உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிடி ஆயோக் கூட்டத்துக்கு சென்ற முதல்வருக்கு பாராட்டு: பா.ஜ.,

நிடி ஆயோக் கூட்டத்துக்கு சென்ற முதல்வருக்கு பாராட்டு: பா.ஜ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுக்கோட்டை: பா.ஜ., மூத்த தலைவர் ராஜா அளித்த பேட்டி:ஆப்பரேஷன் சிந்துார் வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தது ஆகாஷ். டாஸ்மாக் விவகாரத்தில் அறிவாலயத்தை அதகளப்படுத்த போவதும் ஆகாஷ் தான். அமலாக்கத் துறையின் விசாரணை சரியாகவே உள்ளது. கோடைக்கால விடுமுறைக்கு பின் நடைபெறும் வழக்கு விசாரணையின் போது, உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும்.தமிழகத்தில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் போதை தான் மையப்புள்ளி. தமிழகத்தில் காவல் துறை உயர் அதிகாரிகள், அமைச்சர்கள், அரசு அலுவலக உயர் அதிகாரிகளின் உறவினர்கள், குடும்பத்தினர் படிக்கும் பள்ளிகள் முன்பு தான், 'சிந்தடிக் ட்ரக்' அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.கடந்த மூன்று ஆண்டுகளாக, 'நிடி ஆயோக்' கூட்டத்துக்கு செல்லாத முதல்வர் ஸ்டாலின், இம்முறை சென்றிருப்பது பாராட்டுக்குரியது.இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Narayanan
மே 26, 2025 13:24

உச்ச நீதிமன்றத்திற்கும் அங்குள்ள நீதிபதிகளுக்கும் ஒரு வேண்டுகோள். தமிழகத்தில் இருந்து வரும் எந்த வழக்கிற்கும் தடையோ, தள்ளுபடியோ செய்யாதீர்கள். தமிழகம் ஊழல்பாதையில் தள்ளாடிவருகிறது. மாநிலஅரசு அளிக்கும் எந்த ஆவணமும் உங்களுக்கு சரியாகப்படுவதாக உணர்த்தவே கபில் சிபில் போன்ற வழக்குரையாளர்கள் மக்கள் வரிப்பணத்தில் ஆட்சியாளர்கள் அனுமதியுடன் வருகிறார்கள். எல்லாவற்றிக்கும் உங்களின் சுய அடையாளத்தை பிரயோகித்து தீர்ப்பளியுங்கள். மக்களின் கடைசி நம்பிக்கை உச்சநீதிமன்றம். அதை அரசியல்வாதிகளிடம் அடகு வைக்காதீர்கள் .


Barakat Ali
மே 26, 2025 10:23

ரகசிய உறவின் வெளிப்பாடோ ????


Venkatesan
மே 26, 2025 13:17

அந்த ராகம் பேச்சு வார்த்தை...


Kalyanaraman
மே 26, 2025 08:37

ராணுவ ஆகாஷ் பாகிஸ்தானை துவம்சம் செய்தது. இந்த ஆகாஷ் திமுகவையே துவம்சம் செய்யப் போகிறதோ??


அப்பாவி
மே 26, 2025 06:22

போடுங்க. அறிவாலயம் என்ன தமிழகத்தின் மேலேயே ஆகாஷை ஏவுங்க.


ராஜ்பாபு
மே 26, 2025 06:20

போறும் போறும்..உப்பு பெறாத விஷயத்துக்கெல்லாம் பாராட்டு. உங்க கூட்டாளி ரெய்டுக்கு பயந்துதான் போனாருன்னு கலாய்க்குறாரு.


சமீபத்திய செய்தி