| ADDED : நவ 19, 2024 08:04 PM
கடலூர்: கடலூரில், சாலையின் நடுவே தொங்கிக் கொண்டு இருந்த விளம்பர பலகை, டூவிலரில் வந்தவர் மீது விழுந்தது. இதில், அவர், அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.கடலூர் மாநகராட்சியில் அண்ணா பாலம் சிக்னலில் விளம்பர பலகை வைக்கப்பட்டு இருந்தது. இது திடீரென கழன்று, அந்த வழியாக டூவிலரில் வந்த புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த தணிகைநாதன்(44) என்பவர் மீது விழுந்தது. இதனால் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். பின்னால் வந்த டூவிலர்கள், ஆட்டோக்கள் உடனடியாக நின்றன. அந்த வழியாக வேறு எந்த கனரக வாகனங்களும் வரவில்லை. இதனால், அவர் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.