உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: பா.ஜ., கூட்டணி புறக்கணிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: பா.ஜ., கூட்டணி புறக்கணிப்பு

சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., கூட்டணியும் புறக்கணிப்பதாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிவித்து உள்ளார்.ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்.,5 ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு தி.மு.க., சார்பில் சந்திரகுமார் களமிறங்கி உள்ளார். இந்த தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வும், தே.மு.தி.க.,வும் புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளன.இந்நிலையில், இத்தொகுதியில் போட்டியிடுவது குறித்து பா.ஜ., நிர்வாகிகளுடன் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vawsc4sg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதன் பிறகு அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் நடந்து வரும் மக்கள் விரோத ஆட்சியைப் பார்த்து வருகிறோம். எல்லா துறைகளிலும், ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, வேலைவாய்ப்பின்மை, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், அரசு அதிகாரிகள், போலீசார் என யாருக்குமே பாதுகாப்பின்மை என தமிழகம் ஒரு இருண்ட காலத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது.அம்பேத்கர் வழங்கிய அரசியலமைப்பு சட்டத்திற்கு நேர் எதிரக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது தி.மு.க., அரசு. இந்த ஆட்சியின் அவலங்களைத் தினந்தோறும் சகித்துக் கொண்டுள்ள மக்கள், இது திராவிட மாடல் இல்லை , Disaster மாடல் என உரக்கச் சொல்லத் துவங்கிவிட்டனர்.ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை, நடைபெறவிருப்பது, இடைத்தேர்தலுக்கான இடைத்தேர்தல். கடந்த 2023ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலின் போது, பொது மக்களை பட்டியில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தியதைப் பார்த்தோம். ஆளுங்கட்சி என்ற அதிகார மமதையில் தி.மு.க., தேர்தல் விதிமுறைகளை எல்லாம் மீறிச் செயல்பட்டதை நாம் அனைவருமே எதிர்கொண்டோம்.வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல், தி.மு.க.,வை முழுமையாக அகற்றவிருக்கும் தேர்தல். அந்த இலக்கை நோக்கியே தே.ஜ., கூட்டணி தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் நடுவே, இடைத்தேர்தலில் மீண்டும் கால்நடைகளைப் போலப் பொதுமக்கள் அடைத்து வைக்க தி.மு.க.வை அனுமதிக்க தே.ஜ., கூட்டணி விரும்பவில்லை. மக்கள் நலன் விரும்பும் தே.ஜ., கூட்டணிக் கட்சி தலைவர்கள் அனைவரும் நன்கு ஆலோசித்த பிறகு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி புறக்கணிப்பதாக முடிவெடுத்துள்ளோம். 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை அகற்றி மக்களுக்கான தே.ஜ., கூட்டணியின் நல்லாட்சியை வழங்குவதே எங்கள் இலக்கு. இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 69 )

Ray
ஜன 19, 2025 01:51

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளில் NPP TDP JDU AINRC என்று யாருமே போட்டியிடாமல் போனால் மக்கள் கதி என்னாவது பொங்கல் இனாம்தான் இல்லையென்றால் அண்ணாமலை சொல்வதுபோல இடைத்தேர்தலில் இடைத்தேர்தல் கூட கைவிரித்தால் எப்படி டாஸ்மாக் கோவிந்தா


K.n. Dhasarathan
ஜன 15, 2025 17:33

பொய் ஜே பி கூட்டணி இடைத்தேர்தலை புறக்கணித்தார்களாம், எப்படியோ மக்கள் இவர்களை நோட்டாவுக்கும் கீழாக கொண்டுவந்துவிடுவார்கள் என்பதை மோப்பம் பிடித்து, ஓட்டம் பிடிக்கிறார்கள், அதுவும் தேசிய கட்சியாம், கொஞ்சம்கூட வெட்கமேயில்லை, வாயிற் கிழிய பேச மட்டும்தான் தெரியும் இவர்களுக்கு, தமிழகம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டபோது ஒரு நிவாரண நிதி கூட வாங்கிக்கொடுக்க துப்பில்லாத மாநில பொய் ஜே பி, போட்டியிட்டு தோற்றால் என்ன தப்பு, எத்தனையோ தலைவர்கள் தோற்று பிறகு வெண்றதில்லையா ? அந்த தெம்பு இல்லாத, திராணி இல்லாத பொய் ஜே பி யை மக்கள் புறக்கணத்துவிட்டார்கள் என்பதே உன்மை.


Jay
ஜன 13, 2025 11:16

கூட்டணிக் கட்சியின் சார்பாக வேட்பாளர் இருக்கும்போதே சென்ற தேர்தலில் 300 கோடி செலவு செய்தவர்கள் தற்போது சொந்த கட்சி வேட்பாளருக்கு எவ்வளவு கோடி வேண்டுமானாலும் செலவு செய்ய தயாராக இருப்பார்கள். ஜனநாயகத்தைக் காப்பாற்ற எதிர்க்கட்சிகள் அனைத்தும் பின்வாங்குவதே சரி. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு சென்ற இடைத்தேர்தலில் ரூ 50,000 ஒரு குடும்பத்திற்கு கிடைத்தது. எதிர் கட்சிகள் பின்வாங்குவதால் ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளர்கள் பட்டுவாடா இன்றி ஏமாற்றம் அடைவார்கள்.


Ray
ஜன 17, 2025 02:48

அடுத்தவன் ஜெயித்தால் பணம் விளையாடியது எனலாம் மோடி வென்றால் CREDIT GOES TO EVM / தேர்தல் கமிஷன் புண்ணியம் Jay ஜெயித்தால் மக்கள் அமோக ஆதரவு மெனக்கட்டு போயி பிஜேபிக்கு ஒட்டு போடறவனை விட நோட்டாவுக்கு போட வாக்கு சாவடிக்கு ஓடறவனை என்னான்னு சொல்றது


Mahadevan Ramanan
ஜன 13, 2025 06:59

Well said brother.


MUTHUKUMAAR
ஜன 13, 2025 05:09

திரு சீமான் அவர்களே, நீங்கள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நின்று அதிமுக,தேமுதிக,பாஜக,தவிக்க மற்றும் பாமக ஆகிய கட்சிகளின் ஆதரவு பெற்று ஆளும்கட்சியின் அராஜகத்திற்கெதிராக போட்டியிட்டு வெற்றி வாகை சூடும்.நன்றி


AMLA ASOKAN
ஜன 12, 2025 23:44

இன்றைய அரசியலில், கட்சிகள் தேர்தலை புறக்கணிக்கின்றன என்பதன் சரியான பொருள் புறமுதுகு காட்டி ஒளிந்து கொள்கின்றன என்பது தான். அதை மறைக்க ஆலோசனை கூட்டம், விளக்க உரை, விந்தை அறிக்கை என வெளியிடுவார்கள். மக்கள் விரும்பியும், தேர்ந்தெடுத்தால் மட்டுமே MLA ஆக முடியும். தேர்தல் முடிந்த உடனே மக்களை காசுக்கு விலைபோன முட்டாள்கள் எனவும் வசை பாடுவார்கள். ஆனால் இவர்கள் தான் மக்களை கேவலமாக நினைக்கும் முட்டாள்கள்.


Sakthi
ஜன 12, 2025 21:50

வைகுந்தேஸ்வரன் திகள் ஓவியன் டுறுவேசன் இந்த பெயரில் கமென்ட் போடும் மிஷனரி கொத்தடிமைகளை தேச பக்தர்கள் யாரும் கண்டுகொள்ள வேண்டாம். அவனிகலகவே கூவி விட்டு அடங்கி விடுவார்கள். பதர்கள்


V வைகுண்டேஸ்வரன்
ஜன 12, 2025 21:08

அந்த தொகுதி மக்களில் திமுக வாக்காளர்கள் தவிர மற்ற யாரும் வாக்குச் சாவடிகள் பக்கமே வராமல் Gok சொல்ற மாதிரி புறக்கணிச்சுடுங்கோ. எல்லோருக்கும் அது தான் நல்லது.


Seekayyes
ஜன 13, 2025 05:33

ஏன் குண்டு தேர்தல நடத்தனும், பேசாம அந்த சந்திர குமார்தான் ஜெய்ச்சாருனு அறிவிச்சிட்டு போக வேண்டியதுதானே.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 12, 2025 21:06

ஈரோடு தொகுதி மக்களுக்கு சட்டமன்றத்தில் பிரதிநிதி வேண்டுமல்லவா? போட்டி போட திராணி இல்லாமல் இரண்டு கூட்டணிகள் புறக்கணித்தால் வாக்காளர்களும் புறக்கணிக்க வேண்டுமா? எதிர்க்கட்சிகளுக்கு தைரியம் இல்லாததை மறைத்து, வாக்காளர்களுக்கு சூடு சொரணை வெக்கம்.. இல்ல என்று வெறுப்பு அரசியல் பேசி, வன்மம் கக்கி, எல்லோரையும் அநாகரிகமாக விமர்சனம் செய்வீர்களா?


GoK
ஜன 12, 2025 20:49

அந்த தொகுதி மக்கள் இந்த தேர்தலை புறக்கணித்தால் சோத்துல உப்பு போட்டு சாப்படறவங்க, சூடு சொரணை வெக்கம் மாணம் இருக்குறவங்க அப்படின்னு அர்த்தமாவும் அதுதான் ஆவாதே..


kannan
ஜன 14, 2025 16:00

மக்கள் புறக்கணிக்காவிட்டால் புறக்கணக்கித்த கட்டிகளுக்கு தமிழ்நாட்டில் வேலையில்லை என்று பொருளா?


சமீபத்திய செய்தி