மேலும் செய்திகள்
இரும்பு திருடிய இருவர் கைது
12-Aug-2025
சென்னை:சென்னை மாதவரம் ரவுண்டானா பேருந்து நிலையத்தில், பயன்படுத்தாத 2.44 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்கள் மாயமானது குறித்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலையிலிருந்து, இரு நாட்களுக்கு முன், மாதவரம் பேருந்து நிலையத்திற்கு சிறப்பு பேருந்து ஒன்று வந்தது. அதன் நடத்துநர் முத்துகுமார் 2.44 லட்சம் ரூபாய்க்கான பயன்படுத்தாத டிக்கெட் பண்டல்களை, ஒரு பையில் போட்டு, தன் இருக்கையின் அடியில் வைத்துள்ளார். நேற்று முன்தினம், பேருந்தை மீண்டும் இயக்கியபோது, இருக்கைக்கு அடியில் வைத்திருந்த பை மாயமானது தெரிந்தது. இதுகுறித்து அவர், மாதவரம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், 'சிசிடிவி' கேமராக்கள் பதிவை வைத்து விசாரித்து வருகின்றனர். டிக்கெட் காணாமல் போய் மூன்று நாட்களுக்கு பின் புகார் அளித்தது குறித்து, போக்குவரத்து கழக அதிகாரிகளும் விசாரிக்கின்றனர்.
12-Aug-2025