உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்

விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தூத்துக்குடி: விஜயை எப்படியாவது கூட்டணிக்குள் இழுத்துவர பாஜ முயற்சி செய்கிறது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.திருச்செந்தூரில் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது: நடிகர் விஜய்க்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது என்று அவர் கேட்டார். அதனால் பாதுகாப்பு கொடுத்து இருக்கின்றனர். எனக்கு பாதுகாப்பு தேவையில்லை. நான் கேட்டாலும் கொடுக்கப் போவதில்லை. ஏற்கனவே விஜய்க்கு அண்ணாமலைக்கு பாதுகாப்பு கொடுத்து இருக்கின்றனர். கரூர் சம்பவத்தில் மக்களுக்குத் தான் பாதிப்பு விஜய்க்கு பாதிப்பு இல்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=p0s7rkjc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

கூட்டம் நடத்துங்க!

ஒரு இடத்தை வாங்கி கூட்டம் நடத்தி இருக்கலாம் தெருக்களில் பிரசாரத்திற்கு செல்லும் போது நெரிசல் ஏற்படத்தான் செய்யும். இது மாதிரியான பிரசாரங்களை எல்லோரும் மாற்றிக் கொள்வது நல்லது தான். மேலை நாடுகள் போல் அறிவித்து ஒரு குறிப்பிட்ட நேரம் தலைவர்கள் பேச அனுமதி வழங்கலாம். யாருடையது ஏற்புடையது என்பது குறித்து மக்கள் வாக்களிப்பார்கள். பாஜ விஜய்க்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளது. அது கட்சியின் முடிவு. விஜய் கரூருக்கு வந்ததால் தான் அந்த கூட்டம். அதனால் அந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். பழியை போலீசார், அரசு ஏற்க வேண்டும் என்று, எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்வதால் தான் சிக்கல் வருகிறது.

கொடுமை

மாறி மாறி ஒருத்தருக்கு ஒருவர் பழி போட்டுக் கொள்வது உயிரிழப்பை விட கொடுமையாக உள்ளது. விஜயை எப்படியாவது கூட்டணிக்குள் இழுத்துவர பாஜ முயற்சி செய்கிறது. விஜய்க்கு ஆதரவாக செயல்படுகிறது. விஜய் மாநாடு நடத்துவது வரை நாங்கள் வாழ்த்தினோம். அதில் கொடுமை என்னவென்றால் தமிழ் தேசியமும், திராவிடமும் ஒன்று என்று சொல்வது போல் இருந்ததால் எதிர்த்தோம். தமிழர் பிரதமர் ஆவது அரசியலமைப்பில் வாய்ப்புள்ளது. எதார்த்தத்தில் இல்லை. தமிழர்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பத்து ஆண்டுகள் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார்.

சுழற்சி முறையில் பதவி

மன்மோகன்சிங், சிதம்பரம் இரண்டு பேருமே பொருளாதாரம் படித்தவர்கள். 5 வருடம் சிதம்பரத்தையும், 5 வருடம் மன்மோகன் சிங்கையும் பிரதமராக ஆக்கி இருக்கலாம். காங்கிரஸ் கட்சி செய்யவில்லை. நரசிம்மராவ், தேவகவுடாவுக்கு பிரதமர் பதவி கொடுத்தார்கள். மலையாளி மற்றும் தமிழனுக்கு மட்டும் கொடுக்கவில்லை. அப்படியே கொடுத்தாலும், ஜனாதிபதி போன்ற பதவிகள் தான் கொடுப்பார்கள். அதற்கு ஒரு காலம் வரும். எதிர்காலத்தில் சுழற்சி முறையில் பிரதமர் பதவியை கொண்டு வர வேண்டும். இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

SRIDHAAR.R
அக் 05, 2025 08:01

நீங்க ஏன் பதறுகறீரகள் யாருக்காக? அமைதி அமைதி


வாய்மையே வெல்லும்
அக் 04, 2025 23:09

எனக்கென்னவோ சீமான் தனிக்காட்டு ராஜா சினிமா படத்தை சீரியசாக எடுத்துட்டு கட்சியை நடத்துறாரு போல இருக்கு. இப்படியே போச்சுதுன்னா அம்பேல் தான் மாமோய் ..இந்த தேர்தலிலும் காலூன்றாவிட்டால் பொய்க்கால் குதிரைக்கு சமானம் உங்க கட்சி.. திண்டுக்கல் பூட்டு என்செலவிலேயே உங்க கட்சிக்கு மூடுவிழா நடத்த வேண்டியிருக்கும்


ராமகிருஷ்ணன்
அக் 04, 2025 21:32

தேர்தல்களில் உங்களின் தகுதி, தராதரம் தெரிந்த பின்னரும் தும்பி சில்லுண்டிகள் டிவிக்க போயிட்டாங்க. உமது கட்சி 4 சதம் கூட ஓட்டு வாங்க வாய்ப்பில்லை ராசா. கையை தூக்கி, கழுத்து நரம்பு புடைக்க காட்டு கத்தல் கத்துறதுல பைசாவுக்கு பிரோசனம் இல்லை


யாரோ
அக் 04, 2025 21:01

வேணா நீங்களும் சேந்துக்கோங்க அவங்களோட. மொத்த 234 ம் அப்படியே உங்களுக்குத் தான். தனித்தனியா நின்னு மீண்டும் விடியல் 2.0 ஆட்சி வரத்தான் நீங்க எல்லாம் பாடுபடுறீங்க...


T.sthivinayagam
அக் 04, 2025 19:59

விஜய் மேட்டர் முடிந்தது...அடுத்து தினகரன் ,ஓபிஸ் மேட்டர் தான்


Kjp
அக் 04, 2025 21:46

மேட்டர் எங்கே முடிந்தது. இனி தான் திமுகவுக்கு இருக்குது தலைவலி.. அவர் விஜய் அல்ல. ஜோசப் விஜய்.


Vivek
அக் 05, 2025 05:29

கடைசியில் மக்கள் உன் திராவிட கும்பலை முடித்து வைப்பார்கள்..


V Venkatachalam
அக் 04, 2025 19:44

வரட்டு தவக்களைக்கு இந்த தேர்தலில் ஓட்டு குறைந்து போகும் என்கிற பயம். திருட்டு தீய முக காரன்களை விட வரட்டு தவக்களைக்கு பயம் ஜாஸ்தியா இருக்கு. ப்ளாப் ப்ளாப்....


SIVA
அக் 04, 2025 19:39

இன்று முதல் சாட்டை நாம் கட்சி தலைவர் ஆகின்றார் , ஐந்து ஆண்டுகளுக்கு பின் வேறு ஒருவர் தலைவர் , யாரு யாருகூட கூட்டணி வைச்சா உங்களுக்கென்ன , நீங்கள் கூட்டணி வைக்கம்மால் உங்கள் கட்சியில் நீங்கள் ஒருவர் மட்டுமே சம்பாதிக்க நினைக்கின்றீர்கள் அதே போன்று அனைவரும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை...


Rameshmoorthy
அக் 04, 2025 18:49

why this person panicking, you please continue doing what you are


Anbuselvan
அக் 04, 2025 18:33

அதில் என்ன தவறை நீர் கண்டுபிடித்தீர்? மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமெனில் பதவியும் அதிகாரமும் வேண்டும். இவர் இப்போதைய சூழ்நிலையில் தனித்து போட்டி இட்டால் ஆட்சியை பிடிக்க முடியாது, எதிர் கட்சி தலைவரும் ஆக முடியாது - உங்களை போல் குறைந்த சதவிகித வாக்கு பெற்று குறைந்த அளவில் சட்டசபை உறுப்பினர்களை பெறுவதை விட திரு சீமான் அவர்களே உங்களது வாக்கு வாங்கி உயர்வது பாராட்டக்குரியது. ஆனால் ஒரு சட்டசபை உறுப்பினர் கூட உங்களிடம் இல்லையே? இருபது முதல் முப்பது சட்டசபை உறுப்பினர்களை பெற்றால் மாநில அளவிலும் அரசின் ஆதரவு இருக்கும் மத்திய அளவிலும் அரசின் ஆதரவு இருக்கும். நல்லதுதானே? உங்கள் வழி தனி வழி - பாராட்டுக்குரியது ஆனால் அது வெறும் எட்டு சுரைக்காய் அளவில்தான் உள்ளது என்பதை மறக்காதீர்கள். மக்கள் மனம் மாற வெகு பல ஆண்டுகள் ஆகும் .சில சமயம் நூறு வருடங்கள் கூட ஆகும். திரு விஜய் அவர்களுக்கு இந்த ஒரு சந்தர்ப்பம் கிடைத்து உள்ளது. அதை அவர் பயன்படுத்தி கொண்டால் அவரது கட்சி விரைவாக வளரும்.


PATTALI
அக் 04, 2025 17:56

பிஜேபி முயற்சிசெய்யமல் பிறகு என்ன செய்வார்கள். விஜய் அரசியலுக்கு வரும் வரை திராவிட கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளையும் குற்றம் சொல்லிக் கொண்டு இருந்த சீமான், அவர்களையெல்லாம் அப்படியே விட்டுவிட்டு இப்போதெல்லாம் எங்கே விஜய் வெற்றிபெற்றுவிடுவாரோ என்ற பொறாமையில் இதுவரை ஆட்சிக்கு வராத விஜயை பற்றி மட்டுமே குறைகூறிக்கொண்டிருப்பது அசிங்கமாக இருக்கிறது. இது முழுக்கமுழுக்க விஜய் மீதான காழ்புணர்ச்சியின் உச்சமாக தோன்றுகிறது.சீமான் இப்படி மாறும்போது, பிஜேபி அப்படித்தானே முயற்சிக்கும்.


புதிய வீடியோ