உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்டுவிரியன் தீண்டி சுயநினைவற்ற நிலையில் வந்த சிறுவன்:10 நாள் சிகிச்சையில் குணமாக்கிய அரசு டாக்டர்கள்

கட்டுவிரியன் தீண்டி சுயநினைவற்ற நிலையில் வந்த சிறுவன்:10 நாள் சிகிச்சையில் குணமாக்கிய அரசு டாக்டர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், கட்டு விரியன் பாம்பு தீண்டியதில் சுய நினைவை இழந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டு வரப்பட்ட சிறுவனை, ஈரோடு அரசு மருத்துவமனை டாக்டர்கள் 10 நாள் தொடர் சிகிச்சை அளித்து குணப்படுத்தினர்.ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பட்லுார், சொக்கநாத மணியூரை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி செல்வி. கூலி தொழிலாளர்கள். இவரது மகன் ஜெயசூர்யகுமார், 11. சிறுவன் அங்குள்ள பள்ளியில், 6ம் வகுப்பு படித்து வருகிறான்.கடந்த, 26ம் தேதி இரவு அனைவரும் வீட்டில் துாங்கி கொண்டிருந்தபோது, சிறுவன் ஜெயசூர்யகுமாருக்கு கடும் வயிற்று வலி, மூச்சுத்திணறல் ஏற்பட்டது.அந்தியூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவிக்கு பின், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.சிறுவன் மயக்கத்துடன், சுய நினைவு இன்றி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். அதேநேரம், அச்சிறுவன் துாங்கிய இடத்தில் கட்டு விரியன் பாம்பு இருப்பதை, உறவினர்கள் பார்த்து தெரிவித்தனர்.உடனடியாக சுதாரித்து கொண்ட அரசு டாக்டர்கள், சிறுவனுக்கு, விஷ முறிவுக்கான மருந்துகள் வழங்கினர். சிறுவனுக்கு சுவாசம் மற்றும் இதயத்துடிப்பு குறந்த நிலையில், 2 நாட்கள் வெண்டிலேட்டரில் வைத்தனர். 20 பாட்டில்கள் விஷ முறிவு மருந்து செலுத்தி, தொடர் சிகிச்சை அளித்தனர். 10 நாட்கள் அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சையில், சிறுவன் முழுமையாக குணம் அடைந்தான்.இதுபற்றி, அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலர் சசிரேகா கூறியதாவது:கட்டுவிரியன் பாம்பு, இரவு நேரங்களில் நடமாடுவதுடன், கடிக்கும் தன்மை கொண்டது. எனவே கிராமங்களில், கட்டுவிரியன் பாம்பு நடமாடும் பகுதியில் வசிப்போர், தரையில் படுத்து துாங்கும்போது கவனமாக இருக்க வேண்டும்.கட்டுவிரியன் பாம்பு கடித்தால் கடும் வயிற்று வலி ஏற்பட்டு, நரம்பு மண்டலம் பாதித்து உயிரிழப்பு ஏற்படும்.பாம்பு கடித்தால் உடனடியாக அருகே உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்க வேண்டும். சிறுவனுக்கு உடனடியாக சிகிச்சை வழங்கப்பட்டதால், குணமடைந்துள்ளான்.இவ்வாறு சசிரேகா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Sreenivas Jeyaraman
ஜூலை 07, 2025 22:54

இந்துமத சடங்கை கேலி செய்யும் நீ மனிதனாய் உருது பேசும் யாரிடமும் சீண்டிப்பார்... பெயரிலேயே வேஷமிடும் நபருக்கு துணிச்சல் எப்படி வரும்..??


ameen
ஜூலை 11, 2025 00:46

ஒரு இந்துத்வா நபர் கிறுஸ்ட்டியனை கிண்டல் செய்ததற்கு பதில் போட்டிருக்கிறார். இதில் முஸ்லிம் மதம் எங்கே வந்தது?


THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
ஜூலை 07, 2025 22:05

அரசு மருத்துவமனை டாக்டர்கள் என்றாலே அலட்சியமாக நினைப்பவர்களுக்கு மத்தியில் விஷப்பாம்பு கடித்து உயிருக்குப் போராடிய சிறுவனின் உயிரை பத்து நாட்கள் போராடி மீட்டெடுத்த இந்த டாக்டர்கள் மின்னும் வைரமாய் ஜொலிக்கிறார்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.


ஆதிநாராயணன், குவைத்
ஜூலை 07, 2025 20:24

டாக்டர் குழுவினருக்கு வாழ்த்துகள்


Ramkumar Ramanathan
ஜூலை 07, 2025 20:19

if they had gone to private hospitals it would have cost at least ten lakhs for the family. such a good treatment is rendered in tn govt hospitals, for free. kudos to the doctors who treated him.


T. சங்கரநாராயணன் ஈரோடு
ஜூலை 07, 2025 20:16

பாம்புகடிக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பான மருத்துவம் பார்க்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு இதுதான்


பீட்டர்
ஜூலை 08, 2025 06:44

இல்லை சங்கர நாராயணன் ஜி இரவு நேர முழு எழுப்புதல் கூட்டம் நடத்தி விடிய விடிய ஜெபம் பண்ணினால் கண்டிப்பாக எப்படி பட்ட விஷம் ( உங்களை போன்ற)என்றாலும் இறங்கிவிடும் ... 50 வருஷத்துக்கு பாம்பு பக்கத்துலயே வராதுனா பார்த்துக்கோங்க


ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 07, 2025 20:16

கடிச்ச இடத்தில் விபூதி பூசி, மிருத்யஞ்ச யாகம் பண்ணி, அந்தணர்களுக்கு பொன்னும் பொருளும் கொடுத்தால் போதும், சிவன் எறக்கிடுவான்


Veeraa
ஜூலை 07, 2025 22:23

Hello Jaihind, look at West and pray so that 72 will receive you.


Jack
ஜூலை 07, 2025 20:10

பையனை பிள்ளையார் ஆக்கிட்டாங்களே


ஈசன்
ஜூலை 07, 2025 19:59

சபாஷ். இறைவனுக்கு அடுத்த படி மக்கள் நம்புவது டாக்டரைதான். ஒரே ஒரு விண்ணப்பம் தான். டாக்டர்கள் அனைவரும் இதே போன்று எப்போதும் பொறுப்போடு வைத்தியம் பார்த்தால் ஏழை மக்கள் அவர்களை கொண்டாடுவார்கள்.


சமீபத்திய செய்தி