உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குண்டர்களை அனுப்பும் பா.ஜ., துணை போகும் போலீஸ்: ஆதிஷி

குண்டர்களை அனுப்பும் பா.ஜ., துணை போகும் போலீஸ்: ஆதிஷி

புதுடில்லி:“குண்டர்களை அனுப்பி ஆம் ஆத்மி கட்சியினர் மீது பா.ஜ., தாக்குதல் நடத்துகிறது. இதை தேர்தல் ஆணையம். டில்லி மாநகரப் போலீஸ் கண்டுகொள்வதில்லை,”என, முதல்வர் ஆதிஷி சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.கல்காஜி தொகுதியில் போட்டியிடும் முதல்வர் ஆதிஷி, நிருபர்களிடம் கூறியதாவது:நம் நாட்டின் ஜனநாயகம் இப்போது தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் கைகளில் தான் இருக்கிறது. பா.ஜ., வெளிப்படையாகவே குண்டர்களை அனுப்பி ஆம் ஆத்மி கட்சியினர் மீது தாக்குதல் நடத்துகிறது. ஆனால், பா.ஜ., குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய டில்லி மாநகரப் போலீஸ், அவர்களைப் பாதுகாத்து வருகிறது. இதுபற்றி புகார் செய்பவர்கள் மீது தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்கிறது.கல்காஜி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் ரமேஷ் சிங் பிதுரி மற்றும் அவரது குடும்பத்தினர் ஆம் ஆத்மி தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஆனால், போலீசார் அதை வேடிக்கைதான் பார்க்கிறார்களே ஒழிய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.அதேநேரத்தில் டில்லி மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். அதற்குரிய பதிலை தேர்தலில் மக்கள் சொல்வார்கள். ஆம் ஆத்மியின் இலவச திட்டங்களை நிறுத்த வேண்டும் என்றுதான் பா.ஜ., இந்தக் குறுக்கு வழிகளில் இறங்கியுள்ளது.ஆம் ஆத்மி கட்சி ஏற்கனவே ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் 25,000 ரூபாய் சேமிக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மீண்டும் ஆட்சி அமைத்தவுடன் அது, 35,000 ரூபாயாக உயரப் போகிறது. இந்தத் திட்டங்கள்தான் பா.ஜ.,வுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை