உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூலி தொழிலாளி உடல் பீஹாருக்கு போனது; டாக்டர் இடமாற்றம்

கூலி தொழிலாளி உடல் பீஹாருக்கு போனது; டாக்டர் இடமாற்றம்

சென்னை: திருத்தணி கூலித் தொழிலாளி ராஜேந்திரனின் சடலத்தை பீஹாருக்கு மாற்றி அனுப்பிய விவகாரத்தில் டாக்டர் இடமாற்றம் செய்யப்பட்டார்.திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த பூஜ்ஜிரெட்டிபள்ளி பகுதியைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி ராஜேந்திரன் (69). இவர் வயிற்று வலியால் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.இதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு குடும்பத்தினரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. ஆனால் ராஜேந்திரனின் குடும்பத்தினர் உடலில் மாறிவிட்டது என முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். விசாரணையில், முதியவர் ராஜேந்திரனின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது விபத்தில் உயிரிழந்த பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரின் சடலம் என தெரிய வந்தது. மேலும், அந்த இளைஞரின் சடலத்திற்குப் பதில் ராஜேந்திரனின் சடலம் பீஹாருக்கு அனுப்பி வைக்கப்பட்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து, உடனடியாக உடலுடன் திருத்தணி திரும்ப ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு போலீசார் உத்தரவிட்டனர். இந்நிலையில், அலட்சியமாக செயல்பட்ட டாக்டர் கிருஷ்ணாவை திருவண்ணாமலைக்கு பணியிட மாற்றம் செய்து, மருத்துவ கல்வி இயக்குநர் சங்குமணி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Paramasivam
ஜூன் 07, 2025 10:01

அந்த மருத்துவரையும் தவறு செய்தவர்களையும் பீகாருக்கு பணியிட மாற்றம் செய்யனும். அதுவும் அந்த சடலத்துடனேயே அனுப்பி வைக்க வேண்டும்


Varadarajan Nagarajan
ஜூன் 06, 2025 15:39

அது என்ன பணியிடமாற்றம் என்பது எந்த சட்டப்பிரிவின்படி தண்டையாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபோன்றுதான் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஊழலால் பிடிபட்டவர்களையும் பணி இட மாற்றம் செய்கின்றார்கள். இவர்கள் திருந்தி புதிய பணியிடத்தில் நேர்மையாக செயல்படுகின்றதாக யாருக்காவது தெரியுமா? இங்கு செய்ததைபோல் புதிய இடத்திலும் பொய் செய்யப்போகிறார்கல். அல்லது சரிகட்டவேண்டியவர்களை பார்த்து சரிகட்டிவிட்டு மீண்டும் அதே இடத்தில் பணியில் சேரப்போகின்றார்கள்.


vijai hindu
ஜூன் 06, 2025 13:54

பணி மாற்றம் செய்யறது பெரிய விஷயம் இல்லை அவர் ஜாலியா வேற மாவட்டத்துல போய் வேலை செய்ய போறாரு பணியிலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் அப்போதுதான் மத்த டாக்டர்களுக்கு இது எச்சரிக்கையாக இருக்கும்


Ramesh Sargam
ஜூன் 06, 2025 13:27

பணியிட மாற்றம் செய்யப்பட்ட மருத்துவர் இப்பொழுது புதியதாக பொறுப்பேற்றுள்ள இடத்தில் நேர்மையாக, சிறப்பாக பணிசெய்வாரா? பணி நீக்கம் செய்வதுதான் உத்தமான தண்டனை.


புதிய வீடியோ