உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டணிக்கு பா.ஜ., ஆர்வம்

கூட்டணிக்கு பா.ஜ., ஆர்வம்

பா.ம.க., தலைவர் அன்புமணியுடன், கூட்டணி பேச்சை விரைவில் துவக்க, பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளது. இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., போட்டியிட்டது. தற்போது, ராமதாஸ் மற்றும் அன்புமணி என, இரு பிரிவுகளாக பா.ம.க., உள்ளது. பீஹார் தேர்தல் முடிவதால், தமிழக சட்டசபை தேர்தலுக்கு முழுவீச்சில் தயாராக பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளது. எனவே, கூட்டணி கட்சிகளை இறுதி செய்து, தொகுதி பங்கீடு பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு, அ.தி.மு.க., தலைமையிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இந்நிலையில், தி.மு.க., கூட்டணியில் சேர ராமதாஸ் பேச்சு நடத்துவதாக, அமித் ஷாவுக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே, அன்புமணியுடன் விரைவாக கூட்டணி பேச்சை துவக்க, பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளது. அதன்படி, பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் பைஜயந்த் பாண்டா உள்ளிட்ட நிர்வாகிகள், அன்புமணியை விரைவில் சந்தித்து பேச்சு நடத்த உள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை