உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ., கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு இன்று அறிவிப்பு

பா.ஜ., கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு இன்று அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் பா.ஜ., கூட்டணியில், த.மா.கா., புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் உள்ளன.அந்த கூட்டணியில், அ.ம.மு.க., மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு கடந்த வாரம் இணைந்தன. பா.ம.க., நேற்று (மார்ச் 19) இணைந்தது. பா.ஜ., - பா.ம.க.,வுக்கு, 10 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நேற்று கையெழுத்திட்டனர்.மற்ற கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு செய்வதற்காக, சென்னை கமலாலயத்தில், பா.ஜ, முக்கிய நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நேற்றிரவு நடந்தது. அதில், அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், அ.ம.மு.க., மற்றும் பன்னீர்செல்வத்தின் உரிமை மீட்புக் குழுவிற்கான தொகுதிப் பங்கீடு இன்று நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Vathsan
மார் 20, 2024 14:24

பாஜகவின் வாரிசு கூட்டணி மூப்பனார் பையன், ராமதாஸ் பையன், MR ராதா மருமகன், சசிகலா பையன், குமரி மகள், OPS பையன் வெற்றி பெற வாழ்த்துக்கள்...


Oviya Vijay
மார் 20, 2024 12:09

ஓ... ஒரு வழியா கூட்டணி இறுதி ஆயாச்சா???


Srprd
மார் 20, 2024 11:36

Biggest mistake of BJP is to allot 10 seats to PMK. Annamalai has some enemies in his own party, who dont want the BJP to do well in TN.


jayvee
மார் 20, 2024 10:14

பாமகவை கூட்டணியில் சேர்த்துதான் BJP தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற கட்டாயமில்லை.. ஆனாலும் அதிமுக இந்த கட்சியுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டு இரண்டாவது இடதுகூட வந்துவிடக்கூடாது என்ற நல்ல எண்ணம்தான்..


Oviya Vijay
மார் 20, 2024 10:12

மிச்சர் பாய்ஸ் கூட்டணியோட தொகுதிப் பங்கீடுன்னு சொல்லுங்க... பேஷ்... பேஷ்... ரொம்ப நன்னாயிருக்கு...


Ramanujadasan
மார் 20, 2024 11:02

இது எவ்வளவோ மேல் .


Ramanujadasan
மார் 20, 2024 12:04

போதை பொருள் மற்றும் சாராய பாய்ஸ் கூட்டணி க்கு


செந்தமிழ் கார்த்திக்
மார் 20, 2024 10:04

வாரிசு அரசியல் கூட்டணி என்ற பாஜக கூட்டணி கட்சிகள் அனைத்தும், டெபாசிட் பணத்திற்கு இன்சூரன்ஸ் இருந்தால் போட்டு வச்சிக்கோங்க. அப்பறம் தேர்தல் ஆணையம் பணத்தை திருப்பி தரலைன்னு மண்ணுல விழுந்து அழ கூடாது.


Ramanujadasan
மார் 20, 2024 11:04

விடுங்க கார்த்திக், டெபாசிட் பணம் பணால் போகிறது பிசாத்து காசு , நம்மக்கு கஞ்சா, சார்ய பணம் இருக்கிறது என்று மனதை ஆறுதல் படுத்தி கொள்ள இது என்ன கஞ்சா சாராய தீய முக கூட்டணியா ? உழைத்து சம்பாரித்த காசில் டெபாசிட் கட்டுவோர் கூட்டம்


செந்தமிழ் கார்த்திக்
மார் 20, 2024 14:44

அங்க உழைத்தவர் யாருன்னு மேளா பாத்து சொல்லுங்க பாப்போம். ? ஹா ஹா ஹா


செந்தமிழ் கார்த்திக்
மார் 20, 2024 10:02

இவனுங்க வேற, கூட்டணி அது இது என்று காமெடி பண்ணிக்கிட்டு. அடேய் அதெல்லாம் தனிநபர் கட்சி, சொன்ன புரிஞ்சிக்கோங்க.


R GANAPATHI SUBRAMANIAN
மார் 20, 2024 12:42

கட்சிக்கு இவ்வளவு முட்டு குடுத்தாலும், ரூவா 200 தான் கடைசியில்.


Raja Vardhini
மார் 20, 2024 09:49

பாவம் பா.ம.க... அண்ணாமலையால் பி.ஜே.பி மட்டுமல்ல.... பா.ம.கவும் முட்டுசந்துக்கு போய்விட்டன.


vijai seshan
மார் 20, 2024 11:20

அவரா நீ நீ


R GANAPATHI SUBRAMANIAN
மார் 20, 2024 12:45

திராவிடனா இருந்தா இப்படியெல்லாம் யோசிக்க தோணுவது நியாயம் தான்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி