உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எங்களுக்கு பாஜ எதிரி அல்ல; சொல்கிறார் காதர் மொய்தீன்: 20 தொகுதிகள் கேட்க முடிவு

எங்களுக்கு பாஜ எதிரி அல்ல; சொல்கிறார் காதர் மொய்தீன்: 20 தொகுதிகள் கேட்க முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர் : “பா.ஜ., உள்ளிட்ட யாரும் எங்களுக்கு எதிரி அல்ல,” என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் உள்ள முஸ்லிம் சமுதாயம், ஒட்டு மொத்தமாக தி.மு.க.,வுக்கு தொடர்ந்து ஆதரவை வழங்கும். எங்கள் அமைப்பு சார்பில், கும்பகோணத்தில் வரும் ஜன., 28ல் நடைபெறும் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். இந்த மாநாடு பா.ஜ.,வுக்கு எதிரானது அல்ல. பா.ஜ., உள்ளிட்ட யாருக்கும் முஸ்லிம் சமுதாயத்தினர் எதிரானவர்கள் அல்ல. எங்கள் மனதில் உள்ள சைத்தானைத் தவிர வேறு யாரையும் நாங்கள் எதிரியாக நினைத்தது கிடையாது. இன்றைக்கு எதிரியாக நினைப்பவர்கள், நாளைக்கு நண்பர்களாக மாறுவர். இது அரசியலில் மிகச் சிறந்த பாடம். திருப்பரங்குன்றம் விவகாரத்திற்கும், முஸ்லிம் ஓட்டுகளுக்கும் என்ன சம்பந்தம்? அங்குள்ள ஹிந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரர்களாகத்தான் உள்ளனர். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதில் எந்த அரசியலும் கிடையாது. தி.மு.க., கூட்டணியில் இம்முறை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், 20 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். தி.மு.க., சார்பில் கூட்டணி பேச்சு நடத்தும்போது இதை நிச்சயம் தெரிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

Rajendra Kumar
டிச 17, 2025 06:03

முஸ்லிம்களில் 80% பேர் மதவாதிகளாகவே உள்ளனர். சொந்த மூளை, யோசனை செய்யும் சக்தி இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். மதத்தின் பெயரால் எந்த மூர்க்கத்தனமான செயலும் செய்வதால், உலகின் மற்ற இனத்தவருக்கு எதிரிகளாக மாறி வருகின்றனர். இதை மாற்ற வேண்டியது பக்குவமான முஸ்லிம் பெரியோரின் கடமை. ஆனால் மூடநம்பிக்கை அதிகம் இருப்பதால் அது கடினமான காரியமாகும்


Kalyanasundaram Linga Moorthi
டிச 16, 2025 21:59

election stunt -


Madras Madra
டிச 16, 2025 10:52

உலகமே உங்களுக்கு எதிரி ஆகி கொண்டு இருக்குது அத பத்தி பேசுங்க


Thangamani Kamalanathan
டிச 15, 2025 19:23

நல்லவர்கள் பிஜேபி கு வாக்களிப்பதில்லை.


பேசும் தமிழன்
டிச 15, 2025 23:57

நீங்கள் மாற்றி சொல்கிறீர்கள் .... நல்லவர்கள் ... தேச பற்றாளர்கள் எல்லாம் தான் பிஜேபி கட்சிக்கு ஓட்டு போடுகிறார்கள்.


ponssasi
டிச 15, 2025 14:10

தீபம் ஏற்றுவதில் எந்த அரசியலும் இல்லை. ஆனால் மதம் கலந்திருக்கிறது. உரக்க சொல்லுங்கள் மலைமீது தீபத்தூணில் விளக்கேற்றுவதில் முஸ்லீம்கள் தமிழக முதல்வருக்கு எந்த அழுத்தத்தையும் தரவில்லை என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு சொல்லமுடியுமா? தமிழக முதல்வர் அவர்கள் ஒரு முகலாய அரசனை போல நடந்துகொள்ளுகிறார். எல்லாவற்றிலும் இந்து விரோதப்போகையே கையாளுகிறார்.


S.V.Srinivasan
டிச 15, 2025 13:20

மனதில் உள்ள சைத்தான் யாருன்னு சொல்ல முடியுமா


Haja Kuthubdeen
டிச 15, 2025 14:04

கெட்ட செயல்களை ஊக்குவிப்பது..இறை நம்பிக்கையை தகற்பது..இறைவனுக்கு மாறான செயல்களை தூண்டுவதையே சைத்தான் என்று இஸ்லாம் சொல்கிறது...


shakti
டிச 16, 2025 19:30

படிங்க புரியும்


krishna
டிச 15, 2025 13:19

ENNAMA POYYA SOLLRAARU.


Rathna
டிச 15, 2025 12:34

அரசியல் இஸ்லாம் என்பது மிகவும் ஆபத்தானது. 10% இருக்கும் மக்கள் 50% கேட்பது தான் அவர்கள் வாடிக்கை. அதை வன்முறை மூலம் அவர்கள் கேட்பது வாடிக்கை. ஜோகேந்திர நாத் மண்டல் என்று ஒரு பட்டியல் இன அமைச்சர் இருந்தார். அவர் ஜின்னாஹ்வை நம்பி பாக்கிஸ்தான் போனார். பாக்கிஸ்தான் ஹிந்து பட்டியல் இன மக்களை இன அழிப்பு செய்து, வேறு யாரும் வேலை செய்ய முன்வராததால், டாய்லெட் சுத்தம் செய்யும் வேலையை மட்டும் கொடுத்தது. இதனால் மனம் நொந்து அவர் இந்தியாவிற்கு வந்து மிகவும் வருத்தத்துடன் இறந்து போனார். காஷ்மீரிலும் சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும், பட்டியல் இனத்தவர்களுக்கு அங்கே 1% கூட இட ஒதுக்கீடு இல்லை. அதை 70 ஆண்டு கழித்து மோடி அரசு நிறைவேற்றியது.


karthik
டிச 15, 2025 12:16

யாரும் எதிரி இல்லை.. ஆனால் முஸ்லீம் மக்கள் ஒட்டு மொத்தமாக கண்ணை மூடிக்கொண்டு திமுகவிற்கு ஓட்டு போடுவோம் என்பது என்ன மாதிரியான மனநிலை? முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் ஒரே கும்பலாக ஒரே கட்சிக்கு ஓட்டு போட்டால் மத நல்லிணக்கம்... இந்துக்கள் ஒன்று சேர்ந்தால் மதவாதம்... இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்கள். 1000 ஆண்டுகளாக இந்துக்களையும் பாரதநாட்டையும் மாற்றிவிடவேண்டும் என்று துடித்துக்கொண்டு இருக்கிறீர்கள்.


krishna
டிச 15, 2025 13:22

SUPER KARUTHU SIR 100% UNMAI.


Haja Kuthubdeen
டிச 15, 2025 14:11

கண்ணை மூடிக்கொண்டு ஒரே கட்சிக்கே ஓட்டு போட முஸ்லிம்கள் ஆட்டு மந்தைகள் அல்ல. அம்மா அவர்கள் புரட்சிதலைவர் இருந்தவரை பெரும்பாலான முஸ்லிம்கள் அவர்களுக்கே வாக்களித்துள்ளார்கள்.பிஜெபி என்ற ஒரு கட்சிக்கு அவர்கள் அதிகமா வாக்களிப்பதில்லை என்பதால் ஹிந்து மக்களுக்கு அவர்கள் எதிரானவர்கள் அல்ல...


Mayilsamy
டிச 16, 2025 04:04

தாங்கள் கூறுவது அனைத்தும் சரிங்க ஆனால் 1000 ஆண்டுகள் இல்லைங்க 500 ஆண்டுகளாக முகலாயர்கள் உட்பட 300 ஆண்டுகளாக ஆங்கிலேயர்கள் உட்பட ஆயிரம் ஆண்களுக்கு முன்பாக சோழர்களிடம் மாட்டியிருந்தால் இந்தியாவின் வரலாறே மாறியிருக்கும்


Madras Madra
டிச 15, 2025 12:04

திராவிட முஸ்லீம் வாய்க்கு வந்ததை பேசுவார் பிழைப்புக்காக


சமீபத்திய செய்தி