உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோயம்பேடு பஸ் நிலையத்தில் லுலு மால் அமைக்க முடிவா?

கோயம்பேடு பஸ் நிலையத்தில் லுலு மால் அமைக்க முடிவா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை கோயம்பேட்டில், புறநகர் பஸ் நிலையம் இருந்த இடத்தில், 'லுலு மால்' வருவதாக பரவும் தகவல் வதந்தி என, அரசு விளக்கம் அளித்துள்ளது. சென்னை கோயம்பேட்டில், சி.எம்.பி.டி., எனப்படும் புறநகர் பஸ் நிலையம் செயல்பட்டு வந்தது. வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில், புதிய பஸ் நிலையம் கட்டப்பட்ட நிலையில், அனைத்து பஸ் சேவைகளும் மாற்றப்பட்டன. இதையடுத்து, கோயம்பேட்டில் லுலு மால் என்ற தனியார் நிறுவன வணிக வளாகம் அமைக்கப்பட உள்ளதாக, தகவல் பரவியது. இதை, வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி மறுத்தார்,இதன்பின், தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழுவின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தை காலி செய்துவிட்டு, அந்த இடத்தை லுலு மால் அமைப்பதற்கு, தமிழக அரசு தரப்போவதாக பலரும் வதந்தி பரப்புகின்றனர். அடிப்படை ஆதாரம் ஏதுமற்ற, இந்த பொய் தகவலை உண்மை என்று நம்பி, சில அரசியல் கட்சியினரும், தனி நபர்களும் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். இதுகுறித்து, வீட்டுவசதி துறை செயலர் சமயமூர்த்தியிடம் கேட்டபோது, 'இத்தகவல் முற்றிலும் தவறானது, சித்தரிக்கப்பட்டது' என்று தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ