உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெற்றி தோல்வி மாறி,மாறி வரும்: இ.பி.எஸ்.

வெற்றி தோல்வி மாறி,மாறி வரும்: இ.பி.எஸ்.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: ‛‛ விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சுதந்திரமாக நடக்காது. இதனால் தான் அங்கு போட்டியிடவில்லை'', என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.மதுரையில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலின் போது, 36 இடங்களில் மக்களை பட்டியில் அடைத்து வைத்தனர். அங்கு, ஜனநாயக படுகொலை நடைபெற்றது. மாநில அரசுக்கு, தேர்தல் ஆணையம், போலீஸ், அரசு அதிகாரிகள் துணை நிற்கின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=c6dwn3wl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சுதந்திரமாக நடக்காது என கருதியதால் தான் , அங்கு அதிமுக போட்டியிடவில்லை. அங்கு பணத்தை வாரி இறைப்பார்கள். பரிசு பொருட்கள் அள்ளி கொடுப்பார்கள். அமைச்சர்கள் பூத் வாரியாக பிரித்து பண மழை பொழியும். சுதந்திரமாக தேர்தல் நடக்காது. லோக்சபா தேர்தலில், விக்கிரவாண்டியில் அதிமுக 6 ஆயிரம் ஓட்டுகள் குறைவாக பெற்றது. லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தல் வேறு வேறு. மக்கள் இரண்டையும் பிரித்து பார்த்து சிந்தித்து ஓட்டுப் போடுவார்கள். 2014 ல் 9 தொகுதிகளில் 3ம் இடம் பிடித்தது. 2 தொகுதிகளில் திமுக டெபாசிட் இழந்தது.வெற்றி தோல்வி மாறி மாறி வரும். 2026ல் அதிமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். இவ்வாறு இபிஎஸ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Ramesh Sargam
ஜூன் 16, 2024 18:24

ஆனால் அதிமுக இனி தலை நிமிர்ந்து வரமுடியாது. அதிமுகவை அழித்த பெருமை உங்களுக்கும், அந்த பன்னீருக்கும் சேரும்.


Kadaparai Mani
ஜூன் 16, 2024 18:10

AIADMK is the largest political party in the state even this minute.


Kadaparai Mani
ஜூன் 16, 2024 17:46

AIADMK is the largest political party in the state of tamil nadu even this minute.


J.V. Iyer
ஜூன் 16, 2024 17:10

ஆனால் அதிமுகவுக்கு தோல்விமேல் படுதோல்வியாக மாறி மாறி வருகிறது.. இதை எப்போது இவர் உணருவார்? கண்ணைத் திறந்து பாருங்கள் இன்னும் அம்மாவின் காலடியில் நீங்கள் இல்லை.


Senthoora
ஜூன் 16, 2024 17:54

தோலிவியடைந்தாலும், போராடி தோக்கணும். டெபாசிட் இழக்கக்கூடாது. ஜெயலலிதா ஆத்மா சும்மாவிடாது.


mindum vasantham
ஜூன் 16, 2024 14:12

எனக்கு தெரிந்து ஒடிஷாவை சேர்ந்த பாண்டியன் அவர்களை அதிமுக தலைவராக்கலாம்


ராமச்சந்திரன்
ஜூன் 16, 2024 13:50

வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்தால் பரவாயில்லையே! தோல்வியே தொடர்ந்நு வந்தால்….?


Svs Yaadum oore
ஜூன் 16, 2024 13:24

விடியல் என்னமோ தமிழ் நாடு என்னமோ முன்னேறிய மாநிலம் , ஐரோப்பா மாநிலம் படித்த மாநிலம் இந்தியாவுக்கே சோறு போடும் மாநிலம் என்று அளந்து விட்றானுங்க ….ஆனால் இந்த திராவிடனுங்க எல்லாம் ஆளும் கட்சி பணத்தை வாரி இறைப்பார்கள். பரிசு பொருட்கள் அள்ளி கொடுப்பார்கள். அமைச்சர்கள் பூத் வாரியாக பிரித்து பண மழை பொழியும் பாத்திரம் தேய்ப்பார்கள் அண்டா குண்டான் கொலுசு கொடுப்பார்கள் மக்களை பட்டியில் அடைத்து வைப்பார்கள் என்று படு கேவலமாக பேசுகிறார்கள் ...


பேசும் தமிழன்
ஜூன் 16, 2024 13:04

பங்காளி கட்சி திமுக.... தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று தான்.. நீங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறுகிறார்களே.. அது உண்மையா ??? ஓ... தனக்கு இரண்டு கண்கள் போனாலும் பரவாயில்லை.. ஆனால் எதிரிக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும்... அப்படி தானே.... நீங்கள் திமுக B டீம் ஆகி ரொம்ப நாட்கள் ஆகி விட்டது.


முருகன்
ஜூன் 16, 2024 13:01

உங்கள் கட்சிக்கு மட்டும் தொடர்ந்து வருவது ஏன்


பேசும் தமிழன்
ஜூன் 16, 2024 13:00

ஆனால் உங்களுக்கு... தொடர்ந்து 10 தேர்தல்களில் தோல்வி மட்டுமெ கிடைப்பது ஏன்?... மக்கள் உங்கள் பின்னால் இல்லை போல் தெரிகிறது.... அதிமுக கட்சி ஆட்கள் கூட உங்களை ஏற்றுக் கொள்ள வில்லை போல் தெரிகிறது.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை