உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் தி.மு.க.,வுக்கு பா.ஜ., கண்டனம்

மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் தி.மு.க.,வுக்கு பா.ஜ., கண்டனம்

சென்னை : தி.மு.க., பொதுக்குழுவில், மத்திய அரசுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதற்கு, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

எப்போதெல்லாம் தி.மு.க., அரசுக்கு எதிராக, மக்கள் மத்தியில் கொந்தளிப்பு கிளம்புகிறதோ, அப்போதெல்லாம் மத்திய அரசின் மீது வீண்பழி சுமத்தி, மக்களை திசை திருப்புவதை, முதல்வர் ஸ்டாலின் முழுநேரப் பணியாக செய்து வருகிறார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=j6ocj6v0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தொடர்ந்து மத்திய அரசு நிதி விஷயத்தில், தமிழகத்தை வஞ்சிக்கிறது என்ற உண்மையற்ற பரப்புரையை, தி.மு.க., வைத்துக் கொண்டே வருகிறது. கடந்த 2014 முதல் வசூலிக்கப்பட்ட வரியை விட, அதிகமாக தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. காங்., ஆட்சி காலத்தை விட, அனைத்து துறைகளிலும், அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் மட்டுமே, 10 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமாக நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு, தமிழ் விரோதமாக கீழடி ஆய்வை மறுக்கிறது என்பது அடிப்படையற்ற பொய். வழக்கமாக நிபுணர் குழு வழங்கும் திருத்தங்களை மேற்கொள்ளக் கூறிய, தொல்லியல் துறையின் மீது, அரசியல் சாயம் பூச முயற்சிப்பது அநியாயம்.தி.மு.க., அங்கம் வகித்த, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தமிழக ரயில்வே துறைக்கு, ஓராண்டுக்கு சராசரியாக 800 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால், நடப்பாண்டு பட்ஜெட்டில் மட்டும், 6,626 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுஉள்ளது. தமிழகத்தில் 1,302 கி.மீ., புதிய ரயில் தடங்கள் உருவாக்கப்பட்டு, 33,467 கோடி ரூபாய் மதிப்பில், புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவை, மத்திய அரசின் ஆளுகைக்குள் வராத, சுயாதீன அமைப்புகள். தி.மு.க.,வினரின் ஊழல்கள் குறித்து, நியாயமாக பதியப்பட்ட புகார்கள் அடிப்படையில் விசாரித்தால், அவற்றை பழிவாங்கும் நடவடிக்கை எனக் கூறுவது திசைதிருப்பும் நடவடிக்கையே.மத்திய அரசுக்கு எதிரான தி.மு.க., தீர்மானங்கள் அனைத்தும், உண்மையை எதிர்கொள்ள முடியாத, ஒருதலைப்பட்ச அரசியலின் வெளிப்பாடாகும். எனவே, தங்கள் ஆட்சியின் தவறுகளை, தேவையற்ற தீர்மானங்கள் வழியே, திரையிட்டு மறைக்க முயற்சிக்க வேண்டாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

RRR
ஜூன் 02, 2025 18:56

நயினார் ஒரு உப்புக்கு சப்பாணி தலைவர். பாஜகவுக்கு உழைக்கிறாரோ இல்லையோ... எடப்பாடி தலைமையிலான அதிமுகவுக்கு ரொம்ப விசுவாசமாக இருக்கிறார்.


venugopal s
ஜூன் 02, 2025 12:11

கடந்த பத்தாண்டுகளில் பாஜக ஆட்சியில் வட இந்திய மாநிலங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தமிழகத்துக்கு எவ்வளவு செய்யப்பட்டது என்று சொல்ல முடியுமா?


RAAJ68
ஜூன் 02, 2025 11:22

5000 crores பீகார் எலக்சனுக்கு அனுப்பி விட்டதாக முக்கியமான யூடுபர்கள் பேசியது வலம் வந்து கொண்டுள்ளது. எனவே வீர வசனம் பேசுவதற்கு தடை இல்லையே.


RAAJ68
ஜூன் 02, 2025 10:42

டெல்லி சென்று என் மகனை காப்பாற்றுங்கள் என்று கதறி அழுது புலம்பி இங்கு வந்து வீர வசனம் பேசுவது நகைப்பாக உள்ளது.


raja
ஜூன் 02, 2025 09:08

அட போயா நீ வேற நாங்க எல்லாம் தேர்தல் அன்னைக்கு ரூவா இரநூறோ இல்லை ரெண்டாயிரமோ கொடுத்து ஒரு ஓசி குவார்ட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் ஓட்டு போடும் கூட்டமான டாஸ்மாக் டுமிழினம் ஆக்கும்...வந்துட்டாரு டீடைலு...


K V Ramadoss
ஜூன் 02, 2025 07:48

ஒவ்வொன்றுக்கும் ஆதாரத்துடன் புள்ளியில் விவரங்களையும் கொடுத்து பதில் சொன்னால்தான் மக்களுக்கு புரியும். குற்றம், குறைகளை ஒருவர் சொல்லும்போது, பதில் சொல்லுபவர் ஒரு படி மேலேபோய் ஆதாரத்துடன் விளக்கவேண்டும்.. வழ வழ கேள்விகளுக்கு கொழ கொழ பதில் உதவாது.. நாகேந்திரன் புரிந்துகொள்ளவேண்டும்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை