உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நத்தம் அருகே பா.ஜ., நிர்வாகி படுகொலை!

நத்தம் அருகே பா.ஜ., நிர்வாகி படுகொலை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திண்டுக்கல்: நத்தம் சாணார்பட்டி அருகே, முன்னாள் பா.ஜ., மண்டல நிர்வாகி பாலகிருஷ்ணன் அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்த ராஜாக்காபட்டியை சேர்ந்தவர் முன்னாள் பா.ஜ., மண்டல நிர்வாகி பாலகிருஷ்ணன், 39.ஆற்று மணல் விற்பனை, லாரி தொடர்பான தொழில்களை மேற்கொண்டு வருகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8gc0gk8k&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவர் இன்று இரவு சாணார்பட்டி அருகே வந்தபோது இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது.இதில், அதே இடத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழந்தார்.தகவல் அறிந்த திண்டுக்கல் எஸ்.பி., பிரதீப் மற்றும் டி.எஸ்.பி.,சிபி சாய் சவுந்தர் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.பாலகிருஷ்ணன் என்ன காரணத்தால் கொலை செய்யப்பட்டார், கொலையாளிகள் யார் என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை. சுற்றுவட்டார பகுதிகளில் சிசிடிவி காட்சிகளை போலீசார் சேகரித்து விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

R.P.Anand
ஜூலை 04, 2025 15:26

பிஜேபி கட்சியும் கூட குண்டர்களை உருவாக்க வேண்டிய தருணம் இது


ராம்
ஜூலை 04, 2025 14:17

இங்கே ஒருத்தர் வேணு பெயரில் கருத்துகள் பதிவு போடுவார் எங்கே காணாம்..ஓ 200ஊபீஸ்க்கு ஒன்னுன்னா மட்டும் தான் பொங்குவார் ஏன்னா தமிழகத்தில் நடப்பது பொற்கால ஆட்சி(கருமம் லாயக்இல்லாத முதல்வர்)


raja
ஜூலை 04, 2025 07:06

காவல் துறை .... என்ன செய்கிறார் என்று தமிழர்கள் கேட்கிறார்கள்......


நிக்கோல்தாம்சன்
ஜூலை 04, 2025 06:30

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறுவதோடு நிறுத்தி விடமுடியுமா ஸ்டாலின் அவர்களே ? ஸாரிக்கு மதிப்பே இல்லமா போயிடுச்சு , எவ்ளோ பெருகிட்ட சாரி கேட்கமுடியும் என்று வடிவேலு அவர்களின் டோனில் ஸீன் வந்து போவுது


Padmasridharan
ஜூலை 04, 2025 05:15

கொலை கொள்ளைகள் நடந்த பின்னரே CCTV காட்சிகளை பயன்படுத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்கின்றனர். அது ஏன் குற்றங்களை தடுக்கமாட்டேன் என்கிறார்கள் சாமி.


Kasimani Baskaran
ஜூலை 04, 2025 04:04

சிறிது நேரத்திலேயே ஊடகங்கள் பஞ்சாயத்து செய்து விடும். இந்த முறை அப்படி செய்யவில்லை என்பது புரியாத புதிர்.


Bhakt
ஜூலை 03, 2025 23:11

விடியல் ஆட்சியில் தமிழ் நாடு கொலை நாடு ஆனதே...


mindum vasantham
ஜூலை 03, 2025 23:02

திமுகவினருக்கு கருத்தியலால் எதிர்க்க தெரியாது


தாமரை மலர்கிறது
ஜூலை 03, 2025 22:53

போலீஸ் அடித்து கொலை, ரவுடி அடித்து கொலை என்று மாறி மாறி செய்தி தருவது தான் திராவிட மாடல்.


P.M.E.Raj
ஜூலை 03, 2025 22:40

திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருதோ அப்போதெல்லாம் கொலைகள் அன்றாடம் நடைபெறும். ஸ்டாலினுக்கு ஆட்சி செய்ய கொஞ்சம்கூட தகுதியே இல்லை. இன்னும் ஏன் தான் பதவியில் நீடிக்கிறாரோ தெரியவில்லை. மக்களின் மீது உண்மையான அக்கறை இருந்தால் ராஜினாமா செய்துவிட்டு வீட்டில் ஓய்வு எடுக்கலாம். மக்கள் நிம்மதியாக இருப்பார்கள். திமுக என்றாலே பயமாக இருக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை