உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிவகங்கையில் ஆடு திருட வந்ததாக கூறி சகோதரர்கள் அடித்துக்கொலை; கிராம மக்களிடம் போலீஸ் விசாரணை

சிவகங்கையில் ஆடு திருட வந்ததாக கூறி சகோதரர்கள் அடித்துக்கொலை; கிராம மக்களிடம் போலீஸ் விசாரணை

சிவகங்கை: தோட்டத்தில் ஆடு திருட வந்ததாக கூறி சகோதரர்கள் இருவரை கிராம மக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் சிவகங்கை நடந்துள்ளது.சிவகங்கை மாவட்டம் கட்டாணிப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது சகோதரர் விக்னேஸ்வரன். இவர்களில் மணிகண்டன் கோவை தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். நேற்று இரவு சகோதரர்கள் இருவரும் சிவகங்கை அருகே உள்ள திருமலை என்ற ஊரில் சுப்பு என்பவர் தோட்டத்துக்கு சென்றுள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mbf70k45&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சம்பந்தம் இல்லாமல் இவர்கள் அங்கு வந்திருப்பதை கண்ட ஊர் மக்கள், ஆடு திருட வந்திருப்பதாக கூறி இருவரையும் சரமாரியாக தாக்கினர். சுயநினைவு இழந்த நிலையில் விழுந்த இருவரையும் அங்கே இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர். இதில் இருவரும் சிகிச்சை பலன்றி இறந்துவிட்டனர். சம்பவம் பற்றி தகவல் அறிந்த மதகுப்பட்டி போலீசார், தாக்குதல் நடத்திய கிராம மக்கள் 10 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

என்றும் இந்தியன்
ஜூன் 03, 2025 16:28

பக்ரீத்ன்ன சும்மாவா ஆட்டு அறுப்பு திருவிழா தானே


kalyan
ஜூன் 03, 2025 11:53

அத்து மீறி எந்த ஒரு தனி நபர் வளாகத்துக்குள் போதிய அனுமதி இன்றி நுழைந்தாலும் அப்படி நுழைபவர்களை சுட்டுக்கொல்ல உரிமை கொடுக்கிறது மேற்கத்திய நாடுகளின் ஏன் சிங்கப்பூர் மலேசியாவில் கூட சட்டங்கள். அப்படி பார்க்கும்போது இறந்தவர்கள் பெயரிலும் தவறு இருப்பதாக தெரிகிறது.


Laxman
ஜூன் 03, 2025 17:50

ஆமா நீ ப்போய் பார்த்த


lana
ஜூன் 03, 2025 11:27

hi இது நல்லா இருக்கே. கொலை செய்து விட்டு பின்னர் திசை திருப்பி விடியல் ஐ காக்க இந்த ஆடு மாடு திருட்டு பட்டம் கட்டி விடலாம். இதை வடக்கே செய்தால் அது மத கொலை. இங்கு செய்தால் அது மத சார்பற்ற கொலை


naranam
ஜூன் 03, 2025 10:59

காட்டு மிராண்டிகள்! அனைவரையும் சிறையில் தள்ளி நையப் புடைக்க வேண்டும்.


Saai Sundharamurthy AVK
ஜூன் 03, 2025 09:47

"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு" என்ன, ஏது என்று தெரிந்து கொள்ளாமல் செயலாற்றும் ஊர் மக்கள் !!!


S Ramkumar
ஜூன் 03, 2025 10:58

இல்லை சார் இவர்கள் சரியாக பதில் அளித்து இருக்க மாட்டார்கள். கால்நடை வளர்ப்பு கிராம வாசிகளின் வருமானத்தின் அடி நாதம். அதில் கை வைத்தவர்கள் மீதான ஆத்திரம். ஒரு ஏக்கரில் பூசனி பயிர் செய்து விட்டு மாதம் மாதம் உழைப்பு முதலீடு போன்றவற்றை செய்து விட்டு நாளை அறுவடை சென்று பார்க்கும் பொது அதனை பூசணியும் திருட்டு போயி இருந்தால் எவ்வளவு ஆத்திரம் வரும் அதான் சார் இவர்களை இப்படி நடந்துகிறது.


புதிய வீடியோ