உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சதி செயல்களை தடுக்க ரயில் பாதைகளில் கேமரா

சதி செயல்களை தடுக்க ரயில் பாதைகளில் கேமரா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: குற்றங்கள் மற்றும் சதி செயல்களை தடுக்க, ரயில் தண்டவாளம் அருகே, 'சிசிடிவி கேமரா' அமைக்கும் பணியை தெற்கு ரயில்வே துவக்கி உள்ளது.சமீப காலமாக, ரயில்கள் மீது கற்கள் வீசுவது, ரயில் பாதையில் கற்கள், டயர் வைப்பது, சிக்னலை உடைக்க முயற்சி போன்ற சதி வேலைகள் நடக்கின்றன. ரயில் பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்ய, ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வு செய்து, 50 இடங்களை தேர்வு செய்துள்ளது. அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

இதுகுறித்து, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியதாவது:

ரயில்களில் வழக்கமாக நடக்கும் திருட்டுகள், கடத்தல்களை தடுக்கும் வகையில், பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். சமீப காலமாக, ரயில் பாதைகளில் சிலர் சதி வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் நடந்த சம்பவங்களில், சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், பெரும்பாலானோர் போதை ஆசாமிகளாக இருந்தனர். ரயில்வே பாதுகாப்பு படை நடத்திய ரகசிய ஆய்வில், அதிக குற்றங்கள் நடக்கும், 50 இடங்களை தேர்வு செய்துள்ளோம். அங்கு ரயில் தண்டவாளம் அருகே, 'சிசிடிவி கேமரா' பொருத்த முடிவு செய்துள்ளோம். சென்னை பேசின்பிரிட்ஜ், கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, காட்பாடி, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, விழுப்புரம், திருவாரூர், மயிலாடுதுறை, திண்டுக்கல், காரைக்குடி; கேரளா மாநிலத்தில் திரூர், சொர்னுார் உள்ளிட்ட 50 இடங்களில், ரயில் தண்டவாளம் அருகே கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. தற்போது, பேசின்பிரிட்ஜ் சந்திப்பு அருகில், 10க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

மாயாரத்தான்
டிச 10, 2024 09:59

மயிலாடுதுறை யுமா, கேட்கவே எவ்வளவு பெருமையா இருக்கு!!! எப்படி இருந்த ஊர் இன்னைக்கு சிசிடிவி வைக்கிற அளவுக்கு போய்ட்டு!!! வேதனை!!!


MUTHU
டிச 10, 2024 09:19

பிரிட்டிஷ் காலத்தில் புதிதாக தண்டவாளங்கள் அமைத்த பொழுது அவர்கள் மேல் கோபத்தில் உள்ளவர்களும், சமூக விரோதிகளும், குசும்பு செய்பவர்களும் தண்டவாளங்களில் இதை போன்ற சேட்டைகள் செய்தனர். ஆங்கிலேயர்கள் சந்தேகப்படுபவனை மட்டும் பிடித்து செல்லவில்லை. கண்ணில் படும் எவனையாவது பிடித்து சென்று விடுவார்கள். மற்றும் அவனுக்கு குரல் கொடுக்கும் உடன் சேர்ந்த எல்லாரையும் பிடித்து சென்று போலீஸ் செல்லில் வைத்தே கும்முதல் செய்து வெளியில் விட்டு விடுவார்கள். அவர்கள் அனைவரும் நடைப்பிணமாய் சுமார் ஆறு மாதங்களில் செத்து விடுவார்கள். அதனைப் பார்த்தே மற்றவர்கள் இதை போன்ற சம்பவம் செய்வது குறைந்தது.


முருகன்
டிச 10, 2024 07:37

சாரியான முடிவு


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 10, 2024 11:33

சரியான முடிவுதான். ஆனால், அதே நேரம் எந்தெந்த ஊர்களில் என்று இடங்களின் என்ற விபரத்தை வெளியிட்டு இருக்கவேண்டாம் என்று நினைக்கிறேன். குற்றம் புரிபவர்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயரக்கூடும்.


முக்கிய வீடியோ