உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 30 சதவீத ஊதிய உயர்வு பஸ் ஊழியர்கள் எதிர்பார்ப்பு

30 சதவீத ஊதிய உயர்வு பஸ் ஊழியர்கள் எதிர்பார்ப்பு

சென்னை,:போக்குவரத்து ஊழியர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தத்தில், 25 முதல், 30 சதவீதம் வரை உயர்வு கேட்க, தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, புதிய ஊதிய ஒப்பந்தம் செய்வதற்கான பேச்சு, சென்னை குரோம்பேட்டையில் நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது. அமைச்சர் தலைமையில் நடக்கும் பேச்சில், அதிகாரிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.இதுகுறித்து, போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: போக்குவரத்து ஊழியர்களுக்கு, 25 முதல் 30 சதவீதம் ஊதிய உயர்வு கேட்க முடிவு செய்துள்ளோம். ஓய்வூதியர்களுக்கான பணப்பலன்கள், அகவிலைப்படி உயர்வு நிலுவை ஆகியவற்றை வழங்க வலியுறுத்துவோம். சேவை நோக்கத்தோடு செயல்படும் அரசு போக்குவரத்து கழகங்களின் நஷ்டத்தை, அரசே ஏற்க வேண்டும் என்றும் கேட்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

N Sasikumar Yadhav
பிப் 12, 2025 01:37

25 % 30 %ரொம்ப குறைவு 100 % உயர்த்தி கேளுங்க .? அப்பதான் 150 % உயர்த்தி கொடுப்பாங்க . இப்ப குடுக்கிற சம்பளத்துக்கு உங்களால் முடிந்தால் வேலை பாருங்க இல்லையென்றால் ராஜினாமா செய்யுங்க . புதிய ஆட்கள் பணியாற்றட்டும் . இந்த அரசு பணியாளர்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் போதாது ஓட்டுப்பிச்சைக்காக


புதிய வீடியோ