உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீதிமன்றங்களை கோவில் என சொல்வது ஆபத்து: தலைமை நீதிபதி

நீதிமன்றங்களை கோவில் என சொல்வது ஆபத்து: தலைமை நீதிபதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா :''நீதிமன்றங்களை மக்கள், கோவில் என்று சொல்வது, நீதிபதிகள் அதன் கடவுளாக நினைத்துக் கொள்ளும் பெரிய ஆபத்தை உருவாக்கி விடுகிறது,' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் குறிப்பிட்டார்.தேசிய நீதித்துறை அகாடெமியின் மண்டல மாநாடு, மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் நடந்தது. இதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பேசியதாவது:'யுவர் ஹானர், லார்ட்ஷிப், லேடிஷிப்' என்று நீதிபதிகளை குறிப்பிடுகின்றனர்.சில நேரங்களில் மக்கள் நீதிமன்றங்களை, நீதியின் கோவிலாக குறிப்பிடுகின்றனர். இது மிகப் பெரும் ஆபத்து. அப்படி பார்த்தால், நாங்கள் அந்தக் கோவிலின் கடவுள்களாக நினைத்துக் கொள்ளும் அபாயத்தை உருவாக்கிவிடும்.நீதிமன்றங்களும், நீதிபதிகளும், மக்ளுக்கு சேவையாற்றுகின்றனர். அவ்வாறு மக்களை சேவையாற்றுவதாக நினைக்கும்போது, பரிவு, பச்சாதாபம் உள்ளிட்டவற்றுடன் நீதிமன்றங்கள் வழக்கை பார்க்க முடியும். குற்றவாளியாக இருந்தாலும், தண்டனை வழங்கும்போது, மனிததன்மையுடன் கையாள வேண்டும். அவரும் ஒரு மனிதர்தானே என்ற எண்ணத்துடன் இருக்க வேண்டும்.அரசியலமைப்பு சட்டத்தின் மாண்பை நிலைநிறுத்தும் உயரிய கடமையுடன் இது இணைந்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

TSRSethu
ஜூலை 03, 2024 08:24

நீதி மன்றம் - வழக்கு மன்றம் நீதி அரசர் - வழக்கு நடுவர் நீதி - தீர்ப்பு என சரியான வார்த்தைகளை பயன்படுத்துவதே சரி


அப்புசாமி
ஜூன் 30, 2024 08:39

நீதிமன்றங்களில் வாய்தா தவிர நீதி, தர்மம் லாம் கிடைப்பதில்லைன்னு மக்களுக்கு தெரியுது யுவர் ஆபர்... மம்தாவுக்குத்தான் தெரியலை.


மோகனசுந்தரம்
ஜூன் 30, 2024 07:25

உண்மையை ஒத்துக் கொண்டதற்கு நன்றி.


Rpalnivelu
ஜூன் 30, 2024 00:11

எங்களை நாங்களே நியமித்துக் கொள்வோம். எனவே நாங்களும் வாரிசுக் கட்சிக்காரர்களை போலதான்


sankaranarayanan
ஜூன் 29, 2024 23:43

அப்போ இவர்களை நீதி அரசர்கள் என்பதும் தவறுதானே தும்பை விட்டுவிட்டு இவர் வாலைப்பிடிக்கிறார்


Maheesh
ஜூன் 29, 2024 23:23

குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு தற்காலிகமாக தண்டனை அனுபவிப்பதில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தெய்வமாக இருந்தால் அவருக்கு கொடுக்க வேண்டிய பதவியை கட்டாயம் கொடு என்று சொல்லுமா?


Anantharaman Srinivasan
ஜூன் 29, 2024 23:13

இந்த காலத்தில் நீதிமன்றங்களில் எந்த ஒரு வழக்கையும் விரைந்து முடிக்க முடிவதில்லை. சிறுசிறு வழக்குககள் கூட 15 வருடங்களுக்கு மேல் இழுத்தடிக்கிறது. எந்த நீதிபதியும் பதவியிலிருக்கும் போது அதுபற்றி பேசுவதில்லை. ரிடையர்ராகும் போது பிரிவு உபசார விழாவில் தான் அங்கலாய்கிறார்கள். எனவே. யாரும் கோவிலாக கருதமாட்டார்கள்.


Barakat Ali
ஜூன் 29, 2024 22:44

நீதிமன்றங்களை கோவில் எனவும், நீதிபதிகளைக் கடவுள் எனவும் சொன்னால் இவருக்கு கூச்சமா இருக்கு போலிருக்கு ......


R. NAGARAJ THENI KALPAKKAM
ஜூன் 29, 2024 22:43

"குற்றவாளியாக இருந்தாலும், தண்டனை வழங்கும்போது, மனிததன்மையுடன் கையாள வேண்டும். அவரும் ஒரு மனிதர்தானே என்ற எண்ணத்துடன் இருக்க வேண்டும்" நாடு விளங்கிடும்


syed ghouse basha
ஜூன் 29, 2024 22:43

அப்போ மைலார்டு சொல்வதும் ஆபத்தா?


A Viswanathan
ஜூன் 30, 2024 07:03

நீதிமன்றங்கள் கோவில்கள்தான். ஆனால் நீதிபதிகள் ஒன்றும் கடவுள் இல்லை என்பதை அவர்கள் நினைவில்கொள்ள வேண்டும்


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ