உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிவா மன்னிப்பு கேட்காவிட்டால் முதல்வருக்கு கருப்பு கொடி

சிவா மன்னிப்பு கேட்காவிட்டால் முதல்வருக்கு கருப்பு கொடி

துாத்துக்குடி: மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் குறித்து தி.மு.க., துணை பொதுச் செயலர் சிவா எம்.பி., பேசிய கருத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், சிவா எம்.பி.,யை கண்டித்து துாத்துக்குடியில் காங்., மாநில பொதுக்குழு உறுப்பி னர் பெருமாள்சாமி தலைமையில் நேற்று ஆர்ப் பாட்டம் நடந்தது. அப்போது, சிவா எம்.பி., யின் போட்டோவை வைத்து, அதில், நிர்வாகிகள் சிலர் செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடித்தனர். பெருமாள்சாமி கூறியதாவது: காமராஜர் குறித்து பேச திருச்சி சிவாவுக்கு அருகதை இல்லை. சிவா எம்.பி.,யின் ஒழுக்கம் ஊருக்கே தெரியும். முதல்வர் அவரை கண்டித்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும். இல்லையென்றால், எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் துாத்துக்குடி வரும் முதல்வருக்கு கருப்புக்கொடி காட்டுவோம். சிவா எம்.பி., பேசியதற்கு மட்டுமே எங்கள் எதிர்ப்பு. வேறு எந்த நோக்கமும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

S Kumar
ஜூலை 25, 2025 11:07

காங்கிரஸ் தலைவர்கள் திமுகவின் அடிமைகள். ரோஷம் உள்ள சில தொண்டர்கள் போராட்டத்தால் எந்த பயனும் இல்லை


Bhaskaran
ஜூலை 25, 2025 05:26

இவரை உடனேயே கட்சியிலிருந்து பெருந்தகை கல்தா கொடுப்பது உறுதி


VENKATASUBRAMANIAN
ஜூலை 24, 2025 09:55

தொண்டர்களுக்காவது ரோசம் இருக்கிறதே .


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 24, 2025 07:08

என்னப்பா காங்கிரஸ் தொண்டர்ஸ் ..இப்படி இறங்கிடீங்க .. வற்புறுத்தி மன்னிப்பு கேட்க வைக்கிறீங்க ... சிவசுப்ரமணியம் தன் தவறை உணர்ந்திருந்தால் அன்றே மன்னிப்பு கேட்டிருப்பார் .


நிக்கோல்தாம்சன்
ஜூலை 24, 2025 05:53

இது இன்னமும் பெரிய அளவில் ஆனால் தான் அந்த கொடுங்கோல் சக்கரவர்த்திக்கு செய்தி செல்லும்


முக்கிய வீடியோ