உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்கள் பணத்தை ஊதாரித்தனமாக செலவழிக்கலாமா?: இ.பி.எஸ்., கேள்வி

மக்கள் பணத்தை ஊதாரித்தனமாக செலவழிக்கலாமா?: இ.பி.எஸ்., கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இடைப்பாடி: ''மக்கள் பணத்தை ஊதாரித்தனமாக செலவழிப்பதை ஏற்க முடியாது,'' என, இடைப்பாடியில் எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., பேசினார்.சேலம் மாவட்டம் இடைப்பாடி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், 68.85 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டடம், சிறு குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. அதேபோல் ராஜ்யசபா எம்.பி., சந்திரசேகரன் தொகுதி மேம்பாட்டு நிதியில், கான்கிரீட் சாலை போடப்பட்டது. மொத்தம், 72.85 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டங்களை, எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., இடைப்பாடியில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது: தமிழகத்தில் தற்போது ஒட்டுமொத்தமாக சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. தாராளமாக புழங்கும், 'போதை' பொருட்களை, மாணவர்கள் பயன்படுத்தும் நிலை உள்ளது. இதை தடுக்க, பலமுறை அரசுக்கு தெரிவித்துவிட்டேன். சட்டசபையிலும் பேசிவிட்டேன். இந்த அரசு மெத்தனப்போக்காக உள்ளது. தலைநகரின் மையப்பகுதியில் மருத்துவமனை, ரயில்வே ஸ்டேஷன், தலைமை செயலகம், துறைமுகம் உள்ளன. போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியில் கார் பந்தயம் நடத்த வேண்டுமா என, இந்த அரசு சிந்தித்து பார்க்க வேண்டும். எப்படி எல்லாம் நம் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. இது கண்டிக்கத்தக்கது. மக்கள் பணத்தை ஊதாரித்தனமாக செலவழிப்பதை ஏற்க முடியாது. சேலத்தில் சீர்மிகு நகர திட்டம் கொண்டு வந்தோம். அங்கு ஸ்டாலின், அவரது தந்தைக்கு சிலை வைத்து திறந்தார். சிலை வையுங்கள். திட்டங்களையும் நிறைவேற்றுங்கள். தமிழகத்தில் அரிசி விலை ஏறி கிலோ, 80 ரூபாய்க்கு விற்கிறது. இந்த ஆட்சி வந்த பின் கடும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. வீட்டு வரியை, 100 சதவீதம் ஏற்றிவிட்டார்கள். குடிநீர் வரியும் உயர்த்தியாச்சு. வரி போடாதது என ஏதும் கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

மோகனசுந்தரம்
ஆக 12, 2024 05:50

நீ மட்டும் என்ன செய்தாய். நீர் நல்லது செய்து இருந்தால் தானே நீ பேசுவதற்கு அருகதை உள்ளது. நீ வாயை மற்றதையும் மூடிக் கொண்டு போவது தான் உனக்கு நல்லது.


Kasimani Baskaran
ஆக 12, 2024 05:34

திராவிடனை முன்னேற்ற பிறந்தவர்கள் இவர்கள். தமிழனெல்லாம் இவர்களுக்கு ஓட்டுப்போட மட்டுமே தேவை.


R Kay
ஆக 12, 2024 02:43

எதிர்க்கட்சி வரிசையில் அமரும்போது எல்லா அரசியல்வியாதிகளுக்கும் மக்கள் மேல் அக்கறை வருவதும், முதலைக்கண்ணீர் வடிப்பதும் இயல்புதான். ஆட்சியில் இருந்தபோது நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள எல்லா சமரசங்களும் செய்துகொண்டவர்தான் இவர். சக அமைச்சர்கள் ஊழலில் முங்கி திளைத்தபோது கண், காது, வாயை மூடி அமைதிகாத்தவர்தான் இவர்.


முருகன்
ஆக 11, 2024 21:04

தமிழகத்தில் மட்டும் அரிசி விலை உயர்வு என்ன ஒரு கண்டுபிடிப்பு


Anantharaman Srinivasan
ஆக 11, 2024 20:38

திராவிடம் என்பதே பொய்யடா .. மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது தான் குறிகோளடா.


theruvasagan
ஆக 11, 2024 20:38

பானை சட்டியைப் பார்த்து சொன்னதாம் நீ ஏன் இவ்வளவு கருப்பா இருக்கே என்று.


S. Narayanan
ஆக 11, 2024 20:25

திராவிட அரசுகள் இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை. ஒன்னுக்கும் உதவாத ஒதவாக்கர வேலை வெட்டி இல்லா ஜென்மங்கள். மத்திய அரசு கொடுக்கும் பல நிதிகள் மட்டும் மானியங்களை ஒழுங்காக செலவழிக்காமல் சுயநலமாக மக்கள் வரி பணத்தை கார் பந்தயம் நடத்துவதை மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதற்கு அவர்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்


கல்யாணராமன்
ஆக 11, 2024 18:28

அப்பன் வெட்டிய ஆழ் துளை கிணற்றை மூடாமல் விட்ட அவன் குழந்தை மாண்டு போனதற்கு ஒரு வாரம் அரசு இயந்திரங்களை அங்கேயே இருக்க செய்து அப்பனுக்கு அரசு வேலை ரூ 20 லட்சம் இழப்பீடு கொடுத்து அரசு பணத்தை வீண் அடுத்தவர் அல்லவா எடப்பாடி.


Pandi Muni
ஆக 11, 2024 18:53

திராவிட திருடர்கள் அனைவருமே ஒழிக்கப்படவேண்டியவர்களே கள்ள சாராயம் குடிச்சி செத்தப்பயலுக குடும்பங்களுக்கு தலா 10 லட்சம்னு கொடுக்கும் இந்த முட்டாளின் அரசு மட்டும் என்ன உயர்வா?


Barakat Ali
ஆக 11, 2024 19:33

எடப்பாடியும் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்று வந்தார் ..... என்ன முதலீட்டை கொண்டுவந்தாரோ தெரியாது ....... இப்படி அவரும் மக்கள் பணத்தில் மஞ்சக்குளிச்சவர்தான் .......


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ