உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை தி.மு.க., மீது பா.ஜ., குற்றச்சாட்டு

அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை தி.மு.க., மீது பா.ஜ., குற்றச்சாட்டு

மதுரை: ''திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் பக்தர்கள் மீது அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை தி.மு.க., அரசு உருவாக்கி உள்ளது,'' என, மதுரையில் பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீனிவாசன் குற்றம்சாட்டினார்.அவர் கூறியதாவது: ஹிந்து அமைப்புகள் எதைச் செய்தாலும் அதை தடுப்பது என தி.மு.க., ஆட்சிக்கு வரும் போதெல்லாம் செய்கிறது.திருப்பரங்குன்றத்தில் பிப்.,4 ஹிந்துமுன்னணி நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., என பல அமைப்புகள் பங்கேற்க உள்ளன. இதற்கு வழக்கம்போல போலீஸ் அனுமதி மறுப்பு, கெடுபிடி உள்ளது. ஆர்ப்பாட்டம் குறித்து பல மாவட்டங்களிலும் போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்கின்றனர். இதனால் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை முருக பக்தர்கள் மீது தொடுத்துள்ளதாக கருதுகிறோம்.ஆர்ப்பாட்டம் தொடர்பான வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி செயல்படுவோம். அதே போல அரசு, கலெக்டர், எஸ்.பி.,யும் கட்டுப்பட வேண்டும். இங்கு போராட்டத்திற்குத்தான் தடை விதித்துள்ளனர். தைப்பூச நேரத்தில் கோயிலுக்கு செல்லும் பக்தர்களிடம் கெடுபிடி காட்டுவது சரியா. பா.ஜ., எதிர்க்கட்சியாக உள்ள கேரளா, மேற்கு வங்கத்தில்கூட அனுமதிக்கின்றனர். இங்கு எந்த ஜனநாயக வழிமுறையையும் அனுமதிப்பதில்லை. தி.மு.க.,வுக்கு ஒரு நீதி. மற்ற கட்சிகளுக்கு ஒரு நீதியா என்றார்.

என்.ஐ.ஏ., விசாரிக்க கோரிக்கை

மதுரை கலெக்டர் சங்கீதாவிடம் பா.ஜ., வழக்கறிஞர் முத்துக்குமார் அளித்த மனு: தமிழகத்தில் தீவிரவாதம் தலைதுாக்கி உள்ளது. என்.ஐ.ஏ., சோதனை, வழக்குகள் பதிவு மூலம் தெரிகிறது. திருப்பரங்குன்றம் மலைமீது 2012ல் வெடிகுண்டு, பேட்டரிகள், மூலப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த மலையின் ஒரு பகுதி தொல்லியல் துறை, மற்றொரு பகுதி ஹிந்து அறநிலையத் துறையால் கண்காணிக்கப்படுகிறது. போலீசாரும் பாதுகாப்பில் உள்ளனர்.இவற்றையும் மீறி சிலர் மலையில் திட்டமிட்டு பச்சை வண்ணத்தை வரைந்துள்ளனர். ஹிந்துக்கள் உணர்வை புண்படுத்துவதாக படிக்கட்டுகளில் அமர்ந்து அசைவ உணவை உண்டனர். காசி விஸ்வநாதர் கோயிலின் புனிதத்தை கெடுக்கும் வகையில் ஆடு, கோழிகளை பலியிடப் போவதாகவும், மலையை சிக்கந்தர் மலை என்றும் குறிப்பிட்டு, வேண்டுமென்றே கலவரத்தை துாண்டும் நோக்கத்துடன் செயல்படுகின்றனர்.இவ்வாறு செயல்படுவோரை கண்டறியவும், இதற்கு மூளையாக செயல்படும் தேச விரோத சக்திகளை சுதந்திரமாக விசாரிக்கவும் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப் பதிவு செய்த வழக்குகள் அனைத்தையும் என்.ஐ.ஏ., அமைப்புக்கு மாற்ற வேண்டும். தொடர்ந்து அசம்பாவிதம் நடப்பதை தடுக்க துணை ராணுவப் படையையும் நியமிப்பதுடன், மலைமேல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி பாதுகாக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Barakat Ali
பிப் 04, 2025 13:14

நாங்க என்ன செஞ்சாலும், யாரை ஆதரிச்சாலும், சனாதனத்தை வேரறுக்கும் முயற்சியில் ஈடுபட்டாலும் ... ஹிந்துக்களே எங்களுக்கு ஓட்டு போடுறாங்க .... அதுவும் தொடர்ந்து ..... முதல்ல ஹிந்துக்களிடம் போயி பேசுங்க .....


ஆரூர் ரங்
பிப் 04, 2025 11:36

தர்ஹா என்பதே இஸ்லாத்துக்கு ஏற்புடையதல்ல. அதுவும் மாற்று மதத்தினரின் வழிபாட்டுக்கு இடைஞ்சலாக தொழுகை நடத்துவதை இறைத் தூதரே ஏற்கவில்லை. மலை முழுவதுமே முருகனுக்கு உடைமை என்பது தீர்ப்பு என்பதால் அந்த தர்ஹாவை மலையிலிருந்து வேறிடத்திற்கு மாற்ற வேண்டும். அரசு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தாலும் மக்களால் நிறைவேற்றப்பட வேண்டும். இந்துக்கள் பொறுத்தது போதும்.


Uuu
பிப் 04, 2025 11:27

Use article 356 thats good


sribalajitraders
பிப் 04, 2025 09:57

பிஜேபி க்கு கலவரத்தை தூண்டி விடுறதே வேலை


Mettai* Tamil
பிப் 04, 2025 12:10

இந்து மத விரோத ஆட்சியில், தமிழ் கடவுள் முருகன் கோயில் புனிதத்தை அழிக்க நினைக்கும் சமூக விரோதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பது தான் பிஜேபி க்கு முக்கியமான வேலை...


AMLA ASOKAN
பிப் 04, 2025 09:33

திருப்பரங்குன்றத்தில் இதுவரையில் இருந்து வந்த ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை, அமைதி ஆகியவைக்கு இந்து முன்னணியின் 4 ஆம் தேதி போராட்டம் ஆபத்தை ஏற்படுத்தும் என்று தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவில் செல்லும் பக்தர்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை, அவர்கள் என்றும் போல் கோவிலில் வழிபட மலை ஏறத்தான் செய்வார்கள். முஸ்லிம்களும் தர்காவிற்கு சென்று தான் வருவார்கள். அரசியலுக்காக ஹிந்துத்வா அமைப்பினர், முஸ்லீம் பகைமையை வலுப்படுத்தவும், DMK ஆட்சியை எதிர்க்கவும், இத்தகு ஆபத்தான யுக்திகளை கையாளுகிறார்கள் . இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் .


Mettai* Tamil
பிப் 04, 2025 12:14

இதையெல்லாம் தமிழ் கடவுள் முருகன் மலை மீது அமர்ந்து கோயிலின் புனிதத்தை அழிக்க நினைத்து பிரியாணி சாப்பிடும் போது சொல்லிருக்கவேண்டும் ....


Barakat Ali
பிப் 04, 2025 14:14

நவாஸ் கனி மத நல்லிணக்கத்தை உண்டாக்கவா அங்கே போனாரு ????


sridhar
பிப் 04, 2025 08:59

2000 ஆண்டுகளாக அங்கே இஸ்லாமியர்கள் வழிபட்டார்கள் என்று சொன்னாலும் திமுக சொம்புகள் நம்பும்.


pmsamy
பிப் 04, 2025 08:51

அப்போ அண்ணாமலை டம்மி பீசா?


பேசும் தமிழன்
பிப் 04, 2025 08:58

அண்ணாமலை அல்ல உங்க ஆளு தான் டம்மி பீஸ்... பயம் வந்து விட்டது.. எங்கே தமிழர்கள்... இந்துக்கள் எல்லாம் விழித்து கொண்டு விட்டார்கள் என்று !!!


Mettai* Tamil
பிப் 04, 2025 12:17

நீங்க முட்டு கொடுப்பது தான் டம்மி பீசு ....


G Mahalingam
பிப் 04, 2025 08:38

திமுக ஆட்சியை கோர்ட் எவ்வளவு அடித்தாலும் குட்டினாலும் எருமை மாடு போல அடி வாங்கி சுரணையே இல்லாமல் இருக்கிறது. இதற்கு இந்த ஆட்சி தன்னை தானே மாய்த்து கொள்ளலாம்.


raja
பிப் 04, 2025 08:25

இந்து விரோத ஆட்சி நடத்தும் கேடுகெட்ட திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்ட குடும்பத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அடித்து விரட்டவிட்டால் தமிழ் இந்துக்கள் தமிழகத்தில் அகதிகளாக வாழ வேண்டிவரும் நாள் வெகு தொலைவில் இல்லை....


Vijay
பிப் 04, 2025 08:03

2026ல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால். இப்படி தான் நாம் பாட வேண்டும். சிக்கந்தர் மலையில் நீ சிரித்தால் முருகா. அக்பர் மலை மீது எதிரொலிக்கும். அன்வர் ஊரிலே வேலாடும் நம் திருகுரான் பாடியே கடலாடும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை