உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  மத போதகர் பேச்சுக்கு பா.ஜ., கண்டனம்

 மத போதகர் பேச்சுக்கு பா.ஜ., கண்டனம்

கோவை: மத போதகர் மோகன் சி லாசரஸ் பேச்சுக்கு பா.ஜ., சிறுபான்மையினர் அணி மாநில தலைவர் ஜான்சன் ஜோசப் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: எப்.சி.ஆர்.ஏ., என்கிற சட்ட திருத்தத்தை மத்திய அரசு எதற்காக கொண்டு வருகிறது என அறியாமல், மனதில் தோன்றியதை பேசி, கிறிஸ்தவ மதத்துக்கு எதிராக சட்டம் கொண்டு வருவதுபோல், மதபோதகர் மோகன் சி லாசரஸ் பேசுகிறார். வெளிநாடுகளில் இருந்து சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் நிதி திரட்டி, நம் நாட்டுக்கு அனுப்பி, பாதுகாப்பையும், இறையாண்மையையும் பாதிக்கும் வகையில் செய்யும் சமூக அமைப்புகளே இச்சட்டத்தை பார்த்து பயப்பட வேண்டும். சிறப்பாக செயல்படும் கல்வி நிறுவனமோ, மருத்துவமனைகளோ, பிற சமூக சேவைகளோ செய்வதற்காக பெறப்படும் பணத்தை என்ன நோக்கத்துக்காக வாங்கினார்களோ, அந்த நோக்கம் நிறைவேறினால் மத்திய அரசு தடை செய்யவில்லை. எவ்வளவு பணம் எந்த நாட்டில் இருந்து எதற்கு வந்தது, அந்த பணத்தை எதற்கு செலவு செய்திருக்கிறார்கள் என கணக்கு காட்டாமல் இருக்கும் சமூக விரோதிகளே அச்சப்பட வேண்டும். இவ்வாறு, கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Sriram
ஆக 14, 2026 20:26

இவங்களுக்கு காசு வவரனும், கன்வெர்ட் பண்ணனும். கேவலமான ஜந்துக்கள்.


Sridhar
ஆக 14, 2026 18:06

. Ivany en raid pannaly


sankar
ஆக 14, 2026 16:04

அன்று பசிவயிறு- இன்று பணத்தில் படுத்துறங்கும் விந்தை ?


sankar
ஆக 14, 2026 16:03

கணக்கு கேட்டால் கோவம் வராதா சார் ?


chinnamanibalan
ஆக 14, 2026 14:30

அந்நிய நாடுகளில் இருந்து இவர்களுக்கு பணம் கணக்கில்லாமல் வந்து கொட்டுகிறது. இந்த பணத்துக்கு கணக்கு கேட்டால், மத போதகர்களுக்கு கோபம் வருவதில் அர்த்தம் உள்ளது. ஆனால் அரசியல்வாதிகளுக்கு இதில் கோபம் வருவது ஆச்சரியம் அளிக்கிறது


Senthil
ஆக 14, 2026 14:30

ஜெயிலில் போட்டது பொம்பள கேசில்


G Mahalingam
ஆக 14, 2026 12:04

நேரு சிறையில் ராஜா போக வாழ்க்கை வாழ்ந்தார். புத்தகங்கள் எழுதியுள்ளார். வெள்ளைக்காரனுக்கு அடிபணிந்தார் அவரை புத்தகம் எழுத விட்டார்கள். வெள்ளைக்காரனை எதிர்த்தால் சாவார்கர் அடிபட்டு கொண்டு இருந்தார். அடியை தாங்காமல் மன்னிப்பு கடிதம் எழுதினார் ஆனால் மீண்டும் மீண்டும் வெள்ளைக்கார நாய்களை எதிர்த்தார்.


jeyakumar
ஆக 14, 2026 11:18

அன்னிய மத போதை - சுலபமாக பணம், பொன், பெண் ஆகியவை கிடைக்கும் ஒரு மிக மிக எளிய அடிமை பாதை.


Perumal Pillai
ஆக 14, 2026 11:16

இவர் மத போதகர் மட்டுமல்ல, மத வெறி போதகர் கூட. உடுத்த வேஸ்டிக்கு பதிலாக மற்றதொரு வேஷ்டி கட்ட முடியாத அளவுக்கு கொடும் வறுமையில் வாடிய இவர் கர்த்தரின் அளவுக்கு மீறிய கருணையால் இன்று நாட்டில் உள்ள பெரும் பணக்கார கோடிஸ்வரர்களில் இவரும் ஒருவர் . பணம் சம்பாதிக்கும் பரம ரகசியம் தெரிந்தவர் .


BALAJI
ஆக 14, 2026 10:53

திமுக உபிகள் 200 ரூபாவுக்கு கூவுறதை காட்டிலும் பாசக உபி ஜான்சன் ஜோசப் 200 ரூபாவுக்கு ரெம்ப கூவறாரு


Tetra
ஆக 15, 2026 21:35

நீங்க? டாலர்ல கிடைக்குமா 200.