உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காவல் அதிகாரிகளை அரசியலுக்குப் பலிகடாவாக்கும் திமுக அரசு; அண்ணாமலை குற்றச்சாட்டு

காவல் அதிகாரிகளை அரசியலுக்குப் பலிகடாவாக்கும் திமுக அரசு; அண்ணாமலை குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு எதிராக, தமிழகக் காவல்துறைக்கு, பொறுப்பு டிஜிபியை திமுக அரசு.நியமனம் செய்திருப்பதாக பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை; மாநிலக் காவல்துறை தலைவர் நியமனம் தொடர்பாக, உச்சநீதிமன்றம், மிகவும் தெளிவான விதிமுறைகளை வகுத்துள்ளது. டிஜிபி பொறுப்பில் இருப்பவர் ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதம் முன்பாகவே, அடுத்த டிஜிபி பதவிக்குத் தகுதியான அதிகாரிகள் பட்டியலை அனுப்ப வேண்டும் என்று கூறியிருக்கிறது. சங்கர் ஜிவாலைக் காவல்துறை தலைவராக நியமிக்கும்போதே, அவர் ஓய்வு பெறும் தினமும் தமிழக அரசுக்கும் தெரியும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d22ipqu8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆனால், தமிழகத்தில் அத்தனை உயர் அதிகாரிகள் பதவியையும், அரசியல் பதவியாக்கி வைத்திருக்கிறது திமுக அரசு. ஒரு சில காவல்துறை உயர் அதிகாரிகள், திமுக வட்டச் செயலாளர்களைப் போல பேசுவதையும் தமிழக மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்த நிலையில், அடுத்த காவல்துறை டிஜிபி பதவிக்குத் தகுதியான அதிகாரிகள் 6 பேர் இருக்க, பொறுப்பு டிஜிபி நியமனம் மூலம், அவர்கள் பதவி உயர்வைத் தட்டிப் பறித்திருப்பதோடு, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலையும் புறக்கணித்திருக்கிறது திமுக.காவல்துறை அதிகாரிகளை, தங்கள் அரசியலுக்குப் பலிகடாவாக்கும் திமுக அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தை, வன்மையாகக் கண்டிக்கிறேன். உங்கள் ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரவிருக்கிறது என்பதையும், நினைவுபடுத்திக் கொள்கிறேன், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Mani . V
செப் 01, 2025 03:57

மிஸ்டர் அண்ணாமலை, அரசு அதிகாரிகளை அடிமைகளாக நடத்தும் மனப்பாங்கு கருணாநிதி காலத்தில் இருந்து இருக்கிறது.


G Mahalingam
ஆக 31, 2025 18:25

அந்த மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கிடைக்க வேண்டியதை கிடைக்காமல் செய்த திமுக அரசு மீது அந்த ஐபிஎஸ் அதிகாரிகள் வழக்கு தொடர வேண்டும்.


T.sthivinayagam
ஆக 31, 2025 17:59

அண்ணாமலை சார் உங்களுக்கு காவல் துறையும் செட்டாகவில்லை அரசியலும் செட்டாகவில்லை ஊறுகாய் போல சுயநல வாதிகள் உங்களை பயன்படுத்துகிற நிலைமையா என பாஜாகவினர் வேதனை தெரிவித்துள்ளார்


GMM
ஆக 31, 2025 17:12

மாநிலக் காவல்துறை தலைவர் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றம், தெளிவான விதிமுறைகளை வகுத்து, அதனை பின்பற்றாத மாநிலத்தை கட்டுபடுத்த , கலைக்க, சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த முடியாத பயனற்ற உச்ச நீதிமன்ற தீர்வு நீதிபதி அதிகாரம் இன்மையை வெளி காட்டுகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் உயர் அதிகாரிகள் பதவி, திராவிட அரசியல் வாதிகள் கீழ் செயல்பட வேண்டிய பதவிகள் தான். அதிகார துஷ்பிரயோகம் இல்லை என்றால் திமுக இல்லை. தற்போது இட பெயர்வு அதிகம். மாநிலங்கள் இணைந்து regional police station அமைக்க வேண்டும். மத்திய உள்துறையின் கீழே இருக்க வேண்டும். மத்திய அரசு பொறுப்பில் உள்ளது மாநில பொறுப்பில் இருக்க கூடாது. இது இரட்டை நிர்வாக முறை. எப்போதும் சட்ட சிக்கல் உருவாகும். வழக்கறிஞர் வருவாய் கூடும். மக்கள் வாழ்வு கெடும்.


VSMani
ஆக 31, 2025 16:23

எல்லா ஆளும்கட்சிகளும் அதைத்தான் செய்கிறது. தங்களுக்கு அனுசரித்து போகிற அதிகாரிகளைத்த்தான் முக்கிய பதவி பொறுப்புகளில் வைக்கிறார்கள். அண்ணாமலையும் கர்நாடகாவில் போலிஸ் அதிகாரியாக வேலைபார்த்தபோது ஆளும்கட்சிக்கு அனுசரித்து போனவர்தான். இது எழுதப்படாத சட்டம். மாவட்ட ஆட்சித்தலைவர்களாகட்டும், SP ஆகட்டும் DIG, டிஜிபி, தலைமைச்செயலாளர் எல்லாருமே எல்லா ஆளும்கட்சிகளுக்கு அனுசரித்து போகிறவர்கள்தான். அனுசரித்து போகாவிட்டால் முக்கிய லஞ்சம் கொழிக்கும் பதவிகளில் இருக்கமுடியாது. மத்தியில் ஆளும் அண்ணாமலை கட்சி பிஜேபி யும் அதைத்தான் செய்கிறது. பிஜேபி க்கு அனுசரித்து போகும் அதிகாரிகள்தான் ED உள்ளிட்ட அனைத்து முக்கிய பொறுப்புகளிலும் இருக்கிறார்கள்.


Ms muralidaran
ஆக 31, 2025 16:13

ஓஷோ கூறுகிறார் வேர்கள் கடினமானவை அவைகள் கீழே இருக்க வேண்டும் மலர்கள் மென்மையானவை அவை மேலே உள்ளன அது போல் கடினமான மக்கள் வேர்கள் போல் உழைப்பாளர் களாக இருக்க வேண்டும் மென்மையான ஞநிகள் மலர் மேலே இருப்பது போல் ஆட்சியில் இருக்க வேண்டும்


முக்கிய வீடியோ