சிவகங்கை வாரச்சந்தையில் பா.ஜ., வர்த்தக பிரிவு செயலாளர் கொலை; 5 பேர் கைது
சிவகங்கை; சிவகங்கையில் பா.ஜ., வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளரும், டூவீலர் மெக்கானிக்குமான சதீஷ்குமார் 49, கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை பா.ஜ., வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் 51. சிவகங்கை வாரச்சந்தைக்குள் உள்ள நகராட்சி கடையில் டூவீலர் மெக்கானிக் ஷாப் நடத்தி வருகிறார். இவருக்கு உதவியாளராக மணிபாரதி பணிபுரிந்தார். இவர்கள் இருவரும், கடைக்கு பின்னால் ரூம் எடுத்து தங்கியுள்ளனர். இவர்களது அறைக்கு அருகில் உள்ள அறையில் டிரம்செட் வாசிக்கும் திருப்புத்துார் அருகே வடவன்பட்டி சேகர் மகன் செந்தமிழ்செல்வன் 19, திருப்புத்துார் குறிஞ்சிநகர் குணசேகரன் மகன் ஆனந்த் 19, மதுரை மாவட்டம், பட்டூர் மாயழகன் மகன் அன்பரசன் 25, கருப்பையா மகன் பூபதி என்ற வாண்டு 19, இவரது சகோதரர் கண்ணன் 20, ஆகியோர் தங்கி உள்ளனர். நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு டிரம்செட் வாசிக்கும் 5 பேர் மது அருந்தியுள்ளனர். அவர்களுடன் மணிபாரதியும் மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களுக்கும், மணிபாரதிக்கும் தகராறு ஏற்பட்டது. சதீஷ்குமார் விலக்கி விட சென்றார். அப்போது 5 பேரும் தள்ளிவிட்டதில் சதீஷ்குமார் 49, கீழே விழுந்து காயமடைந்தார். சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சதீஷ்குமார் இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து செந்தமிழ்செல்வன், ஆனந்த், அன்பரசன், வாண்டு, கண்ணன் ஆகியோரை இன்ஸ்பெக்டர் அன்னராஜ் கைது செய்தார்.