பாஜ தேர்தல் மேலாண்மை குழு அமைப்பு
சென்னை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் 6 பேர் கொண்ட பாஜ தேர்தல் மேலாண்மை குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் விபரம் பின்வருமாறு:* பொன் ராதாகிருஷ்ணன் (தேசிய செயற்குழு உறுப்பினர்)* சேகர் (மாநில பொருளாளர்)* ஜெயப்பிரகாஷ் (மாநில துணைத் தலைவர்)* வெங்கடேசன் (மாநில துணைத் தலைவர்)* மாலா செல்வகுமார் (மாநில பொதுச்செயலாளர்)* ராமப்பிரியன் (கட்சி உறுப்பினர்)