உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ.,வுக்கும், விஜய்க்கும் ஒரே நோக்கம் தான்: சொல்கிறார் நயினார் நாகேந்திரன்

பா.ஜ.,வுக்கும், விஜய்க்கும் ஒரே நோக்கம் தான்: சொல்கிறார் நயினார் நாகேந்திரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பது தான் எங்களுக்கும், த.வெ.க., தலைவர் விஜய்க்கும் இருக்கும் பொதுவான நோக்கம் என்று பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், ஈரானில் இருந்து மீட்கப்பட்ட 15 தமிழக மீனவர்களை சென்னை விமான நிலையத்திற்கு சென்று பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார். அவர்களுக்கு சால்வை அணிவித்தும், பழங்கள், இனிப்புகளை கொடுத்து வரவேற்பு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: மீனவர்களின் நிலை குறித்து தகவல் கிடைத்தவுடன், உடனடியாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரை தொடர்பு கொண்டு பேசினேன். உடனடியாக தடையின்றி உணவுப் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மற்றொரு தீவில் உள்ள மீனவர்களையும் மீட்கும் பணிகள் நடந்து வருகிறது, எனக் கூறினார். இதனிடையே, எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று த.வெ.க., தலைவர் விஜய் கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலாவது; தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பது தான் எங்களுக்கும், த.வெ.க., தலைவர் விஜய்க்கும் இருக்கும் பொதுவான நோக்கம். அந்த ஒற்றுமையின் காரணமாக அடிப்படையில் கூட்டணி குறித்து பரிந்துரைத்தேன். என்.டி.ஏ., கூட்டணியின் கீழ் அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் இணைந்ததில் இருந்தே, தி.மு.க., தலைவர்களுக்கு கவலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே பி டீம் என்ற கதையை கூறி வருகின்றனர். விஜய்யை போலவே கமலையும் பி டீம் என்று கூறினார்கள். தற்போது, தி.மு.க.,வின் ஆதரவுடன் கமல் எம்.பி., ஆகி உள்ளார், எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

BHARATH
ஜூலை 07, 2025 17:19

திரு நைனார் அவர்களே. நீங்க எதுக்கு அந்த கூத்தாடி பின்னால் போறீங்க? அவன் தி மு க பி டீம்ன்னு ஊருக்கே தெரியும்.


SP
ஜூலை 07, 2025 14:50

திமுகவின் எதிர்ப்பு ஓட்டுகளை பிரித்து மீண்டும் திமுக ஆட்சிக்கு வருவதற்காக மிஷனரிகள் மூலம் களம் இறக்கப்பட்ட இவரும், பாஜகவும் எப்படி எந்த விதத்தில் ஒற்றுமை என்று சொல்லுகிறார் என்று புரியவில்லை.


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 07, 2025 14:04

வழிமேல் விழிவைத்து காத்திருந்தது எல்லாம் வீணாகிப்போனதே என்ற வருத்தம் நாலுகோடிநயினார் இடம் அப்பட்டமாக தெரிகிறது .. விஜய் தனித்து போட்டியிட்டால் தான் அவருடைய உண்மையான செல்வாக்கு என்ன என்பது தெரியவரும்.அவருடைய அடுத்த அரசியல் நகர்வுகளை அதற்கு தகுந்தமாதிரி அமைத்துக் கொள்ளமுடியும்.. இப்போது எந்த கட்சியுடனும் கூட்டணி வைத்துக்கொண்டால் தனித்துவம் காணாமல் போய்விடும். மக்கள் விஜயை பத்தொடுப்பதினொன்னு அதோடு இது ஒன்னு என்று நினைத்து புறம் தள்ளிவிடுவார்கள்.. ஊழலுக்கு எதிரான கட்சி என்று சொல்லி இப்போதிருக்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி வைத்தால் குறிப்பாக அமித்திமுக வுடன் கூட்டணி வைத்தால் அதைவிட எள்ளிநகையாடும் முடிவு வேறு எதுவும் இருக்காது .... எதிர்ப்பு என்பது இரண்டு முக்கிய மாநில கட்சிகளையும் ஒருசேர எதிர்ப்பாக இருந்தால் தான் விஜய்க்கு நல்லது ...


karthikeyan
ஜூலை 07, 2025 12:38

மத நல்லிணக்கம் கண்டிப்பாக இருக்கனும் என்பதில் கறுத்து வேறுபாடு இல்லை ஆனா எப்போவும் ஹிந்து மதத்தை சேர்ந்தவன் மட்டும் தான் இந்த கருத்துக்கு கட்டுப்பட்டு இருக்கனும் என்பதில் உடன்பாடு இல்லை. அது என்ன ஹிந்து கோயில்களுக்கு ஒரு சட்டம் மற்ற மத வழிபாட்டு தலங்களுக்கு இல்லை? சிறுபான்மையினர் என்று சொல்லிக்கொண்டு மதம் மாறி அதில் கிடைக்கும் அராசாங்க சலுகைகள் கொண்டு பாதி பெரு செழிப்பா தான் இருக்காங்க ...எதற்கு இந்த சலுகைகள்? கேள்வி கேட்ட சங்கி என்று சொல்வது...அப்படியே இருந்துவிட்டு போறோம். சம உரிமை வரணும் , ஹிந்து மக்களை கேவலமாக நடத்தும் நிலை மாறனும்.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 07, 2025 12:15

திமுகதான் விஜய்யை இறக்கி வெள்ளாடுது ன்னு நயினாருக்கும் தெரிஞ்சு போச்சு போல ..... விஜய்யை சங்கடப்படுத்த கூப்புட்டுக்கிட்டே இருக்காரு .....


Kulandai kannan
ஜூலை 07, 2025 11:50

இப்படி பேசிப் பேசியே, விஜய் திமுகவிடமிருந்து பிரிக்கப் போகும் மைனாரிட்டி ஓட்டுகள், திமுகவிடமே தங்கிவிடும். நைனார் அதிமுகவினருக்கே உரிய அரசியல் அஞ்ஞானத்தைக் காட்டுகிறார்.


saravan
ஜூலை 07, 2025 10:52

என் எண்ணமும் அது தான்


மோகனசுந்தரம்
ஜூலை 07, 2025 09:56

இந்த பி ஜே பி யை விஜய் அடித்தாலும் இவன்களுக்கு புத்தி வராது. என்ன உங்களுக்கும் விஜய்க்கும் பிஜேபிக்கும் என்ன ஒற்றுமை உள்ளது. இனி மாநில தலைவர் என்றால் வாய்க்கு வந்ததெல்லாம் பேசுவியா.


Arul Narayanan
ஜூலை 07, 2025 09:33

விஜய் திமுகவிற்கு எதிரான ஒரே அணியில் வர வேண்டும் என்றால் அதிமுக பாஜக கூட்டணியாக இல்லாமல் அதிமுக தவெக கூட்டணி அமைத்து அதில் பாஜக தொகுதி உடன்பாடு செய்வதற்கு எடப்பாடி பழனிச்சாமியும் விஜயும் ஒப்புக் கொள்ள வேண்டும்.


venugopal s
ஜூலை 07, 2025 09:04

வயிற்றெரிச்சல் அதிகமானால் அல்சர் வந்து விடும், கவனமாக இருங்கள்!


vivek
ஜூலை 07, 2025 10:04

பர்னால் இருக்கு...உனக்கு வேணுமா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை