உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓட்டுத்திருட்டு செய்திருந்தால் தி.மு.க., ஆளுங்கட்சியாக வந்திருக்க முடியுமா பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி

ஓட்டுத்திருட்டு செய்திருந்தால் தி.மு.க., ஆளுங்கட்சியாக வந்திருக்க முடியுமா பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி

அவனியாபுரம்:''நாங்கள் ஓட்டுத் திருட்டு செய்திருந்தால் தி.மு.க., ஆளுங்கட்சியாக வந்திருக்க முடியுமா,'' என, மதுரையில் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். அவர் கூறியதாவது: ஓட்டுத் திருட்டு நடந்ததாக காங்., எம்.பி., ராகுல் கூறி வருகிறார். அவர்கள் காலத்தில்தான் நடந்தது. நாங்கள் ஓட்டுத்திருட்டு செய்திருந்தால் தி.மு.க., ஆளுங்கட்சியாக வந்திருக்க முடியாது. மத்தியில் தி.மு.க., அங்கம் வகித்த காங்., ஆட்சியின் போது இலங்கையில் எத்தனை மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிரதமர் மோடியின் ஆட்சியில் ஒரு மீனவர் கூட சுட்டுக்கொல்லப்படவில்லை. துாக்கு தண்டனைக்கு செல்ல இருந்தவரை பிரதமர் மோடி மீட்டுக் கொண்டு வந்தார். தற்போதும் இலங்கையில் இருக்கக்கூடிய தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தேர்தலை சந்திக்காமல் அரசியலுக்கு வந்திருக்கிறார். வந்தவுடன் ஆட்சிக்கு வந்து விடுவோம் என நினைக்கிறார். தமிழக மக்கள் எதை வைத்து அவரது கட்சிக்கு ஓட்டளிப்பார்கள். முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பா.ஜ.,வில்தான் உள்ளார். புதிய கட்சி தொடங்க போகிறார் என்று போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. இதுபோன்ற செய்திகளை பரப்புவது தான் ஊடகத்தின் வேலையா அல்லது தி.மு.க., வின் வேலையா. அல்லது தி.மு.க., கேட்கச் சொல்லித்தான் ஊடகங்கள் கேட்கின்றனரா. அந்த போஸ்டர் யார் ஓட்டியது எனத்தெரியவில்லை. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் உள்ளது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் தினகரன் கூட்டணிக்கு வந்தால் நாங்கள் சேர்த்துக்கொள்வோம். பிரதமர் மோடி பலவீனமானவர் என காங்., எம்.பி., ராகுல் கூறி வருகிறார். அமெரிக்கா வரி விதித்ததற்கு பின் பிரதமர் மோடி அதை திறமையாக சரி செய்தார். அதற்கு அவரது பலம் தான் காரணம். அவர் எப்போதுமே பலமானவர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை