உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ., -அ.தி.மு.க., கூட்டணி 101 சதவீதம் வெற்றி பெறும்

பா.ஜ., -அ.தி.மு.க., கூட்டணி 101 சதவீதம் வெற்றி பெறும்

சேலம்: ''தமிழகத்தில், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவே, பா.ஜ.,வுடன், அ.தி.மு.க., கூட்டணி அமைத்துள்ளது,'' என, த.மா.கா., தலைவர் வாசன் கூறினார்.காங்கிரஸ் மூத்த தலைவரான, மறைந்த எம்.பி.சுப்ரமணியம் நுாற்றாண்டு விழா, சேலத்தில் நடந்தது. அவரது படத்துக்கு மரியாதை செலுத்திய, த.மா.கா., தலைவர் வாசன் அளித்த பேட்டி:ஆந்திராவில், 'மா'விற்கு கிலோ 12 ரூபாய் விலை நிர்ணயித்து, அம்மாநில அரசு, 4 ரூபாய் மானியம் வழங்குவதுபோல, தமிழக அரசும் வழங்க வேண்டும். டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வில், தி.மு.க., பற்றி கேள்வி இடம்பெற்றது அநாகரிகத்தின் உச்சம். தமிழகத்தில், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவே, பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி அமைந்துள்ளது. தோல்வி பயத்தால், ஆட்சியாளர்கள் குழப்பம் ஏற்படுத்த பார்க்கின்றனர். ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு கூட்டணி ஆட்சி என்ற எண்ணம் மேலோங்கி, அது பற்றி பேசப்படுகிறது. மக்கள் விரோத தி.மு.க., அரசை அகற்றுவதே ஒரே நோக்கம் என்பதால், தேசிய ஜனநாயக கூட்டணி, 100 சதவீதம் வெற்றி பெறும். தி.மு.க., ஆட்சியை அகற்ற விரும்பும் கட்சிகள் இணைந்தால், இந்த வெற்றி, 101 சதவீதமாக மாறும். நான்கு ஆண்டு தி.மு.க., ஆட்சியில், சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

முருகன்
ஜூன் 29, 2025 16:59

இதை சொல்வதற்கு ஒரு தகுதி வேண்டாமா? மக்கள் ஆதரவு இல்லாத இவர் எல்லாம்.....


Santhakumar Srinivasalu
ஜூன் 29, 2025 13:20

ஜால்ரா அடித்தால் தான் இவருக்கு ஏம்பி/எம்ல்ஏ பதவி கிடைக்கும்!


venugopal s
ஜூன் 29, 2025 11:22

அப்படியே அவர்கள் வெற்றி பெற்றாலும் உங்களுக்கு ஏதாவது போடுவார்களா?


Oviya Vijay
ஜூன் 29, 2025 10:08

நான் எனது முந்தைய பதிவில் உண்மையைக் கூறியிருக்கிறேன் என்பதை விட அவரது தந்தை காலத்தில் உருவாக்கிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் என் தந்தை மாவட்ட சர்க்கிள் கமிட்டி தலைவராக இருந்தவர் என்ற அனுபவத்தில் எழுதியிருக்கிறேன்... இந்நேரம் அவரது தந்தை மூப்பனார் அவர்கள் மட்டும் உயிரோடிருந்திருந்தால் தற்போது பாமகவில் நடந்து கொண்டிருக்கும் யுத்தத்தை விடவும் மிகப்பெரிய அளவில் வாசனிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்திருப்பார்... தந்தையால் உருவாக்கப்பட்ட அருமையான கட்சியை வாசன் தடம் புரளச் செய்து விட்டார்...


ஜெய்ஹிந்த்புரம்
ஜூன் 29, 2025 09:16

வெற்றிலை சீவல் பன்னீர் புகையிலைக்கு அரசு மானியம் தருமா?


பேசும் தமிழன்
ஜூன் 29, 2025 08:56

கூடா நட்பு கேடாய் முடியும் என்று கலைஞர் அவர்கள் சொன்ன கான் கிராஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு... நீங்கள் பதவி சுகத்தை அனுபவிக்கலாம்... ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட உடந்தையாக இருந்தீர்கள்.... அது மட்டும் சரியா ??


vivek
ஜூன் 29, 2025 08:13

கோவில் தேங்காய் உடைத்தால் முதலில் வருபவர் போல பிஜேபி கருத்துக்கு முதலில் வந்த ஒரு மொக்கை கருத்து போடும் உன்னை பார்த்த சிரிப்பு வருது


Oviya Vijay
ஜூன் 29, 2025 07:18

இவரைப் பார்க்கையிலே எனக்கு ஒருவிதத்தில் பொறாமை ஏற்படுவதும் உண்டு.. ஏனெனில் ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி என்பார்களே அது இவர் தான். வாழ்க்கையில் கஷ்டம் என்பதே தெரியாமல் வளர்ந்த பிள்ளை. 1996 தேர்தலில் காங்கிரஸ் மேலிடத்தின் முடிவை எதிர்த்து மிக மிகக் குறுகிய காலத்தில் தனியாக ஒரு கட்சியைத் தொடங்கி அதற்காகக் கிடைத்த சைக்கிள் சின்னத்தை மக்கள் மனதில் பதிய வைத்து தனக்கு விருப்பமான கூட்டணியைத் தேர்வு செய்து மாபெரும் வெற்றி பெற்றுக் காட்டிய அசாத்திய திறமை படைத்த மூப்பனார் என்ற மாமனிதரின் மகன். பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு மானமிழந்து நிற்கிறார்... ராஜ்யசபா சீட் மூலமாக பதவி சுகத்தை அனுபவிக்கிறார்.


முக்கிய வீடியோ