வனத்துறையால் ஆண்டுதோறும் ஜன., பிப்., மார்ச் மாதங்களில், ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். நடப்பாண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பு, கடந்த பிப்., மார்ச், ஏப்., மாதங்களில் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், 2026ம் ஆண்டுக்கான கணக்கெடுப்பை, வரும் 27, 28ம் தேதிகளில், நீர்நிலைகளில் மேற்கொள்ள வனத்துறை திட்டமிட்டுள்ளது. இது குறித்து, பறவைகள் ஆர்வலர்கள் கூறியதாவது: நடப்பு ஆண்டில், ஆசிய அளவில் நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்பு பணி, தன்னார்வ அமைப்புகள் வாயிலாக, டிச., 27 முதல் பிப்., 28 வரை நடத்தப்படுகிறது. பருவமழை முடிந்து, ஜன., மாதத்தில் தான் நீர்நிலைகளுக்கு பறவைகள் முழுமையாக வருகை தரும். ஆனால், அதற்கு முன்னதாக, டிசம்பர் மாதத்திலேயே, தமிழகத்தில் கணக்கெடுப்பு நடத்துவதால், முழுமையான விபரங்கள் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துஉள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
19 minutes ago