உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்று முதல் பா.ஜ., பட்ஜெட் விளக்க கூட்டம்

இன்று முதல் பா.ஜ., பட்ஜெட் விளக்க கூட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாகக் கூறி, தி.மு.க., சார்பில் மாநிலம் முழுதும் கடந்த சனிக்கிழமை கண்டன பொதுக்கூட்டங்கள் நடந்தன. சென்னை அடுத்த ஆவடியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசு மீது குற்றம்சாட்டி பேசினார். இதேபோல், மற்ற மாவட்டங்களில் நடந்த கூட்டங்களில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட தி.மு.க.,வினர், மத்திய அரசையும், மத்திய பட்ஜெட்டையும் கண்டித்து பேசினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக பா.ஜ., சார்பில், இன்று முதல் வரும், 15ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. சென்னை திருவான்மியூரில் இன்று மாலை நடக்கும் பொதுக்கூட்டத்தில், மாநில தலைவர் அண்ணாமலை, கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை பேசுகின்றனர். மற்ற மாவட்டங்களிலும், தி.மு.க.,வுக்கு பதிலடி தரும் வகையில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக, தமிழக பா.ஜ.,வினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

sankaranarayanan
பிப் 12, 2025 10:24

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட தி.மு.க.,வினர், மத்திய அரசையும், மத்திய பட்ஜெட்டையும் இங்கே தெரு தெருவாக பேசி என்ன பயன் பேச வேண்டி இடத்தில் பேச வேண்டும் பாராளுமன்றம் என்ற ஒரு அமைப்பு உள்ளது உங்களது மாநிலத்திலிருந்து உங்கள் சார்பாக 39-பேர்களை அங்கே அனுப்பியுள்ளீர்கள் அவர்கள் காண்டினில் வடையும் காப்பியும் குடித்துவிட்டி என்ன செய்கிறார்கள் அவர்கள் அனைவரும் அங்கே தர்ணா செய்யலாம் அல்லது விவரமாக அவையில் எடுத்துரைக்கலாம் வாதாடலாம் அங்கே செய்வது என்னவென்று தெரியாமல் இங்கே கூக்குரலிட்டு என்னாய்யா பயன் யாரு கேட்பார் எங்களால் என்ன செய்ய முடியும்


V வைகுண்டேஸ்வரன்
பிப் 12, 2025 08:16

உடன்பிறப்புகளுக்கும், பாஸ்கரன் சாருக்கும், தமிழ் நாடு பாஜக வினருக்கும் சமர்ப்பணம். ஒன்றிய அரசுக்கு GST என்ற பேரில் கோடிகளைக் கொட்டிக் கொடுக்கும் மாநிலங்களில் தமிழ் நாடு 4 ஆம் இடத்தில் இருக்கிறது. நம் மண்ட மேலயே நங்கு நங்கு ன்னு போட்டு புடுங்கும் GST யில் வெறும் 29% தான் நலத்திட்டங்களுக்கான நிதியாக திருப்பி தரப்படுகிறது. ஆனால் உத்தரபிரதேசத்துக்கு? 4 மடங்கு அதிகமாக நிதி தருகிறார்கள்.


CECIL KALLADAI
பிப் 12, 2025 10:14

GST இல் சரியாக 50% மாநில அரசுக்கும் மீதி 50% இல் 29% மறுபடியும் மாநில அரசுக்கு வருகிறது. மீதி இருக்கும் பணத்தில் மத்திய அரசாங்க திட்டங்களாக வருகிறது


guna
பிப் 12, 2025 10:48

நீ தான் ஜிஎஸ்டி ஆபீஸர் என்று புளுகினாய்...


guna
பிப் 12, 2025 10:49

சமச்சீர் அறிவுக்கு ஜிஎஸ்டி புரியாது.. வருமான வரி சுத்தமா புரியாது.. .உன் HR பாதுக்கும்...


ஆரூர் ரங்
பிப் 12, 2025 11:38

அதென்ன 29%? மேதை ஸ்டாலின் கிட்ட கத்துகிட்ட கணக்கா?. ஏக்கர் கணக்குல அளக்கக் கூடாது.


Kasimani Baskaran
பிப் 12, 2025 06:14

தமிழகத்துக்கு போதிய பட்ஜெட் ஒதுக்கீடு இல்லை என்றால் அதன் பொருள் நாங்கள் தேர்வு செய்து அனுப்பிய 40க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சுத்தமாக வேலையே செய்யவில்லை என்றுதானே பொருள். கட்சிக்காக அமளி செய்யவோ அல்லது ஊளையிடவோ அல்லது அர்த்தமில்லாமல் வெளிநடப்பு செய்யவோ அல்லது நாலுபேரை சொல்லி வாழ்க என்று கோசம் போடவோ இவர்கள் அங்கு தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்படவில்லை என்பதை உடன்பிறப்புக்கள் புரிந்து கொள்வது மிக அவசியம்.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 12, 2025 08:04

மாநில MP க்களா பட்ஜெட் போடுகிறார்கள்? அல்லது பட்ஜெட் போடும் குழுவில் பிரநிதித்துவம் தரப்படுகிறதா?? ஜனவரி 10 முதல் நிதி அமைச்சகத்தில் பட்ஜெட் சேம்பர் அலுவலகம் அமைத்து, அது "Restricted area" வாக அறிவிக்கப்பட்டு 2 செக்யூரிட்டி போட்டு விட்டுத் தான் பட்ஜெட் தயாரிப்பு ஆரம்பிக்கிறது. தமிழ் நாட்டின் 40 MP க்களின் செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக இருக்கின்றன. MP க்களை.. அதுவும் எதிரணி MP க்களைக் கேட்டா பட்ஜெட் போடுகிறார்கள்??


Kasimani Baskaran
பிப் 12, 2025 14:18

விட்டால் ஆட்சியில் பங்கு கேட்பீர்கள் போல. ஆண்டு முழுவதும் பாராளுமன்றம் நடக்கத்தான் செய்கிறது. அங்கெல்லாம் மாநிலத்துக்கு ஏதாவது பேசுகிறார்களா? சமஸ்கிருதம் வேண்டாம் - போன்ற வெட்டியான பேச்சுக்கள்தான் பேசுகிறார்கள். வேறு மாநிலம் பற்றி பேசுகிறார்கள். தமிழகத்துக்கு என்ன திட்டம் வைத்து இருக்கிறார்கள் என்று என்றாவது பேசி இருக்கிறார்களா?


xyzabc
பிப் 12, 2025 05:44

சுடலை, கொடுத்த பணத்திற்கு கணக்கு எங்கே ? கொள்ளை கூட்டத்துக்கு தலைவனா இருக்க.


B MAADHAVAN
பிப் 12, 2025 05:30

தமிழக பட்ஜெட் போடும்போது, இதே மாதிரி ஒவ்வொரு மாவட்ட மக்களும் சேர்ந்து போராட்டம் நடத்தி எங்கள் மாவட்டத்திற்கு நிதி குறைவாக உள்ளது என்று போராடக் கூடிய காலம் வரும். அப்பொழுது தான் புரியும் திரா விஷக் கூட்டங்களுக்கு தாம் செய்தது தவறு என்று...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை