உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என் மீது பழிச்சொல் வைகோ குமுறல்

என் மீது பழிச்சொல் வைகோ குமுறல்

விழுப்புரம் : விழுப்புரத்தில் நடந்த ம.தி.மு.க., கூட்டத்தில் அக்கட்சி பொதுச்செயலர் வைகோ பேசியதாவது:தி.மு.க.,வுக்கு 32 ஆண்டுகள் உழைத்தேன். கொலை பழிசுமத்தி துாக்கி எறியப்பட்டேன். நீண்ட காலமாகவே துரோகங்கள் என்னை தொடர்கின்றன. செஞ்சி ராமச்சந்திரன், எல்.கணேசன் போன்றோர், பல லட்சம் பணம் பெற்றுக்கொண்டு, ம.தி.மு.க.,வை உடைத்து தி.மு.க.,வில் சேர்க்க முயன்றனர். பணத்தாசை காட்டி பொதுக்குழுவையும் கூட்டினர். ஆனால், 1,255 பொதுக்குழு உறுப்பினர்கள் என்னுடன் இருந்து கட்சியை காப்பாற்றினர். நம்மிடமிருந்த அவைத்தலைவர் ஒருவர், 350 கோடி ரூபாய் சொத்தை அபகரித்துக்கொண்டு துரோகம் செய்து விலகினார். இதுபோன்றவர்களுடன் தொடர்பு வைத்திருந்த, நம் கட்சிக்காரர் ஒருவரை துரோகி என்று தான் சொல்ல வேண்டும். அந்த நபர், வெளிநாடுகளுக்கு ரகசியமாக சென்று கட்சியை முடக்கவும் சதி திட்டம் தீட்டினார். என் மகன் துரை, கட்சிக்குள் வரக்கூடாது என்றே கூறி வந்தேன். நிர்வாகிகள் தான் கட்டாயப்படுத்தி, ஓட்டெடுப்பு நடத்தினர். அதில் ஓட்டு போட்ட 106 பேரில், 104 பேர் வரவேற்றனர். இந்த சூழலில் தான், துரை கட்சிக்கு வந்தார். ஆனால், வாரிசு அரசியல் என்ற பழிச்சொல்லிற்கு நான் ஆளாகி நிற்கிறேன். குடும்ப அரசியலை விமர்சித்து வந்த வைகோ, இப்போது தவிப்பில் இருக்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 19, 2025 07:46

யாரதுரோகி வைகோ? ..ஈழத்தமிழர்களை நம்பவைத்து ஏமாற்றிய நீங்கள் தான் துரோகி ...பிரபாகரன் இறக்கவில்லை என்று கூறி தமிழினத்தை நம்பவைத்துதுரோகம் செய்த நபர் நீங்கள் தான் ..உங்களுக்காக மரணித்த அந்த ஜீவன்களுக்கு துரோகம் செய்தவர் நீர்தான் .. உங்களுக்காக திமுகவிலிருந்து வெளியேறியவர்களுக்கு ..நீங்கள் செய்த துரோகம் போதாதா ..உங்களுடன் வந்த எல் கணேசன் , பொன் முத்து ராமலிங்கம் , திருச்சி செல்வராஜ் , மா மீனாட்சி சுந்தரம் , இலக்குமணன் , கண்ணப்பன் , செஞ்சி ராமசந்திரன் ,கம்பம் ராமகிருஷ்ணன் , சந்திர சேகரன் இவர்கள் இப்போது எங்கே .. உங்கள் துரோகம் தாங்க முடியாமல் தெறித்து ஓடிவிட்டனர் .. வைகோ என்று சொன்னாலே துரோகம் என்றுதான் அர்த்தம் ...


Mani . V
ஜூலை 19, 2025 04:46

மிஸ்டர் வைகோ, திமுக வில் இருந்து உன்னை துரோகிப் பட்டத்துடன் வெளியேற்றப்பட்ட பொழுது, உனக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களைப் பற்றி, அவர்களின் குடும்பங்கள் நிலைமை பற்றி சிறியதும் சிந்திக்காமல் கோபாலபுரம் வாழ்நாள் கொத்தடிமையாக மாறிய பச்சோந்தி, துரோகி நீர். ஏதோ குப்பியை இன்னும் வைத்துள்ளேன் என்று சொன்னாயே, அதை கடித்துத் தொலையலாம்.


சமீபத்திய செய்தி