உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரெய்டுக்கு சிக்காமல் தப்பி ஓடிய ரத்தீஷ்: வீட்டை பூட்டி சீல் வைத்தது அமலாக்கத்துறை!

ரெய்டுக்கு சிக்காமல் தப்பி ஓடிய ரத்தீஷ்: வீட்டை பூட்டி சீல் வைத்தது அமலாக்கத்துறை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டுக்கு வந்திருப்பதை அறிந்து தப்பியோடிய தொழிலதிபர் ரத்தீஷின் சென்னை எம்.ஆர்.சி., நகர் வீடு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் வீட்டருகே துாக்கி வீசப்பட்ட ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், தொழில் அதிபர் ரத்தீஷ் உடன், டாஸ்மாக் மதுக்கூடம் டெண்டர் தொடர்பாக, 'வாட்ஸாப் சாட்டிங்' செய்யப்பட்டு இருந்ததை கண்டறிந்தனர்.இந்த ரத்தீஷ், துணை முதல்வர் உதயநிதிக்கு மிகவும் நெருக்கமான நண்பர் என்பதை விசாரித்து அறிந்து கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரிடம் விசாரிக்க முடிவு செய்தனர்.பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி., நகரில், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ரத்தீஷ் வீட்டிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் சென்றனர். ஆனால், அமலாக்கத்துறை வருவதை அறிந்த அவர் ஓட்டம் பிடித்து விட்டார். எனினும் அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இன்றும் அவர் வீட்டுக்கு வரவில்லை. அமலாக்கத்துறை ரெய்டுக்கு வர இருப்பதை அறிந்து, அவர் வெளிநாடு சென்று விட்டதாக, இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.இந்நிலையில், ரித்தீஷ் வீட்டிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். வீட்டில் உள்ள பணம், நகை, ஆவணங்களை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Raghavan
மே 18, 2025 21:44

வீட்டை பூட்டி சீல் வைத்தால் போதுமா? காவல் போடப்பட்டிருக்கிறதா? உள்ளூர் போலீசாக இருந்தால் மெட்ரோ சுரங்க ரயில்பாதை போடும் மெஷினை வைத்தே சுரங்கம் தோண்டி வீட்டில் உள்ள அனைத்தையும் அள்ளிச்சென்றுவிடுவார்கள். தில்லாலங்கடி பேர்வழிகள். செந்தில் பாலாஜி தம்பி கதை போல போகும். ED யில் ஏதோ ஒரு கருப்பு ஆடு இருக்கும்போல தெரிகிறது. ரெய்டு வருவதற்கு முன்பே வெளிநாடு சென்றால் எங்கிருந்தோ இவர்களுக்கு சமிக்ஞ வருகிறது.


chandrasekaran p.m.
மே 18, 2025 19:24

அசோக் குமார் சரணடைய ஒரு மாதத்துக்கு மேல் ஆனது. ரத்தீஷ் தப்பி ஓட்டம். அமலாக்கத் துறையில் கறுப்பு ஆடுகள் உள்ளதுபோல அமலாக்கத் துறைக்கு என தனியாக கண்காணிப்பு சேட்டிலைட் தேவை


Ramesh Ramanathan
மே 18, 2025 10:28

The entire gang and their heirs to be punished in such a way that they all must be in jail for ever.They must regret for theie unpardonable crimes for ever


Raj
மே 18, 2025 08:36

எப்படி ஜெ ஜெ மாதிரியா


Suresh Sivakumar
மே 18, 2025 05:08

Daridra munetra kazhgam should be decimated. All the family members should suffer until end of life


Gurumoorthy
மே 17, 2025 22:36

Nothing going to happen to anyone.


V Venkatachalam
மே 17, 2025 20:02

கட்டு மரம் ட்ரிப்பிள் குடும்பம் அடையாறு ஆலமரத்தை விட பெரியது பரந்து விரிந்தது.எம் ஆர் ராதாவுக்கு தன் பிள்ளைகளையே சரியா தெரியாதுன்னு படித்திருக்கிறேன். இவர்கள் கூட்டம் அவரை விட இன்னும் பெரிதாக இருக்கிறது. கொள்ளையடிக்க மட்டும் ஒண்ணாவே இருக்கானுங்க. நமக்கு இவனுங்கள ஞாபகம் வச்சிக்க முடியாது போல இருக்கே.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
மே 17, 2025 16:37

1. விசாரணைக்கு ஆஜாராக ரத்தீஸுக்கு E D சம்மன்.... 2. ரத்தீஸ் தலைமறைவு..... 3. இரண்டு வருடம் கழித்து ரித்தீஷ் நீதிமன்றத்தில் சரண்.... 4. சரணடைந்த அன்றே நீதிமன்றம் ரத்தீஸுக்கு ஜாமின்.... 5. டாஸ்மாக் M D விசாகனுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் மற்றும் ED விசாரணைக்கு தடை.... இதை தவிர வேறு ஏதாவது புதுமையாக நடந்து விடுமா....???


Kasimani Baskaran
மே 17, 2025 14:38

சின்னவருக்காக உயிரைக்கொடுக்க அறம் போல பலர் தயாராக இருக்கிறார்கல். ஆகவே அமலாக்கத்துறைக்கு தி.மதத்தினர் சிறிதும் பயப்பட மாட்டார்கள்.


Suppan
மே 17, 2025 13:07

இன்னொரு சாதிக் பாஷா ஆகாமல் இருந்தால் சரி