உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாதுகாப்பு பணியில் பவுன்சர்கள் ஆபத்தானது

பாதுகாப்பு பணியில் பவுன்சர்கள் ஆபத்தானது

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்க்கு காவல் துறை, சி.ஆர்.பி.எப்., பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவரான பின், பவுன்சர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது நியாயமற்றது. த.வெ.க., மாநாட்டில், பவுன்சர்களின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது; பவுன்சர்களை அரசியலில் ஈடுபடுத்துவது மிகவும் ஆபத்தானது. அதுவும், கட்சித் தலைவரை பார்க்க வரும் தொண்டர்கள் மீது, பவுன்சர்கள் பலம் காட்டுவது மோசமானது. காங்., -- எம்.பி., ராகுல், ஓட்டு திருட்டு குறித்து மக்களுக்கு எடுத்துரைப்பதில் கவனமாக இருக்கிறார். தற்போதைய தேர்தல் கமிஷனர்கள், பா.ஜ.,வுக்கு அடிமையாக உள்ளனர். தமிழக முதல்வர் ஸ்டாலின், எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும், கண்ணியத்தோடும், கவனத்தோடும் ஆட்சி நடத்துகிறார். அவரை பொறுத்தவரை, எந்த மாநிலத்தைச் சார்ந்தவர் தாக்கப்பட்டாலும், தமிழர்கள் எங்கு தாக்கப்பட்டாலும் உடனே நடவடிக்கை எடுப்பார். -- மாணி க்கம் தாகூர் காங்., -- எம்.பி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை