உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இடைத்தேர்தலில் போட்டி: முடிவு எடுக்க திணறும் பா.ஜ.,

இடைத்தேர்தலில் போட்டி: முடிவு எடுக்க திணறும் பா.ஜ.,

சென்னை: தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்து வரும் பா.ஜ., ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடலாமா அல்லது வேண்டாமா என்ற முடிவை எடுக்க முடியாமல் திணறி வருகிறது. இதுதொடர்பாக, டில்லி மேலிடத்திடம் ஆலோசனை கேட்டு, செயல்பட முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4l18joeu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தி.மு.க., அரசின் தவறுகள், அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தான் தைரியமாக கூறி வருகிறார். சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான விவகாரத்தை கண்டித்து, அண்ணாமலை நடத்திய தொடர் போராட்டங்களை அடுத்து தான், அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதற்கு பின்பே, அரசுக்கு எதிராக, அ.தி.மு.க.,வும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது.ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளங்கோவன் மறைவை அடுத்து, அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை பிரதான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க, இருந்தாலும், பா.ஜ., தான் உண்மையான எதிர்க்கட்சி போல் களத்தில் போராடுகிறது. எனவே, 'ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும்; இல்லையெனில் பா.ஜ.,வுக்கு தைரியம் கிடையாது என்று தி.மு.க.,வினர் விமர்சிப்பர்' என, கட்சி தொண்டர்கள் கருதுகின்றனர்.அதேசமயம், 'ஆளுங்கட்சியான தி.மு.க., வாக்காளர்களை கவர அதிக, 'கவனிப்பு' செய்யும்; அதை, பா.ஜ.,வை விட பண பலம், தொண்டர் பலம் அதிகம் உள்ள அ.தி.மு.க.,வே எதிர்கொள்ள அச்சப்படும் சூழலில், பா.ஜ., போட்டியிட வேண்டாம்; அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் பார்த்து கொள்வோம்' என்று, மூத்த நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.இதற்கிடையே, இடைத்தேர்தலில் கட்சியின் முடிவை தெரிந்துகொள்ள மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினர்.அதற்கு, 'இந்த விவகாரம் தொடர்பாக டில்லி மேலிடத்தின் கவனத்திற்கு எடுத்து சென்று, போட்டியிட சொன்னால் போட்டியிடுவோம்; இல்லை என்றால் வேண்டாம்' என, மாநில நிர்வாகிகள் கூறியுள்ளனர்.மேலிடத்திடம் கேட்டு, அதன் முடிவு தெரிந்ததும், விரைவில் பா.ஜ.,வின் நிலைப்பாடு என்ன என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

Sampath Kumar
ஜன 12, 2025 11:03

ஆளே இல்லாத டி கடையில் ஏன் டி ஆத்துறீங்க போங்க பொய் வேறு வேலையை பாருங்க


RAKKUPANDIAN
ஜன 12, 2025 09:13

Either win nor lose BJP should con in this by election if not then the vote bank of BJP will go down further


Laddoo
ஜன 11, 2025 17:18

அண்ணா விடாதீங்க நீங்க ஒன்னும் பத்துத் தோல்வி பல்நிசாமியில்லே. உங்களிடமுள்ள அத்தனை அஸ்திரத்தையும் பயன் படுத்துங்க. உங்க பின்னாலே மக்கள் உள்ளனர். "வெற்றி நிச்சயம் வேத சத்தியம்"


venugopal s
ஜன 11, 2025 17:02

இதனால் தான் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக மீது தமிழக மக்களுக்கு நம்பிக்கை இல்லை. தேசிய கட்சிகளின் மாநில தலைவர்கள் முடிவெடுக்கும் அதிகாரம் இல்லாத டம்மிகளாக இருந்தால் அவர்கள் வெற்றி பெற்று முதல்வர் ஆனால் மட்டும் மக்கள் நலனுக்காக என்ன கிழித்து விடுவார்கள்? மாநில நலனுக்கான எல்லா முடிவுகளையும் தமிழகத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத, அக்கறை இல்லாத டெல்லியில் முடிவுகள் எடுக்க வேண்டும் என்றால் மாநில நலன் மற்றும் மாநில உரிமைகள் காணாமல் போய் மக்களை அடிமைகளாக மாற்றி விடுவார்கள்!


kantharvan
ஜன 11, 2025 14:22

பாஜகவிற்கு வோட் பறிபோய் விடுமே? பருவாயில்லியா?


S.V.Srinivasan
ஜன 11, 2025 13:17

அ தி மு காவுடன் கூட்டணி வைப்பதற்கு பதில் பிஜே பி தனித்து நிற்கலாம் தோற்றாலும் பரவாயில்லை.


s.sivarajan
ஜன 11, 2025 12:50

ப ஜ க இந்த இடைத்தேர்தல்ல அ தி மு க வுக்கு ஆதரவு தெரிவிச்சா வர சட்டசபை தேர்தல்ல கூட்டணி வைக்க உதவிய இருக்கும்


Laddoo
ஜன 11, 2025 11:34

தமிழ் நாட்டில் பாஜக என்றால் அண்ணாமலைதான். வெகு சொற்ப சீனியர்கள். கண்டிப்பாக போட்டியிடணும். வருமான வரித்துறை, அமலாக்கத்துறை கண்டிப்பாக இறக்கணும். அதிகாரிகள்/அமைசர்களை இந்நேரம் பார்த்து வேட்டையாடணும். முள்ளை முள்ளால் எடுக்கோணும்


Narayanan Muthu
ஜன 11, 2025 11:04

துணிந்து போட்டியிடுங்க தலைவா. வந்தா நோட்டா போனா டெபாசிட்டு இதுக்கு மேல என்ன ஆகிவிட போகுது.


kulandai kannan
ஜன 11, 2025 10:54

கண்டிப்பாகப் போட்டியிட வேண்டும். தோல்வி மேல் தோல்விகண்ட கட்டுமரமே தேர்தலை புறக்கணித்ததே இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை