உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காந்தி மண்டபத்தில் மது பாட்டில்கள்; தூய்மை பணி மேற்கொண்ட கவர்னர் ரவி கொந்தளிப்பு

காந்தி மண்டபத்தில் மது பாட்டில்கள்; தூய்மை பணி மேற்கொண்ட கவர்னர் ரவி கொந்தளிப்பு

சென்னை: 'காந்தி மண்டபத்தில் கூட மது பாட்டில்கள் காணப்படுகின்றன. இது வருத்தமளிக்கிறது' என கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.நம் பாரத தேசத்தை தூய்மையான, சுகாதாரமான தேசமாக மாற்றும் நோக்கத்தில் 'தூய்மை பாரதம்' என்னும் திட்டத்தை மத்திய அரசு 2014-ம் ஆண்டு தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆண்டுதோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னையில் காந்தி மண்டபத்தில் மாணவர்களுடன் இணைந்து தூய்மை பணியில் கவர்னர் ஆர்.என்.ரவி ஈடுபட்டார். அவர், நாளை (அக்.,02) காந்தி ஜெயந்தியையொட்டி, வாளியில் குப்பைகளை அள்ளி சுத்தம் செய்தார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில், கவர்னர் ரவி கூறியதாவது: மகாத்மா காந்தி சுதந்திர இயக்கத்தின் தலைவர் மட்டுமல்ல; அவர் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தவர். காந்தி மண்டபத்தில் கூட மது பாட்டில்கள் காணப்படுகின்றன. இது வருத்தமளிக்கிறது. சுத்தம் என்பது பழக்கம்; சுத்தம் இல்லாததால் பல நோய்கள் பரவுகின்றன. அன்றாட வாழ்வில் தூய்மையை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 66 )

நிக்கோல்தாம்சன்
அக் 08, 2024 15:40

அரசே விற்றுக்கொண்டிருந்தால் என்னாகும்? பல தலைமுறைகளை அழிக்கும் இந்த மதுவை அழிக்கும் திறன்தான் யாருக்கு உள்ளது ?


K V Ramadoss
அக் 03, 2024 17:37

ஒரு தரமற்ற விமர்சனம். நல்லதை சொன்னால் ஏன் இந்த ஜாலராக்களுக்கு பிடிப்பதில்லை.


Tamil Selvan
அக் 02, 2024 23:45

இதை தினசரி செய்யவும்


Ravi Kumar Damodaran
அக் 02, 2024 19:30

adidas விளம்பரம் என்று தான் முதலில் நினைத்தேன். விடுங்கப்பா. நல்லது யார் சொன்னால் என்ன?


Mahendran Puru
அக் 02, 2024 03:48

பல பல்கலைகலகங்கள் துணைவேந்தர் இல்லாமல் இயங்குகின்றன. முதலில் அதை சரி செய்யட்டும்.


venugopal s
அக் 01, 2024 21:16

நீங்கள் ஆளும் குஜராத் மாநிலத்தில் காந்தி பிறந்த போர் பந்தர் நகரில் ஊருக்கு நடுவில் சட்டத்துக்கு புறம்பாக மது பார் வைத்து நடத்துகின்றனர். அதைக் கேட்க துப்பில்லை!


rkbiran
அக் 01, 2024 20:04

டாஸ்மாக் ஸ்டாலின் வாழ்க


.Dr.A.Joseph
அக் 01, 2024 19:58

காவல் துறையை சார்ந்த காந்திகள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்,,,,,


D.Ambujavalli
அக் 01, 2024 18:58

காம்பௌண்டுக்குள்ளேயே டாஸ்மாக் கிளை ஏதாவது இருக்கிறதா என்று கவனித்தாரா ? பாவம், 'மதுப்பிரியர்கள் ' எங்கிருந்தோ சிரமப்பட்டு வாங்கி வந்து குடிக்கும் நிலைக்கு அவர்களை விட்ட அரசை கண்டிக்கிறேன் இனி, காந்தி, ராஜாஜி, காமராஜர் நினைவிடங்களில் கண்டிப்பாக பார் உடன் கூடிய கடைகள் திறந்து உதவ வேண்டும் இதுதான் நாம் அவர்களுக்கு செய்யும் முதல் மரியாதை


venugopal s
அக் 01, 2024 18:29

அங்கே அவருடைய சொந்த மாநிலமான பீகாரில் மழை வெள்ளத்தால் பதினாறு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு இது போல் அரசியல் செய்வதை விட்டு அங்கு போய் உதவி செய்தால் அவர்களுக்காவது பிரயோஜனமாக இருக்கும்!


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 01, 2024 19:21

அவர் தமிழக கவர்னர் ...... மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டியது அந்தந்த மாநில அரசுகள் .... மாநில அரசுகளுக்குப் பொறுப்பில்லை என்று கூற வருகிறீரா ???? ஓ, புலிகேசி மன்னருக்கு முன்கூட்டியே கேடயம் வழங்குகிறீரோ ???? ஆந்திராவில் மழை வெள்ளம் ஏற்பட்டால் ஓங்கோல் செல்வாரா உமது புலிகேசியார் ????


Tiruchanur
அக் 01, 2024 20:05

அதோ தவிர காந்தி மண்டபத்தில் மது பாட்டில்கள் இருப்பது அசிங்கம், அவமானம் என்பது "the vidiyal" ஆட்சி சொம்புகளுக்குபுரியாதுதான்.


சமீபத்திய செய்தி