உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரை: வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. போலீசார் விசாரணையில் புரளி என தெரிய வந்தது.மதுரை மாவட்ட கண்ட்ரோல் ரூம்-க்கு ஒருவர் தொடர்பு கொண்டு, திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறினார். இதைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் செல்போனில் தொடர்பு கொண்டவர் மதுரையை சேர்ந்த தமிழன்பன், மேலும் இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், இது புரளி என்றும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
அக் 17, 2024 19:38

வேலைவெட்டி இல்லாமல், பள்ளி, கல்லூரிகளுக்கும் செல்லாமல், அப்பா அம்மாவை மிரட்டி பணத்தை பெற்று அல்லது திருடி டாஸ்மாக் சரக்கு அடித்துவிட்டு, இப்படி புரளி மிரட்டல் விடுக்கிறார்கள் இன்று பல இளைஞர்கள். அதில் பலர் தமிழ் நாட்டில் உள்ள திராவிட கட்சிகளின் தொண்டர்கள். தொண்டர்கள் என்பதால் காவல்துறையும் அவர்கள்மீது கைவைக்க பயப்படுகிறது. இந்த நிலை மாறவேண்டும்.


raja
அக் 17, 2024 14:42

மாடல் ஆட்சியில் சமையல் வாயு உருளை வெடிப்பு, கஞ்சா போதை பொருட்கள் கடத்துவது விற்பனை, மது வினால் உண்டாகும் குற்றங்கள் போன்றவை இல்லை என்றால் தான் அது செய்தியாகும்


புதிய வீடியோ