உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அயலக தமிழர் தின விருதுகள் பரிந்துரைக்கு அழைப்பு

அயலக தமிழர் தின விருதுகள் பரிந்துரைக்கு அழைப்பு

சென்னை:அயலக தமிழர் தின விருதுகள் பெற தகுதி உள்ளவர்களை பரிந்துரை செய்வதற்கு, அயலக தமிழர் நலத்துறை அழைப்பு விடுத்துள்ளது.அதன் அறிக்கை:தமிழக அரசு சார்பில், ஆண்டுதோறும் ஜன., 12ம் தேதி, அயலக தமிழர் தினமாக கொண்டாடப்படுகிறது. நான்காம் ஆண்டு அயலக தமிழர் தினம், 2025 ஜன., 11, 12ம் தேதிகளில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், 'எத்திசையும் தமிழணங்கே' என்ற கருப்பொருளில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கொண்டாடப்பட உள்ளது. பல்வேறு தலைப்புகளில், விவாதங்கள், கலை நிகழ்ச்சிகள், கலந்துரையாடல்கள் மற்றும் சிறப்பு கண்காட்சிகள் நடைபெற உள்ளன.வெளிநாடுகளில் தமிழர்களின் வளர்ச்சிக்கு, பெரும் பங்காற்றிய தமிழருக்கு, 'தமிழ் மாமணி' விருது, 'வேர்களை தேடி' திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்படும் அயலக தமிழ் இளைஞருக்கு, 'சிறந்த பண்பாட்டு துாதுவர் விருது' மற்றும் கல்வி, சமூக மேம்பாடு, மகளிர், வணிகம், அறிவியல் தொழில்நுட்பம், மருத்துவம் ஆகிய ஆறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் தமிழர்களுக்கு, 'கணியன் பூங்குன்றனார் விருது'ம் வழங்கப்பட உள்ளன.வெளிநாடுகளில் சிறந்து விளங்கும் தமிழர்களை தேர்வு செய்ய, தமிழக அரசின் அயலக தமிழர் நலத்துறை வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விழாவில் பங்கேற்பது, விருதுக்கு தகுதியானவர்களை பரிந்துரைப்பது மற்றும் கூடுதல் விபரங்களுக்கு, அயலக தமிழர் நலத்துறையின் https://nrtamils.tn.gov.in/en/ இணையதளத்தை பார்க்கவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை