உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லஞ்சம் வாங்குவது நாட்டு வளர்ச்சிக்கு எதிரானது: அங்கித் திவாரி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட் கருத்து

லஞ்சம் வாங்குவது நாட்டு வளர்ச்சிக்கு எதிரானது: அங்கித் திவாரி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட் கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை : திண்டுக்கல் அரசு டாக்டரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் 2018ல் வழக்கு பதிந்தனர். மதுரை அமலாக்கத்துறை இயக்குனரக தென் மண்டல துணை இயக்குனர் அலுவலக அதிகாரி அங்கித்திவாரி அலைபேசியில், 'சொத்து குவிப்பு தொடர்பாக உங்களுக்கு எதிராக புகார் வந்துள்ளது. விசாரிக்க வேண்டும்,' என சுரேஷ்பாபுவிடம் தெரிவித்தார். வழக்கை முடிக்க அங்கித்திவாரி ரூ.50 லட்சம் பேரம் பேசினார்.சுரேஷ்பாபுவிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்றதாக அங்கித் திவாரியை 2023 டிச.,1ல் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அவர், 'கைதாகி 60 நாட்களுக்கு மேலாகிறது. போலீசார் திண்டுக்கல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. அந்நீதிமன்றம் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது. அதை ரத்து செய்து ஜாமின் அனுமதிக்க வேண்டும்,' என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். இதனை விசாரித்த நீதிபதி தண்டபாணி, அங்கித்திவாரியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். நீதிபதி தனது உத்தரவில், அதிகாரிகள் லஞ்சம் பெறும் செயல் அதிகரித்துள்ளது நாட்டின் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற துறைகளில் லஞ்சம் ஊடுருவி உள்ளது சகித்து கொள்ள முடியாதது. அமலாக்கத்துறை அதிகாரிகள் லஞ்சம் பெறும் குற்றச்சாட்டை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

ponssasi
மார் 16, 2024 11:12

லஞ்சம் ஊழல் வழக்குகளில் பிடிபட்ட அனைவருக்கும் செந்தில் பாலாஜி, அங்கித்திவாரி போல நீதிமன்றம் கடுமை காட்டியிருந்தால் நாடு எவ்வளவோ சுபீஷிச்சமாக இருந்திருக்கும். ஏன் பொன்முடி, அனிதா, KKSSR. வளர்மதி ops விஷியத்தில் நீதி மாறுபடுகிறது.


venugopal s
மார் 16, 2024 10:43

செந்தில் பாலாஜிக்கு என்ன சட்டமோ அது தானே அங்கித் திவாரிக்கும்!


suresh
மார் 16, 2024 11:36

ஏன் நீங்கள் பொன்முடியை உதாரணம் காட்டவில்லை அன்கிட் திவாரிக்கு ?


ஆரூர் ரங்
மார் 16, 2024 13:32

ஆனா 10 வருஷ தண்டனை வாங்கியிருந்தால் கூட லாலுவுக்கு ஸ்பெஷல் நீண்டகால ஜாமீன். இதுக்கு பதில் கோர்ட்க்க நீண்டகால விடுமுறை விட்டு விடலாமே????. போலீஸ் கோர்ட் இல்லாமல் இருந்தால் குற்றங்களும் குறைகின்றன


Sampath Kumar
மார் 16, 2024 10:40

இது அநியாயம் அக்கிரமம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவாத அப்படியேன்றால் இனி தேர்தல் பாத்திரத்தை கட்டி வசூல் செய்யவும் வருவதில் பாதி என்று புரிந்துணருவுடன் ஹி ஹி


suresh
மார் 16, 2024 11:06

சகிக்கவில்லை . என்ன சொல்ல வருகிறார் என்றே புரிய வில்லை. ஒரு சமயம் தமிழகத்தில் இப்போது தாராளமாக கிடைக்கும் இவர்களுக்கு தான் இது இலவசமாக கிடைக்குமே


Dharmavaan
மார் 16, 2024 07:58

seiyavillai kevalamaana neethi


Dharmavaan
மார் 16, 2024 07:54

லஞ்சம் வாங்காத நீதி உண்டா இல்லையேல் ponmudi போன்றவர்கள் தண்டனையிலிருந்து தப்புவாங்களா


Dharmavaan
மார் 16, 2024 07:43

lanjam


Ramesh Sargam
மார் 15, 2024 23:44

லஞ்சம் வாங்காவிட்டால் அரசு அதிகாரிகள், ஆட்சியில் உள்ளவர்கள் வளர்ச்சி மிக மிக பாதிக்கப்படும் ஐயா ஐயா, இப்படி பொசுக்கென்று "லஞ்சம் வாங்குவது நாட்டு வளர்ச்சிக்கு எதிரானது" என்று கருத்து தெரிவித்தால்... அவர்கள் நிலைமையை கூட நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டும் ஐயா? நான் ஏதாவது தவறாக கூறி இருந்தால் என்னை மன்னியுங்கள் ஐயா...


மாணிக்சந்த்
மார் 15, 2024 23:26

எங்க ஊரில் எல்லா கெவருமெண்ட் வேலைகளுக்கும் காசு குடுத்தாத்தான் நடக்கும்கற முடிவுக்கே வந்துட்டாங்க. காசு கொள்ளையா கணக்கில் வராம சம்பாரிக்கறாங்க. குடுக்கறாங்க. காரியம் நடக்குது. இதே நிலைதான் இந்தியா முழுக்க.


Mohan
மார் 16, 2024 10:59

மன்னிக்கணும் தமிழ்நாட்டுல நடக்கிறதா வெச்சு இந்தியா பூராவும் நடக்குதுன்னு சொல்லக்கூடாது நாங்க மாநிலத்தில் இருந்திருக்கோம்


Raj
மார் 15, 2024 20:46

தமிழக அலுவலகங்களில் இறப்பு, பிறப்பு சான்றிதழ்களுக்கு எத்தனை கையூட்டு வாங்குகிறார்கள், அதெல்லாம் நம் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது இல்லையோ.


M S RAGHUNATHAN
மார் 15, 2024 20:22

நீதிபதி இந்த அதிகாரி லஞ்சம் வாங்கியதாக நான் கருதுவதால் ஜாமீன் அளிக்க முடியாது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை உடனடியாக விசாரித்து குற்றவாளிக்கு தண்டனை விதிக்கவேண்டும் என்று தீர்ப்பு கூறி இருந்தால் பாராட்டி இருக்கலாம். மேலும் இந்த அதிகாரி லஞ்சம் வாங்கி இருப்பது தெரிகின்றபடியால், லஞ்சம் கொடுத்தவரையும் வழக்கில் சேர்த்துஉச்ச நீதி மன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதிக்கு உத்தரவிடலாம்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி