உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்ஜெட் தாக்கல்: அமைச்சர்களுக்கு சிறப்பு பயிற்சி

பட்ஜெட் தாக்கல்: அமைச்சர்களுக்கு சிறப்பு பயிற்சி

சென்னை; சட்டசபையில், பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள, நிதி மற்றும் வேளாண்துறை அமைச்சர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.தவெக அரசு, மே 10ம்தேதி பொறுப்பேற்றது. 2026 - 27 ம்ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை, ஆக.5ல் தாக்கல் செய்ய உள்ளது. இதற்காக, காலை 10:00 மணிக்கு சட்டசபை கூடுகிறது. அதைத் தொடர்ந்து, வேளாண் துறைக்கான, தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சர் மரிய வில்சன் பொது பட்ஜெட், வேளாண் அமைச்சர் வினோத், வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய தயாராகி உள்ளனர். முதல்வர் விஜய் ஒப்புதல் பெற்று, பட்ஜெட்டிற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு உள்ளது. பட்ஜெட் அறிக்கை, அமைச்சர்களிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இருவரும் புதியவர்கள் என்பதால், அதை எவ்வாறு படிப்பது, எங்கெங்கு நிறுத்துவது, எங்கெங்கு உவமைகள் சொல்வது என, துறை செயலாளர்கள் மற்றும் அரசியல் பி.ஏ.,க்கள் வாயிலாக, சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஆக 04, 2026 22:30

எதிர்கட்சியினர்களுக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது எப்படி தடங்கல் செய்யவேண்டும் என்று நேற்று கழிவறையில் காவலர்களால் பிடிபட்டு, கைது செய்யப்பட்டு, பின் வெளிவந்த உதயநிதி சிறப்பு பயிற்சி கொடுப்பான். அப்பொழுது மீண்டும் ஏதாவது அசிங்கமாக பேசி மீண்டும் கைது செய்யப்படுவான்.


சமீபத்திய செய்தி