உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பஹல்காம் தாக்குதலுக்கு நமது அரசு நிச்சயம் பதிலடி கொடுக்கும்: அண்ணாமலை

பஹல்காம் தாக்குதலுக்கு நமது அரசு நிச்சயம் பதிலடி கொடுக்கும்: அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பஹல்காம் தாக்குதலுக்கு நமது அரசு நிச்சயம் பதிலடி கொடுக்கும் என்று தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.இதுகுறித்து அவர் அளித்த பேட்டி விவரம்; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ylq1qr6a&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஐ.எஸ்.ஐ., பின்னணியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. நிச்சயமாக இதை கண்டிக்கின்றோம் என்று சொல்வதை விட நம்முடைய அரசு கொடுக்கக்கூடிய பதிலடி கூட இதில் முக்கியமாக இருக்கப் போகிறது.அதனால் இந்த நேரத்தில் எல்லா மக்களும் அமைதியாக இருக்க வேண்டும். சோசியல் மீடியாவில் நிறைய விஷயங்களை பார்க்கிறோம். எல்லாரும் ஆக்ரோஷமாக பதிவு போடுறாங்க. அது தேவையில்லாதது.அரசு, அரசு இயந்திரங்கள் என்ன செய்யணுமோ, தகுந்த நேரத்தில் அதை செய்வாங்க. நேற்றில் இருந்தே நாம் பார்க்கின்றோம். தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தொடங்கி விட்டதாக ஜம்மு காஷ்மீர் கவர்னர் சொல்லி இருக்கிறார். அதனால் அரசு நிச்சயமாக இதற்கு எந்த நேரத்தில், எப்படி பதிலடி கொடுக்க வேண்டுமோ, கொடுப்பார்கள். அதற்காக மக்கள் நாம் செய்யக்கூடிய வேலையை நிறுத்தக்கூடாது. எல்லோரும் நம் வேலையை செய்ய வேண்டும். காஷ்மீர் போறவங்க போகணும். நாளை நான் காஷ்மீர் போவதாக புக்(டிக்கெட்) பண்ணி இருக்கிறேன். வர்ற ஜூலை மாதம் அமர்நாத் போகிறேன். போகணும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக போக வேண்டும்.கோழைத்தனமாக தாக்குதலுக்கு எல்லாம் பயந்து நாம் நம்முடைய வேலையை நிறுத்தினால் தான் அந்த தீவிரவாதிகளுக்கு நாம் கொடுக்ககூடிய பயமாக இருக்கணும். அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று அரசியல் பேசுபவர்கள் பேசிக் கொண்டே இருப்பார்கள். பிரதமர் மோடி 3வது முறையாக பதிவு ஏற்ற போது 2024 ஜூன் 9ம் தேதி, பதவியேற்ற அன்றைக்கே காஷ்மீரில் ஒரு பயங்கரவாத அட்டாக் இருந்தது. 8 நிமிஷம் கழிச்சி, அன்னிக்கு.ஏன் என்றால் பாகிஸ்தானை பொறுத்தவரைக்கும், ஐஎஸ்ஐ-யை பொறுத்த வரைக்கும் இந்தியாவில் அமைதியை வந்து குலைக்கணும். அச்சுறுத்தலை ஏற்படுத்தணும் என்பதற்காக தொடர்ந்து நடத்துறாங்க. காஷ்மீரை பொறுத்த வரைக்கும் கட்டுக்குள்ள தான் இருக்கு. இந்த துரதிருஷ்டவசமான நிகழ்வில் இந்தியர்கள் எல்லாரும் ஒன்றாக இருக்கணும். இதிலே நமது தலைவர்கள் எல்லாரும் அரசியல் பேசுவது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.பஹல்காம் தாக்குதல் நடைபெற்ற போது முதல்கட்ட சிகிச்சைக்காக அங்குள்ளவர்தான் குதிரைகளில் வந்தனர். நாம் திரும்ப திரும்ப சொல்வது பயங்கரவாதிகளின் மனநிலை. நமக்குள் நாம் இஸ்லாம், ஹிந்து எல்லாம் ஒன்றுதான் என்று நினைத்தாலும் கூட, பயங்கரவாதிகள் மதத்தின் அடிப்படையில் தான் பயங்கரவாதம் செய்யறாங்க. அதை தான் நாம் கண்டிக்கின்றோம்.நிச்சயமாக, பயங்கரவாதத்தை பயங்கரவாதமாகத்தான் பார்க்கிறோம். அரசு இயந்திரங்கள் நிச்சயமாக இதற்கு பதிலடி கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. 2,3 நாட்களாக பாகிஸ்தான் ராணுவ தளபதி, காஷ்மீர் எங்களின் பகுதி என்று பேசி இருக்கிறார். காஷ்மீரை சாராதவர்கள் எல்லாம் காஷ்மீருக்குள் வந்து குடியரிமை பெற்றிருக்கின்றனர் என்ற தவறான பொய்யுரையை பரப்புகின்றனர்.அவர்களுக்கு இந்தியா வளர்வது பிடிக்கலை, அமைதியாக இருப்பது பிடிக்கலை, இந்தியாவின் முக்கியமான நேரத்தில் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி 4 நாள் பயணமாக இங்கு வந்திருக்கிறார். பிரதமர் சவுதி அரேபியாவுக்கு 2 நாள் பயணமாக போயுள்ளார். பயங்கரவாதிக்கும், பாதுகாப்புப் படைக்கும் சண்டை நடக்கத்தான் செய்யுது. அதற்கு காலம், காலமாக பாதுகாப்புப் படை பதிலடி கொடுக்கிறாங்க. முதல் முறையாக ரொம்ப நாட்கள் கழித்து, அப்பாவி மக்களை, சுற்றுலா பயணிகளை தாக்குகிறார்கள் என்றால் அதை யார் ஏற்றுக் கொள்வார்கள். யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதில் என்ன சித்தாந்தம் இருக்கிறது. ஜீரோ சித்தாந்தம். கொலை செய்வது மட்டுமே சித்தாந்தமாக வைத்துக் கொண்டு 26 பேரை கொன்றிருக்கிறார்கள். இதில் ஒரு சித்தாந்தமும் இல்லை. அப்பாவியை கொல்லணும், இதன் மூலம் ஒரு ஸ்டேட்மெண்ட் சொல்லணும். இதை மட்டுமே முழு நேர வேலையாக வைத்திருக்கக்கூடிய தீவிரவாதம் வேரறுக்கப்பட வேண்டும். நிச்சயமாக நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கு. உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்கு தான் இருக்கிறார். இறந்து போனவங்களுக்கு மரியாதை, அஞ்சலி செலுத்தி இருக்கிறாங்க. அதனால் நமது அரசுக்கு எல்லாம் எந்த பயமும் இல்லை. நம்முடைய நோக்கம் எல்லாம் சாதாரண பொதுமக்கள் எல்லாம் பாதுகாப்பு இல்லாம சில இடத்தில் இருக்கிறாங்க.நான் எந்த அமைச்சராகவும் ஆகவில்லை. இங்கு தான் இருக்கேன், உங்களுடன் தான் இருக்கேன். நம்முடைய அரசு, நிச்சயமாக ஒரு கடுமையான பதிலடி கொடுக்கும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கு. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Narayanan Muthu
ஏப் 23, 2025 20:10

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் நடந்திருந்தால் இவரின் கருத்து இப்படித்தான் இருக்குமா?


vivek
ஏப் 23, 2025 20:22

கொத்தடிமை கிறுக்கு


Raj S
ஏப் 23, 2025 22:10

ஜம்மு, காஷ்மீர்ல ஆளுவது பிஜேபி கிடையாது...


Muralidharan S
ஏப் 23, 2025 19:39

எத்தனை நாட்கள் இன்னும் பாகிஸ்தானை பொறுத்துக்கொண்டு, இப்படியே பேசிக்கொண்டே இருப்போம்.. என்றைக்கு நாம் ஒரு இஸ்ரேலை போல புகுந்து அடித்து நொறுக்கி பாகிஸ்த்தான் ஆக்ரமிப்பு பகுதியை மீட்டு நமது ராணுவ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவோம்... பாஜகவை மக்கள் தேர்ந்து எடுத்ததே உறுதியான இறுதியான முடிவு எடுத்து, 60 வருட கான்-cross விட்டு சென்ற கழிவுகளை அகற்றத்தான்.... பாகிஸ்தானை ஒடுக்கத்தான்... கான்-cross மற்றும் திராவிஷா ஊழல்வாதிகளை ஒழிக்கத்தான்.. 3 ஆவது முறை பாஜக ஆட்சி... இந்த முறையும் செய்யவில்லை என்றால், ஏற்கனவே கொஞ்சம் நம்பிக்கை இழந்து இருக்கும் மக்கள் முழுவதும் நம்பிக்கை இழந்து விடுவார்கள்.. பாஜக விழித்துக்கொள்ளவில்லை என்றால், நமது தேசம் கழிவு-கட்சிகளின் பிடிக்குள் மீண்டும் சென்றுவிடும்.. இப்பொழுதே காஷ்மீர், தமிழகம், மேற்குவங்கம், கேரளா மாநிலங்கள் முழுவதுமாக தேசிய உணர்விலிருந்து / தேசிய நீரோட்டத்தில் இருந்து / தேசிய சிந்தனையில் இருந்து வழி தவறி சென்றுவிட்டது - ஆட்சியாளர்களின் ஒட்டு வங்கி அரசியலால். இப்படியே போனால்... 2047 இல் இந்திய வல்லரசு என்பதற்கு பதிலாக , 2047இல் "தீவிரவாத சக்திகளின் முழுக்கட்டுப்பாட்டில் நாடு சென்றுவிடுமோ என்ற அச்சம் உணர்வு தேசிய நலன் கருதும் பொதுமக்களுக்கு இப்பொழுதே ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது. இதை பாஜக உணர்ந்து கொள்ளாவிட்டால்... அழிவு பாஜகவிற்கு மட்டும் இல்லை.. நமது பாரத தேசத்திற்க்கே....


Raja
ஏப் 23, 2025 19:33

அண்ணாமலை வருகைக்காகவும், அவரது வழிகாட்டலுக்காகவும் மோடி, ராஜ்நாத்சிங், அமீத்ஷா ஆகியோர் காத்திருப்பு... அண்ணாமலை அதிரடிக்காக இந்திய மக்கள் 140 கோடி பேரும் காத்திருப்பு...


J.Isaac
ஏப் 24, 2025 08:53

அடுத்த பிரதமர் அண்ணாமலை


திருஞான சம்பந்த மூர்த்தி தாச ஞானஸ்கந்தன்
ஏப் 23, 2025 19:27

காரணம் சற்றே சிந்திக்க முடிந்த எந்த பாமரனுக்கும் தெரியும் சொல்லத்தான் முடியாது இது ஒரு பின்விளைவு. மந்திரிக்கழகு வரும் பொருள் உரைத்தல் என்றார்கள். இன்றோ வரும் பொருளில் மட்டுமே கவனமெல்லாம். அரசியல் என்பதே வியாபாரமாகி ராஜ தந்திரம் அருகிப் போனது எனலாம்.


சந்திரசேகரன்,துறையூர்
ஏப் 23, 2025 20:00

பெயரை ஏன் இந்த நீட்டலோடு நிப்பாட்டிக்கிட்டு... இன்னும் நாலஞ்சு சேர்த்து போட வேண்டியதானே...?


Barakat Ali
ஏப் 23, 2025 19:05

2014 முதல் ஆயுதக்குவிப்பு, கப்பற்படை பலம் அதிகரித்தல், ரஃபேல் இறக்குமதி எல்லாம் செய்து கொண்டு வருகிறோம் .... முப்படைகளையும் பலப்படுத்தியுள்ளோம் .... ஆயுதங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ப்ரஹ்மோஸ் ஏவுகணையை ஏற்றுமதியும் செய்து வருகிறோம் .... இவ்வளவு இருந்தாலும், நமது ஒவ்வொரு அரசியல்வாதிகளும் சொல்லும் ஒரு ரெடிமேட் பதில் .... சுண்டைக்காய் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்போம் என்று ..... காங்கிரஸோ, பாஜகவோ எந்த அரசு ஆட்சி செய்தாலும் நம் மக்களைக் காப்பாற்றுவது இறைவன் மட்டுமே ..... அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் அல்ல ....


அப்பாவி
ஏப் 23, 2025 18:57

நைனாவை யாரும் கேள்வி கேக்கலையா?


thehindu
ஏப் 23, 2025 18:55

நமது அரசு இந்தியாவில் இல்லை . இந்து மதவாத அரசு அந்நிய எடுபிடி அரசுதான் உள்ளது


ramesh
ஏப் 23, 2025 18:13

நாட்டில் இந்த மத தீவிர வாதிகளும் நக்சலைட் களும் அழிக்கப்பட வேண்டியவர்கள்


ramesh
ஏப் 23, 2025 18:11

இந்த தீவிரவாதிகளை பிடித்து சிறையில் அடைப்பது மேலும் பிரச்னையை வளர்க்கும் .இவர்கள் மீது இந்தியா ராணுவம் கடுமையான நடவடிக்கை எடுத்து அழிக்கவேண்டும் . இந்த நடவடிக்கையால் மற்றவர்களுக்கும் தீவிர வாதி ஆகும் எண்ணம் சிறிதும் வரக்கூடாது


K.n. Dhasarathan
ஏப் 23, 2025 17:52

மிக மோசமான, இழிவான, பயங்கரவாத முட்டாள்களின் தாக்குதல். ஆனால் நமது உளவுத்துறை என்ன செய்கிறது ?


SANKAR
ஏப் 23, 2025 18:19

same as it did during Pulwama attack


vivek
ஏப் 23, 2025 18:23

நீ வாங்கும் 200 ரூபாய்க்கு இந்த கேள்வி அதிகம் கொத்தடிமயே .....


Narayanan Muthu
ஏப் 23, 2025 20:08

எதிர் கட்சிகளை உடைக்கும் அமித்ஷாவுக்கு பல்லக்கு தூக்கிகொண்டுள்ளது.


ramesh
ஏப் 23, 2025 21:29

என்ன விவேக் தாங்கள் 200 ரூபாய்க்காக கொத்தடிமையாக இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டீர்களே


V Venkatachalam
ஏப் 23, 2025 23:01

கோவையில் வெடித்தது குண்டு இல்லை சிலிண்டர் தான் என்று கண்டுபிடித்தது நம்ம உளவுத்துறை தானே.‌அதை பாராட்டாமல் ஸ்டாலினை கேள்வி கேக்குற அளவுக்கு உமக்கு துணிச்சல் இருக்கே.. உமக்கு பாராட்டுக்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை