உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மானியம் பெற்றுத்தர லஞ்சம்; கூட்டுறவு சங்க மேலாளர் கைது; ரூ.15.89 லட்சம் பறிமுதல்

மானியம் பெற்றுத்தர லஞ்சம்; கூட்டுறவு சங்க மேலாளர் கைது; ரூ.15.89 லட்சம் பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: மானியம் பெற்றுத்தர கைத்தறி நெசவாளர்களிடம் லஞ்சம் பெற்றதாக, கூட்டுறவு சங்க மேலாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்து, ரூ.15.89 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.கோவை, சூலுார் வதம்பச்சேரி கூட்டுறவு சங்க மேலாளராக இருப்பவர் சவுண்டப்பன், 54. இவர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு அரசிடம் இருந்து மானியம் பெற்றுத் தந்து வந்தார். அவ்வாறு மானியம் பெற்றுத்தர அவர் லஞ்சம் பெற்றுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை, அவர் பணிபுரியும் சங்கத்தில் லஞ்ச ஒழிப்பு துறை ஏ.டி.எஸ்.பி., திவ்யா தலைமையிலான போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.சோதனையின் போது, சவுண்டப்பன் அலுவலகத்தில் இருந்தார். சோதனையில், சவுண்டப்பனிடம் கணக்கில் வராத, 15 லட்சத்து, 89 ஆயிரத்து, 950 ரூபாய் லஞ்சப்பணம் இருந்தது. இதை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரிடம் இருந்தது கைத்தறி நெசவாளர்களிடம் இருந்து பெற்ற லஞ்சப்பணம் எனத் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

M R Radha
ஏப் 22, 2025 15:00

திருட்டு த்ரவிஷ எண்ணெய் அப்டியே வழியுது


Guna Gkrv
ஏப் 22, 2025 14:53

அப்படியே கொஞ்சம் நிலம் பதிவு, பட்ட வழங்கும் இடத்திற்க்கு செல்லுங்கள் இன்னும் அதிகமாக கிடைக்கும் .


Gajageswari
ஏப் 22, 2025 12:31

பிடி படுபவர்கள் குறைவு. அதில் தண்டனை பெறுபவர் மிக குறைவு. தண்டனை மிக மிக குறைவு. கடைசியாக தண்டனை நிறை வேற்ற பட்டவர்கள் 0.0001 யாரும் இல்லை


Amar Akbar Antony
ஏப் 22, 2025 11:56

இந்த இலஞ்ச அரசூழியனின் குடும்ப சொத்துக்கள் அனைத்துமே கருவூலத்திடம் ஒப்படைக்கவேண்டும். அவனை உடனே வேலையில் இருந்து விளக்கவேண்டும். செய்வீர்களா?


Ramesh Sargam
ஏப் 22, 2025 11:52

தினம் தினம் இதுபோன்ற ஊழல் செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. முதல்வர் ஸ்தாலினுக்கு இந்த ஊழல் செய்திகள் தெரியுமா? தெரிந்தும் ஏன் அவர், அந்த ஊழல்வாதிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை? அசிங்க அரசியல் செய்வதில் காலத்தை அவர் கழிக்கிறார். முதல்வர் பதவி என்கிற பொறுப்பில் உள்ளவர் இதுபோன்ற ஊழலை தடுத்து நிறுத்தவேண்டாமா?


Venkateswaran Rajaram
ஏப் 22, 2025 11:26

திராவிட மாடலிடமிருந்து பதவி உயர்வு நிச்சயம்


R VENKATARAMANAN
ஏப் 22, 2025 11:10

This is not a stray incident in Tamil Nadu. This is very familiar in all Government departments


Anantharaman Srinivasan
ஏப் 22, 2025 11:02

கூட்டுறவு சங்க மேலாளர் சவுண்டப்பனிடம் இருந்த 15.89 லட்சம் லஞ்சப்பணம் என்பது உறுதியானபின், சிறையில் தள்ளி தண்டிக்காமல் விசாரணை என்ன வேண்டிக்கிடக்கிறது?


சமீபத்திய செய்தி