உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  மூளைச்சாவு அடைந்தவரால் ஏழு பேருக்கு வாழ்வு

 மூளைச்சாவு அடைந்தவரால் ஏழு பேருக்கு வாழ்வு

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த சேகரின் 61, உடல் உறுப்புகள் ஏழு பேருக்கு பொருத்தப்பட்டன. ராமநாதபுரம் கழுகூரணியைச் சேர்ந்த சேகர், டிச.,20 ல் டூவீலரில் சென்ற போது கீழே விழுந்ததில் காயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் டிச.,21 ல் அனுமதிக்கப்பட்டு டிச.,23 இரவு மூளைச்சாவு நிலையை அடைந்தார். உடல் உறுப்புகளை தானமாக தர மனைவி கஸ்துாரி முன்வந்தார். கல்லீரல் அகற்றப்பட்டு திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் திருச்சி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டன. மற்றொரு சிறுநீரகம், கருவிழிகள், எலும்பு, தோல் ஆகியவை மதுரை அரசு மருத்துவமனை நோயாளிகளுக்காக தானமாக பெறப்பட்டன. சொந்த ஊரில் சேகரின் உடலுக்கு தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் இந்தாண்டில் 3 பெண்கள், 18 வயதுக்குட்பட்டோர் என பல்வேறு விபத்துகளில் மூளைச்சாவு அடைந்த 12 பேரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன. 2 பேரிடம் இருந்து இதயம், 2 பேரிடம் இருந்து நுரையீரல் பெறப்பட்டன. அனைவரிடம் இருந்து கல்லீரல், சிறுநீரகம், கருவிழிகள் பெறப்பட்டு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ