உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண்களுக்கு பெப்பர் ஸ்பிரே பா.ஜ., ஏற்படுத்தும் விழிப்புணர்வு

பெண்களுக்கு பெப்பர் ஸ்பிரே பா.ஜ., ஏற்படுத்தும் விழிப்புணர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவையைச் சேர்ந்த இளம்பெண்களுக்கு இலவசமாக, 'பெப்பர் ஸ்பிரே' வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார், பா.ஜ., பெண் நிர்வாகி.சென்னை அண்ணா பல்கலையில் பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட பாலியல் தொந்தரவு வழக்கில் தீர்ப்பே வந்துவிட்டாலும், வழக்கின் பிரதான குற்றவாளியான ஞானசேகரனை கடந்து, பலருக்கும் தொடர்பு உள்ளது என எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அதற்காக, பாலியல் தொந்தரவு கொடுக்கும்போது, ஞானசேகரன் மொபைல் போன் வாயிலாக யாரோ ஒருவரிடம் பேசினார். அப்போது அவரை 'சார்' என்று குறிப்பிட்டார் என, பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் அளித்திருந்தார். ஆனாலும், வழக்கு விசாரணையில் அப்படி எந்த சாரும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால், இந்த விவகாரத்தில், 'யார் அந்த சார்?' என கேட்டு, தீர்ப்புக்கு பின்னரும் எதிர்க்கட்சியினர் சலசலப்புகளை உண்டு பண்ணுகின்றனர்.இந்நிலையில், 'தமிழகத்தில் இளம்பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்; அதற்கு தற்காப்பு மிகவும் முக்கியம். ஒவ்வொரு பெண்ணும் பெப்பர் ஸ்பிரேக்களை தற்காப்புக்காக வைத்துக் கொள்ள வேண்டும்' என, கோவை மாவட்ட பா.ஜ., பொறுப்பாளர் கவுசல்யா, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.கோவை காந்திபுரம் வி.கே.கே.மேனன் சாலையில் வசிக்கும் மகளிருக்கு, நேற்று இலவச பெப்பர் ஸ்பிரேக்களை கவுசல்யா வழங்கினார். பின், அவர் கூறுகையில், ''தமிழகத்தில் இளம்பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. 'யார் அந்த சார் விவகாரம்' இனியும் முடிவுக்கு வரவில்லை. இளம்பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள, எப்போதும் பெப்பர் ஸ்பிரே வைத்திருக்க வேண்டும். ''இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இலவசமாக கொடுத்து வருகிறேன். என்னால் அனைவருக்கும் கொடுக்க முடியாவிட்டாலும், தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

sankaranarayanan
ஜூன் 05, 2025 08:33

தமிழகத்தில் இளம்பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. யார் அந்த சார் விவகாரம் இனியும் முடிவுக்கு வரவில்லை. இளம்பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள, எப்போதும் பெப்பர் ஸ்பிரே வைத்திருக்க வேண்டும். அந்த பெப்பர் ஸ்பிரேக்கு "சார்" - "சார்" - "சார்" என்றே பெயரும் வைக்கலாமே


Svs Yaadum oore
ஜூன் 05, 2025 07:12

இந்த விடியல் ஆட்சியில் ஊரெங்கும் டாஸ்மாக் விட படு கேவலமான கஞ்சா மெத்து போதை ..சென்னை முழுக்க கஞ்சா...ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்த மனதை உறைய வைக்கும் சம்பவம்... தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மது போதையில் தடுமாறிய 19 வயது இளைஞன், 80 வயது மூதாட்டியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, பின்னர் கொடூரமாக கொலை.... இந்த மதம் மாற்றி விடியல் இவனுங்கெல்லாம் மணிப்பூர் பற்றி பேசுவானுங்க ...


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 05, 2025 06:57

கழகத்தினரிடமிருந்து பெண்களை பாதுக்காக்கும் திட்டமா ? .. வாழ்க வாழ்க ..பெண்கள் விழிப்புணர்வுடனும் ... துணிவுடனும் வாழ வாழ்த்துக்கள் ..ரோட்டில் போகும்பத்தும் ...ஒட்டு போடும்போது கவனமாய் இருங்கள்


Padmasridharan
ஜூன் 05, 2025 06:10

காதல் என்கிற பெயரில் ஏமாந்துபோற பெண்களுக்கும் என்ன கொடுக்கணும்னும் யோசிக்கணும் தாயே. .


Kasimani Baskaran
ஜூன் 05, 2025 03:51

நல்ல வியூகம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை