உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ., மாநில நிர்வாகிகள் பட்டியல் அறிவிப்பு குஷ்புக்கு பொறுப்பு; விஜயதரணிக்கு இல்லை

பா.ஜ., மாநில நிர்வாகிகள் பட்டியல் அறிவிப்பு குஷ்புக்கு பொறுப்பு; விஜயதரணிக்கு இல்லை

சென்னை: தமிழக பா.ஜ.,வில் புதிய நிர்வாகிகளை, அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். குஷ்பு, வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட, 14 பேர் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, நாகேந்திரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவின் ஒப்புதலுடன், பா.ஜ.,வுக்கு புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுகின்றனர்' என, தெரிவித்துள்ளார். 14 துணைத் தலைவர் சக்கரவர்த்தி, வி.பி. துரைசாமி, கே.பி. ராமலிங்கம், கரு நாகராஜன், சசிகலா புஷ்பா, கனகசபாபதி, டால்பின் ஸ்ரீதர், ஏ.ஜி.சம்பத், பால் கனகராஜ், ஜெயபிரகாஷ், மா.வெங்கடேசன், கோபால்சாமி, குஷ்பு சுந்தர், என்.சுந்தர். 5 பொதுச்செயலர்கள் பாலகணபதி, ராம சீனிவாசன், கருப்பு முருகானந்தம், கார்த்தியாயினி, ஏ.பி.முருகானந்தம். 15 மாநிலச் செயலர்கள் கராத்தே தியாகராஜன், வெங்கடேசன், மலர்க்கொடி, சுமதி வெங்கடேசன், மீனாட்சி, சதீஷ் குமார், மீனா தேவ், வினோஜ் செல்வம், அஸ்வத்தாமன், ஆனந்தபிரியா, பிரமிளா சம்பத், கதளி நரசிங்கபெருமாள், நந்தகுமார், ரகுராமன், அமர் பிரசாத் ரெட்டி. அணித் தலைவர்கள் இளைஞரணி -- எஸ்.ஜி.சூர்யா, மகளிரணி -- கவிதா ஸ்ரீகாந்த், ஓ.பி.சி., அணி -- வீர திருநாவுக்கரசு, எஸ்.சி., அணி - - சம்பத்ராஜ், எஸ்.டி., அணி -- சுமதி, விவசாய அணி -- ஜி.கே.நாகராஜ், சிறுபான்மையினர் அணி -- ஜான்சன் ஜோசப். புதிய பொறுப்பு கடந்த 2014ல் இருந்து மாநில அமைப்பு பொதுச்செயலராக இருக்கும் கேசவ விநாயகன், அதே பொறுப்பில் தொடர்கிறார். மாநில துணைத் தலைவராக இருந்த நாராயணன் திருப்பதி, தலைமை செய்தித் தொடர்பாளராகவும், தேசிய துப்புரவு பணியாளர் ஆணையத் தலைவராக இருந்த எழுத்தாளர் மா.வெங்கடேசன் மாநில துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநிலப் பொருளாளராக எஸ்.ஆர்.சேகர், இணைப்பொருளாளராக சிவசுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2021ல் மாநிலப் பொதுச்செயலர் பதவியிலிருந்து விலகிய கே.டி.ராகவன், மாநில பிரிவு அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சரத்குமாருக்கு இல்லை தனது சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜ.,வுடன் இணைத்த சரத்குமார், காங்கிரசிலிருந்து எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.,வில் இணைந்த விஜயதரணி ஆகியோருக்கு, எந்தப் பதவியும் அளிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

NotYourPal
ஜூலை 31, 2025 17:31

என்ன நடக்குது இங்க


NotYourPal
ஜூலை 31, 2025 17:30

ஓ அப்படியா விஷயம்


sathya moorthy
ஜூலை 31, 2025 13:33

சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகள் மற்றும் பணபலம் அடியாட்கள் பலம் உள்ளவர்கள் மட்டுமே பொறுப்பில் நியமிக்கப்படுகிறார்கள். கட்சிக்காக உண்மையாக உழைக்கும் எவருக்கும் எந்தக் கட்சியும் பதவி அளிப்பதில்லை.


Balasubramanyan
ஜூலை 31, 2025 11:09

She has to wait. She will be recognised.


Mani . V
ஜூலை 31, 2025 03:39

குஷ்புவும், நம்ம ஐந்து கட்சி அமாவாசை செந்தில் பாலாஜிக்கு கொஞ்சமும் சளைத்தவரில்லை கட்சி தாவுவதில்.


முக்கிய வீடியோ