பாக்ஸ் செய்தி
வாக்காளர் சிறப்பு முகாம் 2.23 லட்சம் பேர் மனு சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிக்கை: தேர்தல் கமிஷன் அறிவுறுத்தலின்படி, வாக்காளர் சிறப்பு முகாம், கடந்த 21, 22ம் தேதி, அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் நடந்தது. முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோரி, 1.18 லட்சம் பேர்; பெயர் நீக்கம் கோரி, 14 ஆயிரத்து, 3; முகவரி மாற்றம், திருத்தம், புதிய வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 91 ஆயிரத்து, 107 பேர் மனு அளித்தனர். மொத்தம், 2.23 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.