உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாம்பே ஜெயஸ்ரீக்கு லாஸ்யா சூடாமணி விருது

பாம்பே ஜெயஸ்ரீக்கு லாஸ்யா சூடாமணி விருது

சென்னை: லாஸ்யா கலாசார மையம் சார்பில், சென்னை ஓ.எம்.ஆர்., துரைப்பாக்கம், ஏ.பி.எல்., குளோபல் பள்ளி அரங்கில், 'லாஸ்யா ஓ மார்கழி- - 2024' இசைவிழா நேற்று துவங்கியது. விழாவை, முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான நடராஜ் துவக்கி வைத்தார். விழாவில், கர்நாடக இசைக் கலைஞரும், பின்னணி பாடகியுமான பாம்பே ஜெயஸ்ரீக்கு, 'லாஸ்யா சூடாமணி' என்ற விருது வழங்கப்பட்டது.விழாவில், நடராஜ் பேசியதாவது:மார்கழி என்றாலே, கலை சார்ந்த நிகழ்ச்சிகள் சென்னையில் நடைபெறும். வித்தியாசமான சங்கீதத்தை உருவாக்கிய மாநகரம் என்ற பெருமையும் சென்னைக்கு உண்டு.இதுபோன்ற கச்சேரிகள் மயிலாப்பூர், தி.நகர் பகுதியில் நடைபெறும். சென்னை விரிவாக்கம் அடைந்து வரும் சூழலில், போக்குவரத்து நெரிசல் கருதி, ஓ.எம்.ஆரில் இந்நிகழ்ச்சியை நடத்துவது, அதிக பார்வையாளர்களை சென்றடையும்.இவ்வாறு பேசினார். லாஸ்யாவின் ஆலோசகர் கார்த்திக் ஸ்ரீதர் கூறியதாவது:இசை நிகழ்ச்சியை இரண்டு பாகமாக பிரித்துள்ளோம். அடுத்த தலைமுறைக்கு கலையை கொண்டு செல்லும் வகையில், மாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை, ஜூனியர் பிரிவினருக்கு வாய்ப்பு வழங்கப்படும். ஆர்வம் உள்ளவர்கள் பங்கேற்கலாம்.அதன்பின், சீனியர் கலைஞர்கள் இசை நிகழ்ச்சி நடத்துவர். இந்நிகழ்ச்சியை இலவசமாக பார்வையிடலாம். பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு கூறினார்.இந்த இசைவிழா வரும், 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை