உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பி.எஸ்., - எம்.டெக்., சேர்க்கை; ஐ.ஐ.டி., சான்ஸிபார் அறிவிப்பு

பி.எஸ்., - எம்.டெக்., சேர்க்கை; ஐ.ஐ.டி., சான்ஸிபார் அறிவிப்பு

சென்னை - சென்னை ஐ.ஐ.டி., நேற்று வெளியிட்ட அறிவிப்பு: கிழக்கு ஆப்ரிக்காவின் சான்ஸிபார் வளாகத்தில், சென்னை ஐ.ஐ.டி., சார்பில் அமைக்கப்பட்டுள்ள கல்வி நிறுவனத்தில், பி.எஸ்.,இளநிலை மற்றும் எம்.டெக்., முதுநிலை பட்டப்படிப்புகளில், 'டேட்டா சயின்ஸ்' மற்றும் செயற்கை நுண்ணறிவு பாடப்பிரிவுகள் நடத்தப்படுகின்றன.இந்த படிப்புகளில், வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது. உலகம் முழுதும் அனைத்து நாடுகளில் வசிப்பவர்களும், zanzibar.iitm.ac.inஎன்ற இணையதளத்தில், பி.எஸ்., படிப்புக்கு ஏப்., 15 வரையிலும், எம்.டெக்., படிப்புக்கு மார்ச் 15க்குள்ளும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மாணவர்களில் பி.எஸ்., படிப்புக்கு, ஜூன் 9; எம்.டெக்., படிப்புக்கு, மார்ச் 31ல் தகுதி தேர்வு நடத்தப்படும்.இதுகுறித்து, ஐ.ஐ.டி., சான்ஸிபார் வளாக இயக்குனர் ப்ரீத்தி அகாலயம் கூறியதாவது:தெற்காசியா, கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில், மொத்தம், 38 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. விண்ணப்பிப்போருக்கு முதலில் கல்வித் தகுதியும், பின், கல்விசார் இணை செயல்பாடுகளும் பரிசீலிக்கப்படும். அதன்பின், தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, நேர்காணல் நடத்தி, மாணவர் சேர்க்கை பட்டியல் தயார் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி